Header Ads



இஸ்லாம் குறித்து அச்சப்படும் HSBC வங்கி - பிரிட்டனில் பள்ளிவாசல்களின் கணக்குகள் இரத்து

உலகின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான, எச்.எஸ்.பி.சி., பிரிட்டனில், ஏராளமான முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் கணக்குகளை ரத்து செய்துள்ளது.

பிரிட்டன் தலைநகர் லண்டனை தலைமையகமாகக் கொண்டு, உலகம் முழுவதும், பல ஆயிரம் கிளைகளைக் கொண்டுள்ள, 'ஹாங்காங் அண்ட் ஷாங்காய் பாங்கிங் கார்ப்பரேஷன்' எனப்படும், எச்.எஸ்.பி.சி., வங்கி, பிரிட்டனில் உள்ள பல மசூதிகள், முஸ்லிம் பிரபலங்களின் கணக்குகளை ரத்து செய்து, பணத்தை திருப்பி வாங்கிச் செல்லுமாறு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்த முஸ்லிம் அமைப்புகளுக்கு, அந்த வங்கி எழுதியுள்ள கடிதத்தில், 'எச்.எஸ்.பி.சி., வங்கி, தன் வாடிக்கையாளர்களின் மதம், இனம் போன்றவற்றை பார்ப்பது இல்லை; வாடிக்கையாளரைத் தான் பார்க்கிறது. எனினும், தவிர்க்க முடியாத சில காரணங்களால், உங்கள் வங்கிக் கணக்கை, எங்களுடன் தொடர முடியாத நிலையில் உள்ளோம்' என, தெரிவித்துள்ளது.

மலண்டனின் மிகப் பெரிய மசூதியான, பின்ஸ்பரி பார்க் மசூதியின் கணக்கு முடிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து, அந்த மசூதியின் தலைவர், காலித் ஒமர் கூறியதாவது:

இது, அந்த வங்கியின், இஸ்லாம் மதம் மீதான பயத்தைக் காட்டுகிறது. எங்கள் மசூதியின் தலைவராக, 2005 வரை இருந்த அபு ஹம்சா, பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளதால், எதற்கு வீண் வம்பு என நினைத்து, எங்கள் கணக்கை அந்த வங்கி ரத்து செய்திருக்கலாம் என, நினைக்கிறோம். பயங்கரவாதத்திற்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை என்பதை தெளிவுபடுத்த நாங்கள் எவ்வளவோ முயன்று வருகிறோம். எனினும், எங்களின் கணக்கை, எச்.எஸ்.பி.சி., வங்கி ரத்து செய்து உள்ளது வருத்தத்தை அளிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.