Header Ads



பௌத்த பிக்குகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் எவருக்கும் கிடையாது - எல்லாவல மேதானந்த தேரர்

(Gtn) பௌத்த பிக்குகளை கட்டுப்படுத்தும் சட்ட அதிகாரம் எவருக்கும் கிடையாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

பௌத்த பிக்கு ஒருவர் ஒழுக்க விதிகளுக்கு முரணான வகையில் செயற்பட்டால் அவரை மாநாயக்க தேரர்கள் கட்டுப்படுத்த முடியும் எனவும், அவ்வாறு மாநாயக்க தேரர்களின் அறிவுரையை பௌத்த பிக்கு செவிசாய்க்கத் தவறினால் செய்வதற்கு எதுவுமில்லை என அவர் சுட்டிக்காட்யுள்ளார்.

எனினும் ஒரு சில பௌத்த பிக்குகளின் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த பௌத்த பிக்கு சமூதாயத்தையுமே பாதிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

வரலாற்று காலம் முதல் தேசத்தின் சுய மரியாதையை உறுதி செய்ய பௌத்த பிக்குகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத இல்லாதொழிப்பிற்கு பௌத்த பிக்குகள் முக்கிய பங்களிப்பினை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையிலும் தொடர்ச்சியாக நாட்டுக்கு எதிரான சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. Islaatthai patriyum holy Quran patriyum pesa ungal evarukkum arugadhai kidayaadhu ...

    ReplyDelete
  2. முதலில் ஜாதிக ஹெல உறுமய என்பது பெளத்த நன்மைக்காக உருவாக்க்ப்பட்ட இயக்கம் என்பதைவிட நாட்டில் குழப்பங்களை உருவாக்க பிறந்ததே என்பதுதான் உண்மை.

    மகா நாயக்கவின் அறிவுரையை பிக்குகள் செவிசாய்க்க தவறினால் செய்வதற்கு ஒன்றுமில்லையென்றால் மகா நாயக்க எதற்கு??????

    சமகாலத்தில் விசேடமாக பெளத்த பிக்குகளினால்தான் நாட்டுக்கு கழங்கம் என்பதில் பெளத்தர்களுக்கு சந்தேகமில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்த அண்மைக்காலங்களில் நடந்த சம்பவங்களே சாட்சி.

    ஒட்டுமொத்தமாக பெளத்த பிக்குகள் சிலர் என்பதைத்தாண்டி தற்போது அதிகப்படியானவரகள் நாட்டில் சட்டங்களையும் மீறி யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று எண்னி பலவகையிலும் குற்றங்களை செய்து வருகின்றார்கள். இதை நிறுத்தாவிடில் இலங்கை எதிர்காலத்தில் பாரியதொரு தாக்கத்தினை முகம்கொடுக்கவேண்டிவரும்.

    தமிழர்களோ, கிறிஸ்தவர்களோ, அல்லது முஸ்லிம்களோ ஒருபோதும் பிரச்சினைகளை விரும்பாதபோது சில பெளத்த பிக்குகளின் அடாவ்டித்தனங்களாலும் வீண்பிரச்சினைகளாலும் இன்று நாட்டில் மதங்களுக்கிடையில் பாரிய பிரச்சினைகள் உருவாகின்றன.

    இதை அரசாங்கமோ அல்லது மகா நயக்கர்களோ கண்டும் காணமல் இருக்கின்றார்களோ புரியவில்லை.

    இதில் மேற்கோள் காட்டக்கூடிய விடயம் என்னவென்றால் “ மகானாயகர்களின் வார்த்தைக்கு பிக்குக்ள் செவிசாக்க வில்லையென்றால் ஒன்றும் செய்யமுடியாது” எனும் கருத்துப்பதம்
    தற்போதைய காலகட்டத்திற்கு பொருந்தாது.

    ReplyDelete
  3. That is carract ok original boudda terar conroling maha naayakar duplicut tera((same gnanasara )Who controling this teras action police and high court.ok

    ReplyDelete
  4. இவனெல்லாம்..................

    ReplyDelete

Powered by Blogger.