டுபாயில் இவருக்கு அனுமதியில்லை..!
ஜெர்மனி நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருபவர் ரோல்ஃப் பச்ஹோல்ஸ்(53).
வேடிக்கை பேர்வழியான இவர், தனது காது, மூக்குகளில் துளையிட்டு சிலவகை ஆபரணங்களை அணிய ஆரம்பித்தார். இந்த ஸ்டைலுக்கு நண்பர்களிடமிருந்து பெருத்த வரவேற்பு கிடத்தது.
இதனால், குஷியாகிப் போன பச்ஹோல்ஸ், அங்கிங்கெனாதபடி, தனது உடலின் எல்லா பாகங்களிலும் துளையிட்டு அசத்தலான டிசைன்களிலான ஆபரணங்களை மாட்டிக் கொண்டு ஆபரண ‘ஷோ ரூமாக’ நடமாட தொடங்கினார்.
இதன்மூலம், தலையில் இரண்டு கொம்புகள் உள்பட, உடலின் பல பகுதிகளில் 453 துளைகளை இட்டுக்கொண்ட நபர் என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரராக கடந்த 2012 இவர் அங்கீகரிக்கப்பட்டார்.
இதனையடுத்து, உலகம் முழுவதிலும் இவருக்கென ரசிகர் பட்டாளமும் உருவாகத் தொடங்கியது.
அவ்வப்போது, உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து தனது ரசிகர்களை மகிழ்வித்து வந்த பச்ஹோல்ஸ்-ஐ துபாய்க்கு வரவழைத்து ஒரு நிகழ்ச்சி நடத்த சிலர் ஏற்பாடு செய்தனர்.
இதனையடுத்து, நிகழ்ச்சிக்காக துபாய்க்கு வந்த ரோல்ஃப் பச்ஹோல்ஸ்-ஐ விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்திய அந்நாட்டின் குடியுரிமைத் துறை அதிகாரிகள், அவரை உடனடியாக இஸ்தான்புல் நாட்டுக்கு செல்லும் விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
’அரபு நாடுகளில் ஒன்றான துபாய் என்னை திருப்பி அனுப்பியதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால், என்ன காரணத்துக்காக எனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது? என்பதை அவர்கள் தெரிவிக்காததுதான் வருத்தம் அளிக்கிறது.
ஒருவேளை என்னை சூனியக்காரன் என்று நினைத்து விட்டார்களோ.., என்னவோ..?’ என்று புலம்பும் ரோல்ஃப் பச்ஹோல்ஸ்-சின் உடமைகள் கூட துபாய் விமான நிலையத்தில் கிடப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுதான் சரியான ஒழுங்கான முறையானதொரு லூசு. அதில இந்த லூசுக்கு ரசிகர் லூசுங்க வேற. என்ன கொடுமையாப்பா இது.
ReplyDelete