தவ்ஹீத் ஜமாத்தின் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்
அளுத்கமை, பேருவளை இன வன்முறையினை கருத்திற் கொண்டு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அவசர செயற் குழு இன்று (18.06.2014) அமைப்பின் தலைவர் ஆர்.எம், ரியாழ் தலைமையில் மாளிகாவத்தையில் அமைந்துள்ள தலைமையகத்தில் காலை 10.00 மணிக்கு கூட்டப் பட்டது.
இச்செயற் குழுவில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன சுத்திகரிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராயப் பட்டதோடு, முஸ்லிம் சமுதாய பேரியக்கம் என்ற வகையில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அடுத்த நகர்வு எதுவாக அமைய வேண்டும் என்பது குறித்தும் செயற் குழு அங்கத்தவர்களுடன் கலந்துரையாடப் பட்டது.
இச்செயற் குழுவில் கீழ் காணும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
1. முஸ்லிம்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்தும் விதமாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து, இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றிணைத்து எதிர் வரும் 23.06.2014 அன்று பி.ப.1.00 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையம் முன்பாக மாபெரும் வாழ்வுரிமை போராட்டத்தினை நடாத்துதல்.
2. பெரும்பான்மை சமுதாயத்தின் மத்தியில் சிறுபான்மை இனங்கள் குறித்து இனவாத எண்ணக் கருக்களை விதைக்கும் பொது பல சேனா என்ற இனவாத அமைப்பை இரசு உடனடியாக தடை செய்தல் வேண்டும்.
3. இனவாதத்தை இலங்கைக்குள் தூண்டி அப்பாவி முஸ்லிம்களை பெரும் பான்மை சமுதாயம் தாக்குவதற்கு காரணமான பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞான சார தேரரை உடனடியாக கைது செய்வதோடு, இனக்கலவரத்தை தூண்டியமைக்காக அதி உச்ச கட்ட தண்டனையினை நீதி மன்றம் ஊடாக பெற்றுக் கொடுக்குமாறு அரசை வலியுறுத்துகின்றோம்.
4. அளுத்கமை, பேருவளை உள்ளிட்ட பகுதிகளில் யாரெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களோ அவர்களை அரசு தாமதமின்ற கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதோடு, பக்கச் சார்பின்றி உரிய தண்டனையினை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
5. இனவாத தாக்குதல்களுக்கு உட்பட்ட பிரதேசங்கள் மற்றும் முறுகல் நிலை நீடிக்கும் பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பாதுகாப்புப் பிரிவினர் தங்கள் பாதுகாப்பை அதிகப் படுத்த வேண்டும்.
6. பாதிக்கப்பட்டு நற்றாட்டில் நிற்கும் முஸ்லிம்களுக்கு அவர்கள் அடைந்துள்ள முழுமையான இழப்புகளுக்கான நஷ்டயீட்டுத் தொகையினை காலதாமதமின்றி வழங்குவதற்கு அரசு ஆவண செய்தல் வேண்டும்.
7. கலவரத்தால் பாதிக்கப்பட்டு பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ள மக்களுக்கான நிவாரணப் பணி உதவிகளை அரசு உடனடியாக முன்னின்று செய்தல் வேண்டும்.
8. கலவரத்தால் பாதிக்கப்பட்ட வியாபார ஸ்தலங்கள், வீடுகள், பள்ளிவாசல்கள் என்பன அரசினால் காலதாமதமின்றி புணர் நிர்மானம் செய்து கொடுக்கப்படல் வேண்டும்.

நீ நீயாகவே இருந்தால் சமூகம் தானாகவே திருந்திவிடும்..!
ReplyDelete