Header Ads



தத்தமது மதங்களை பதுகாத்துக்கொள்ள இராவண பலயவின் சட்டமூலம்

முன்னர் வழங்கிய 5 கோரிக்கைகள் தொடர்பில் இராவண பலய அமைப்பின் இணைப்பாளர் ஹித்தாகந்தே சத்தாதிஸ்ச தேரர் உள்ளிட்ட குழுவினருக்கும், பிரதி புத்த சாசன அமைச்சர் எம் கே டி எஸ் குணவர்தன ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

சுமார் 2 மணி நேரம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஹித்தாகந்தே சத்தாதிஸ்ச தேரர், பௌத்த மதத்திற்கு அடிப்படையில் பாதிப்பை ஏற்படும் விடயங்களை பாதுகாப்பது தொடர்பான சட்ட மூலத்தை கொண்டு வருவது குறித்து இதன் போது பேசப்பட்டதாக குறிப்பிட்டார்.

அதன் மூலம் அனைத்து மதங்களுக்கும் நன்மை இருக்கின்றது. அதனூடாக தத்தமது மதங்களை பதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.