அழுத்கம சம்பவத்திலிருந்து முஸ்லிம்கள் பெறவேண்டிய படிப்பினை..?
(MSM.Naseem)
பல்வேறுபட்ட காலப்பகுதிகளிலும் எமது முஸ்லிம் சமூகம் பல்வேறு வகையான அடக்குமுறைகளுக்கும், இனவெறித்தாக்குதல்களுக்கும், இனவாத செயற்பாடுகளுக்கும் உட்பட்டுவருவதை நாம் அவதானிக்கின்றோம். குறிப்பாக எமது இலங்கை தாய்நாட்டில் அன்மைக்காலமாக இவ்வாறான நிகழ்வுகள் அதிகரித்திருப்பதை கண்டுகொள்ளமுடியும். இதற்கு உதாரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பேரினவாதிகளால் பேருவல,அழுத்கம பகுதிகளில் நடத்தப்பட்ட இனவெறித்தாக்குதல்களை எடுத்துக்காட்டலாம்.
இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும்போது எமது முஸ்லிம்கள் ஆவேசப்பட்டு பொங்கி எழுந்து பாதைகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செயவதும், பின் சில நாட்களில் அதைமறந்துவிடுவதும், பின் மீண்டும் ஒரு பிரச்சினை எழும்போது மீண்டும் ஆவேசப்பட்டு அதேபோல் பாதைகளில் ஆர்ப்பாட்டம் செய்வதும், பின்னர் மறந்துவிடுவதுமென எமது செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் பிரச்சினைகள் முடிந்தபாடில்லை மாறாக நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றது.
இதற்கான காரணம் எங்களது எதிர்ப்பு நடவடிக்கைகளும்,கண்டனங்களும் வெறுமனே இவ்வாறான இஸ்லாமிய விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் வெளிப்படையான காரணிகளை மாத்திரம் மையப்படுத்தி காணப்படுகின்றமையாகும். எனவேதான் சில இஸ்லாமிய விரோதப்போக்கு கொண்ட தீய சக்திகள் மரைமுகமாக இருந்து தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகளை தூண்டியும், அதற்கு உதவியும் வருகின்றன. அந்தவகையில் இந்த பொதுபல சேனா இல்லாது போனால் இன்னும் இது போன்ற 1000 சேனாக்கள் இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்ள எதிர்காலத்தில் தோன்றலாம். எனவேதான் இந்த விடயத்தில் முஸ்லிம்களாகிய நாம் மிக்க கவனத்தோடும், நிதானத்தோடும் சிந்தித்து செயற்படவேண்டிய தேவையுள்ளது.
செய்யவேண்டியது என்ன?
'நாம் ஏன் விழுந்தோம் என்ற காரணத்தை அறியாமல் எழுந்து நடக்க முயற்சிப்போமானால் மீண்டும் மீண்டும் வீழ்ந்து மடிய வேண்டியதுதான்' என இமாம் கஸ்ஸாலி(ரஹ்) தனது 'இஹ்யாவுல் உழுமுத்தீன்' எனும் புத்தகத்தில் குறிப்பிடும் அம்சம் இங்கு மிக முக்கியமாக நம் கவணத்தில் கொள்ளப்பட வேண்டிய தேவையுள்ளது.
அந்தவகையில் முதலில் இந்தப்பிரச்சினைக்கான மூலக்காரணிகளை இனம்கான வேண்டும் அதாவது , இந்த நாசகரமான இனவெரிச் செயற்பாடுகளை தூண்டுகின்றவர்கள் யார்?
இதற்கு பின்னால் இருந்து மறைமுகமாக, வெளிப்படையாக இவற்றை வழி நடத்துகின்ற, இதற்கு உதவுகின்ற காழ்ப்புணர்ச்சி கொண்ட உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் எவை?
அவர்களின் இலக்குகள், திட்டங்கள் என்ன?
இவ்வாறான செயற்பாடுகளால் எமது சமூகத்துக்கு ஏற்படக்கூடிய இழப்புக்கள் எத்தகையவை?
போன்றவற்றை மிக நுணுக்கமாக ஆராய்ந்து சரியான உண்மைத்தகவல்களை பெற்று அதற்கான மாற்றுத்தீர்வுகளை நோக்கி எமது போராட்டத்தினை, செயற்பாடுகளை முன்னெடுக்க கூடியவர்களாக, சமூகத்தை வழி நடத்தக் கூடியவர்களாக நாம் மாறவேண்டும். அந்தவகையில் இவற்றை எவ்வாறு முறையடிக்கலாம்?, இதனால் எமது சமூகத்துக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புக்களை எவ்வாறு இல்லாது செய்யலாம் or குறைக்கலாம்?, இதற்கான முன் ஏற்பாடுகளை எவ்வாறு செய்வது?, இவ்வாறான வன்முறைகளை செயகின்ற, தூண்டுகின்ற, இதற்கு உதவுகின்ற விசமிகள் மீது அழுத்தங்களை பிரயோகித்து அவர்களை தடுப்பது எவ்வாறு?, எமக்கு ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு பல்வேறு தரப்பினருக்கும் தெரியும் வகையில் கொண்டு செலவது போன்ற பல்வேறு அம்சங்களை திட்டமிட்டுக் கொள்ளவேண்டும்.
