Header Ads



பாராளுமன்றத்தில் 'ஜப்னா முஸ்லிம் இணையத்தளம்' குறித்து மங்கள சமரவீர உரை..!

(இலங்கையில் ஜப்னா முஸ்லிம் தடை செய்யப்பட்டுள்ளமை வாசகர்கள் அறிந்ததே. எமது இணையம் மீதான தடையை நீக்க சில முஸ்லிம் அரசியல்வாதிகள் முயன்றும் அதில் தோற்றுப்போயினர். மேலும் சில அரசியல்வாதிகள் தடைய நீக்க முயலுவதாகவும், கைமாறாக தமக்கு உதவ வேண்டுமென்றும் கூறினர். நாங்கள் அதற்கு உடன்பட மறுத்தோம். சில முஸ்லிம் அமைப்புக்கள் இலங்கையில் ஜப்னா முஸ்லிம் தடைசெய்யப்பட்டமை குறித்து நவநீதம் பிள்ளையின் கவனத்திற்குகூட கொண்டு சென்றன. இருந்தபோதும் தடை தொடரவே செய்கிறது. 

இந்தவேளையில் ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் தொடர்ந்து இணைந்திருக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் நன்றிகள். எமக்காக பிரார்த்தித்த உள்ளங்கள், ஆறுதல் கூறியவர்களுக்கும் நன்றிகள். (பாராளுமன்றத்தில் ஜப்னா முஸ்லிம் இணையம் குறித்து உரையாற்றிய மங்கள சமரவீர எம்.பி.க்கும் சிறப்பு நன்றிகள்) இலங்கையில் ஜப்னா முஸ்லிம் இணையம் மீதான தடை நீக்கப்படுகிறதோ இல்லையோ இறை உதவியுடன் நாம் தொடர்ந்து இயங்குவோம்...! அல்லாஹ் நாடினால் அதை எவரும் தடுக்க முடியாது..!!

1...

பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் பாராளுமன்ற பிரவேசத்திற்காக காத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இணைய தள முடக்கம் தொடர்பில் பாராளுமன்றில் நடைபெற்ற ஒத்தி வைப்பு விவாதத்தில் பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் கோதபாய ராஜபக்ஷவிடம் பல்வேறு கேள்விக் கணைகளை தொடுக்க ஆவலுடன் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இணைய தளங்கள் முடக்கப்படுவதன் பின்னணியில் யார் செயற்பட்டு வருகின்றார் என்பது அனைவருக்கும் தெரிந்தது ஒன்றே அவர் குறிப்பிட்டுள்ளார். லங்காநியூஸ்வெப், லங்காஈநியூஸ், தமிழ்நெற், கொலம்போரெலிகிராப், தி இன்டிபென்டன்ட், ஜப்னா முஸ்லிம், ஸ்ரீலங்காமிரர் போன்ற இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்த காரணத்தினால் இவை முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முடக்கப்பட்ட இணைய தளங்கள் பயங்கரவாத இணையதளங்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இணைய தளங்கள் முடக்கப்பட்டமை தொடர்பில் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது குற்றம் சுமத்த முடியாது எனவும், அதனை விடவும் பலம்பொருந்தியவர்களே இதன் பின்னணியில் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2..

இணைய தளங்கள் முடக்கப்படுவதன் மூலம் மக்களின் தகவல் அறிந்து கொள்ளும் உரிமை மறுக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். எட்டு இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. சில இணைய தளங்களில் கடமையாற்றிய ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் அமுல்படுத்தப்படும் சட்டத்தின் அடிப்படையில் இணைய தளங்கள் முடக்கப்படவில்லை. தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் உத்தரவிற்கு அமைய இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இணைய தளங்கள் முடக்கப்பட்டதன் மூலம் மக்களின் தகவல் அறிந்து கொள்ளு உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இன்று தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது. மக்கள் தகவல்களை பெற்றுக்கொள்ள எடுக்கும் முயற்சிகளை தடுக்க முடியாது என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

3...

அவதூறு செய்யும் நோக்கில் செயற்பட்டு வரும் இணைய தளங்கள் தடை செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. தனிப்பட்ட நோக்கங்களுக்காக நபர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி அவதூறு செய்யும் இணைய தளங்களை தடை செய்ய வேண்டுமென ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இணைய தளங்களை தடை செய்யுமா என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாகரீகமான சமூகத்திற்கு இடையூறாக அமைந்துள்ள இணைய தளங்களை தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடாத்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சி உறுப்பினர்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படக் கூடிய வகையிலும் சில வேளைகளில் இணைய தளங்களில் தகவல் வெளியிடப்படக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

5 comments:

  1. well done Mr Mangala Samaraweera MP u done better than our Muslim Mp
    thanks

    ReplyDelete
  2. உண்மை, நடுநிலை தவறாம செய்தி சொல்லும் ஊடகங்கள் நாகரீகம் இல்லை என இவர்களுக்கு தெரிகிறது...! இதை தான் ஆசியாவின் அதிசயம் என சொல்கிறார் கெஹலிய..!

    ReplyDelete
  3. உங்களின் உண்மைத்தண்மைகளையே ஊடகங்கள் வெளியிடுகின்றன, அது உங்களுக்கு பிடிக்கவில்லையாயின், உங்கள் தாந்தோன்றி போக்கை மாற்றுங்கள். ஒரு ஊடகத்தை தடைசெய்யும் மிகமோசமான கேவலமான செயலைவிட, இந்த இனவாத அரசுகளுக்கு வேறு என்ன இருக்க முடியும்?

    பத்திரிகை சுதந்திரம்ற்ற நாடுகளின் உலகளவிலான பட்டியலில், இலங்கைக்கு 04ம் இடம் என்பது தெறிந்ததே. இவர்கள் செய்யும் ஊழல்கள் மக்களுக்கு தெறியக்கூடாது தெறிந்தால் அண்டவாளங்கள் தண்டவாளம் ஏறிவிடும் என்றே பயப்படுகிறார்கள்.

    அக்கிரமம், அனியாயம் தலக்கணம் பிடித்த ஆட்சியே இப்போதுள்ள இலங்கை ஆட்சி, இதனை எல்லோரும் உணர்ந்து சுயலாபமில்லாமல்,பொதுனலத்திற்காக ஒன்றுபட்டு இவ்வாட்ச்சியை மிக விரைவில் மாற்ற முன்வரவேண்டும்.

    ReplyDelete
  4. Inshallah very soon (after the election) jaffnamulim will be back normaly

    ReplyDelete
  5. Inshallah very soon (after the election) jaffnamulim will be back normaly

    ReplyDelete

Powered by Blogger.