Header Ads



இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் ஏற்படக்கூடிய அபாயம் - ரவூப் ஹக்கீம்

இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பௌத்த கடும்போக்குவாதிகளின் நடவடிக்கைகளினால் இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் தலைதூக்கக் கூடிய அபாயம் நிலவுகின்றது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பௌத்த கடும்போக்குவாதிகளின் குரோத உணர்வைத் தூண்டும் உரைகள் நடவடிக்கைகள், முஸ்லிம் தீவிரவாதம் உருவாக்கி அது தேசிய பாதுகாப்பிற்கு சவாலாக அமையக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் இடம்பெற்ற வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் அரசாங்கத்தை விட்டு விலகுமாறு ஆதாரவாளர்கள் அழுத்தம் கொடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு ஊடகவியலாளர்களைச் சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சமூகத்தின் மீது பௌத்த கடும்போக்காளர்கள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்கப்படாவிட்டால் முஸ்லிம்கள் கடும்போக்குவாதம் நோக்கி நகரக் கூடிய அபாயம் நிலவி வருகின்றது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை வாழ் முஸ்லிம்கள் பெரும்பான்மை இன சமூகமான பௌத்தர்களுடன் பல நூற்றாண்டுகளாக சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். gtn

3 comments:

  1. எங்கேயோ தப்பு நடந்திருக்கின்றது.
    மிகவும் ஆபத்தானதொரு தகவல்.
    நம்பத்தகாதது.

    ReplyDelete
  2. றஊப் ஹகீமுக்கு பைத்தியம் முற்றிவிட்டது

    ReplyDelete
  3. இலங்கை முஸ்லீம்களுக்கு குரல் கொடுக்கக் கூடிய கட்சியாம் இவரமு முஸ்லீம் காங்கிரஸ் கட்சி..... அதன் தலைவர்தான் இவர். ஆனால் பாராளுமன்றத்தில் அழுத்கம தர்கா டவுன் தாக்கப்பட்ட விடயம் சம்பந்தமான விவாதத்தில் அமைதிகாத்தார். 'வாழ்க எமது தலைவர்கள்'

    ReplyDelete

Powered by Blogger.