Header Ads



அளுத்கம சம்பவத்தின் பின்னணியில் ஆளும் கட்சியின் அரசியல்வாதிகள் - JVP

கடும்போக்காளர்களின் இரையாகி விடக் கூடாது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. மதவாத இனவாத முரண்பாடுகளை களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லவில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் ரில்வின் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.

இனவாத முரண்பாடுகளை களைந்து மக்களின் நலன் மற்றும் தேசிய ஐக்கியத்தை மேம்படுத்த புத்திஜீவிகள் மதத் தலைவர்கள் அணி திரள வேண்டும். அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகளில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது கடும்போக்குவாதிகளினால் தூண்டப்பட்ட நெருப்பாகும்.

இதனை தற்போது அவர்களினாலேயே அணைக்க முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது. பிரச்சினையை தூண்டுவோருக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பு காணப்படுகின்றமை பொலிஸார் அறிந்ததொன்றே. ஆளும் கட்சியின் அரசியல்வாதிகள் சம்பவத்தின் பின்னணியில் இயங்குகின்றனர்.

இதுவே பாதுகாப்புப் படையினருக்கு தடையாக அமைந்துள்ளது. ஆளும் கட்சி அரசியல்வாதிகள் அரசியல் மற்றும் வர்த்தக நோக்கில் உருவாக்கிய முரண்பாடுகளினால் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.


1 comment:

  1. தற்போது நாட்டை ஆள்வது கொள்ளைகாரன் குடும்பம் அதுதான் பிரச்சினை. காடையனின் ஆட்சி என்பது நீருபனமாகிவிட்டது. அல்லாஹ் இந்த கொடும் பாவிகளுக்கு நாசத்தை உண்டாக்க பள்ளிவாசல்களை உடைக்க உருதுணையாக இருந்த இக்காபிர்களின் இருப்புக்கு அல்லாஹ் உரிய பதிலை கொடுக்க அனைவரும் பிரார்த்திப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.