Header Ads



இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவாக லண்டனில் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

(மீரா அலி ரஜாய்)

 தர்கா டவுன் , பேருவளை, அளுத்கமை, துந்துவை வெயங்கள போன்ற இடங்களில் ஏற்பட்டிருக்கின்ற இனவாத அசம்பாவிதங்களுக்கும் மற்றும் பேரினவாதிகளால் முஸ்லிம் வாலிபர்கள் கொலை செய்யப்பட்டமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமேருனின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு முன்பாக லண்டனின் பல பாகங்களில் இருத்தும் வருகை தந்திருந்த முஸ்லிம் மக்களால் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது . 

இலங்கையில்  தற்ப்பொழுது பொது பல சேன என்ற பௌத்த  அமைப்பால்  முஸ்லிம் மக்களுக்கெதிரான இனவாத செயற்பாடுகள்  நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதனால் இதனை சர்வதேச சமூகம் முன் வந்து இலங்கை அரசிடம்  தீர்வினை பெற்றுத்தருவதுடன் , நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் செய்யப்பட்டு அரசியல் யாப்பில் எழுதப்பட்டுள்ள  தங்களுடைய சமய , கலாச்சார விடயங்களை எந்தவிதமான தங்கு தடையின்றி நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுத்தல் வேண்டும் என்ற நிலையில் முஸ்லிம் மக்கள் காணப்படுகிறார்கள்.








1 comment:

  1. Good activities for muslim society and I appreciate your cooperation. Let Allah help

    ReplyDelete

Powered by Blogger.