நான் இறந்ததாக நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்...!
மொழிபெயர்ப்புக்கவிதை
நான் இறந்ததாக நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்
எனக்காக வடிக்கும் உங்கள் கண்ணீர் அர்த்தமற்றது
உறுதிபடவே இதைச்சொல்கிறேன்
இந்த வாழ்க்கையில் எந்தப்பயனுமேயில்லை
என்பதை எப்போது நீங்கள் புரிந்துகொள்வீர்கள்?
எனது வாழ்விலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள்
நிர்க்கதியான ஒரு அநாதையாக
நான் எப்படிக் கொல்லப்பட்டேன் என்பதை
ஒரு போதும் மறந்து விடாதீர்கள்..
இப்போது நான் சுவர்க்கத்தில் நிம்மதியுற்றிருக்கிறேன்
குடிக்க நீருமின்றி, உண்ண உணவுமின்றி
என் தேசத்தவர்கள் அல்லலுருகிறார்கள்
என் குடும்பத்தவர்கள்
இரத்த ஆற்றில் நீந்திக்கொண்டிருக்கிறார்கள்
நீங்கள் வடிக்கின்ற கண்ணீர்த்துளிகளை
அவர்களுக்குச்சமர்ப்பியுங்கள்
நான் இறந்ததாக நீங்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம்
எனக்காக நீங்கள் வடிக்கும் உங்கள் கண்ணீர் அர்த்தமற்றது
கவிதை :- சகிய்யா பேகம்
மொழிபெயர்ப்பு :- நிந்தவூர் ஷிப்லி

Post a Comment