அத்துடன் இந்த சம்பங்களுடன் தொடர்புடைய முஸ்லிம் விரோதப்போக்குடைய நாசகார சக்திகளுக்கு உரிய தண்டனகைளை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகனையும் மேற்கொள்ள வேண்டும்.
அப்போதுதான் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்திலும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளவதுடன், எமது சமூகத்துக்கு ஏற்படவிருக்கும் அழிவுகளிலிருந்தும் முன்னெச்சரிக்கையாக இருக்க முடியும்.
.jpg)
உண்மையான விடயமாக இருந்தாலும் இது உள்னாட்டில் நடப்பதால் அரசாங்கத்தால் கட்டுப்ப்டுத்த முடியாமல் போவதற்குரிய காரணம் என்ன? என்பது எமது கேள்வி. நமக்கு பதில் தரவேண்டியது அரசாங்கமே நாட்டு மக்கள் நிம்மதியாக இருக்கவேண்டும் என்று ஜனாதிபதி நினைத்தால் இதுபோன்ற விடயங்களெல்லாம் துச்சமே. ஆகவே ஜனாதிபதி வெறும் வாய்ப்பேச்சுடன் இருப்பதனால்தான் நாம் பிரச்சினை வெளினாட்டு சக்திகளால் தூண்டப்படுவதாக இருப்பினும் இந்த மெளனத்தின் அர்த்தம் தான் என்பதற்கு பதில் இக்கூட்டத்தை அடக்குதன் மூலமே கலையுமே தவிர வேறில்லை. ஆனால் கண்டிப்பாக இக்கட்டுரையில் கூறப்பட்ட விடயங்களை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கின்றேன்.
ReplyDeleteI believe in first every signal Muslim has to be educated “ how to live in minority Muslim country “ and
ReplyDeleteSecond “ how to obey our leaders among the Muslim community” we are still struggling for Moon Sight, forget about all small Issues and get unity among all the Jamath and respect Jamyathul Ulamah / Sura Council or those who are representing our Muslim community in our Nation in future, Third each Muslim has to be Reconcile our Thaqwa and Faith between ALLAH and us, We all are taking about HALAL how about HARAM Isssues many Muslims are doing Haram without any fear to Allah. We need to Turn our face to Allah May Allah Guide us the write path.
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பர்களே,,,,,,,,,
ReplyDeleteஇதை ஒரு ஆக்கமாக எழுதியவர் கூட ஒரு BBS ஆகவும் இருக்கக்கூடும்.
நீங்கள் கூர்ந்து கவணித்தால் அந்த BBS கொள்கைகளை விலங்கலாம். ஜனநாயக முறைபடி ஆர்பாட்டம் செய்வது தவராம்....அதில் எந்த பிரயோசனமுமில்லையாம்...ஒரு நாட்டில் நமக்கு இருக்கும் ஒரு பெறும் சக்தியே இந்த ஆர்பாட்டம் அதன் ழூலம் நம் கோரிக்கைகளை நம் நாட்டுக்கும் உலகுக்கும் வைக்ககூடியதாக உள்ளது. அதை சரியாக முறையாக நடத்துவதை பற்றி தான் இப்போது நாமெல்லாம் சிந்தித்து செயல்படி வேண்டும்.....ஆனால், இது போன்ற முட்டால் தனமான பதிவுகளை தயவு செய்து பதிய வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
முழு உலகமுமே அறிந்த விடையம் தான் BBS அறசாங்கத்தின் ஆதரவுடன் தன் பதவிகளை தக்க வைத்துக்கொள்ள தான் இவைகளை செய்தார்கள் இன்னும் செய்து வருவார்கள் என்று....ஆனால். இவருக்கோ இன்னும் இதை பற்றி ஒன்றும் தெரியாது போல்......இப்பதான் இவர்போன்றவர்கள் மிக நுணுக்கமாக அதை ஆராயப்போகிறாராம்.....
நாசகார சக்திகளுக்கு தண்டனையும் வாங்கி கொடுக்கப் போகிராராம்.... எப்போது இன்னும் 10 அல்லது 50 வருடங்களுக்கு அப்புறமா??????
இரண்டு வருடகாலமாக BBS செய்து வந்த அந்த செயல்களுக்கு ஒன்றுக்குமே வாய் திரக்காத அவைகளின் ஒன்றுக்குமே எதிர்த்து நிற்க்காத இந்த கோழைகள் இப்போது அவனுகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுப்பார்களாம்......இவர் அரசாங்கத்தின் கைகூழி என்பதை அனைவரும் அறிந்துக்கொள்ளுங்கள்.......
This is really true. We should have the strong forum that should cover all group of people. we need to plan, carefully design our agenda, forecast and watch our steps carefully. we can achieve our goal when we work unitedly. This is the urgent and welcome steps.
ReplyDeleteஇதில் நுணுக்கமாக ஆராய ஒன்றும் இல்லை.இஸ்லாத்தின் அபரிமிதமான வளர்ச்சியே மிக வலுவான காரணம்.இஸ்லாத்தின் வளர்ச்சியை இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.இவர்களின் எதிர்ப்பில் இஸ்லாம் வளர்கிறது என்பது இந்த முட்டாள்களுக்கு தெரியப்போவதும் இல்லை
ReplyDelete