தேவாலயங்கள் மீது தாக்குதல் நடாத்த சதி - பாதுகாப்பு அமைச்சு
தேவாலயங்கள் மீது தாக்குதல் நடாத்த சதி முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவாக பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்மைக்காலமாக முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் போன்றே கிறிஸ்தவ சமூகம் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட சில தரப்பினர் சூழ்ச்சி செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
சில பௌத்த பிக்குகளுடன் இணைந்து இந்த சதி முயற்சி திட்டமிடப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு வெளிநாட்டு கடும்போக்குவாத சக்திகளே இந்த சதி முயற்சியின் பின்னணியில் செயற்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.
கிறிஸ்தவ மக்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடாத்தும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட சில பௌத்த பிக்குகளிடம் போலியான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுத்கம பிரதேசத்தில் இடம்பெற்றது போது கிறிஸ்தவர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் குழப்பங்களை விளைவிக்க முயற்சிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் விசாரணை நடாத்தி , பிரச்சினைகள் ஏற்படுவதனை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. gtn
.jpg)
அததானே இன்று பார்கிறோம் நமது நாட்டின் பாதுகாப்புட்துறை அமைச்சின் இணையத்தளத்தில் வெளினாட்டு பிரதமர் பற்றி வந்த செய்தியின் பின்விழைவை.
ReplyDeleteஇந்த கொடுமைகளுக்கெல்லாம் முடிவு எப்பவருமோ??