Header Ads



ஞானசாரரைச் சந்தித்து முறைப்பாடு கொடுத்த முஸ்லிம்கள் யார்..?

(நஜீப் பின் கபூர்)

2012ல் இந்த நாட்டில் அறிமுகமான பொது பல சேனா, இந்த நாட்டின் முஸ்லிம்களின் நலனுக்காக செயற்படுகின்ற ஒரு இயக்கம், என்று இன்று இலங்கையில் வெளியாகும் முன்னணி தமிழ்வார ஏடான தினக்குரலுக்குக் கருத்துச் சொல்லி இருக்கின்றார் அந்த அமைப்பின் பேச்சாளர் டாக்டர் டிலந்த விதானகே .

தினக்குரல் வாரஏட்டிற்கு மேலும் கருத்துத் தெரிவித்த அதன் பேச்சாளர் பின்வருமாறு இந்த விடயத்தை விளக்குகின்றார். முஸ்லிம்கள் மத்தியில் ஆயுதக் குழுக்கள் இருக்கின்றது என்று 2008 ஆம் ஆண்டு ஏசியன் மிரர் இணையத் தளத்திற்குக் கருத்துக் கூறிய ஆளுநர் அலவி மௌலான முஸ்லிம் சமூகத்தில் சிலர் ஆயுததாரிகளாகச் செயலாற்றுகின்றனர். இது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது என்று சொல்லி இருந்தார். 

இதன் அடிப்படையில் சில இளைஞர்களை நாம் சந்தித்தோம். அத்துடன் சில சமயத்தளங்கள் குறிப்பாகப் பள்ளிவாசல்களில் இளைஞர்களின் சிந்தiiயை மாற்ற நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது என ஞானசாரரிடம் முஸ்லிம்கள் முறையிட்டனர். இவ்வளவு விபரங்களும் முஸ்லிம்களிடத்திலிருந்தே  பொது பல சேனாவுக்குக் கிடைத்தாலும். ஆரம்பத்தில் எதனையும் செய்யக் கூடாது என்று நாம் இருந்து விட்டோம். 

இப்போது இவற்றைத் தடுக்க நாம் முனைந்திருக்கின்றோம். எனவே அலவி மௌலானவும் அடுத்தவர்களும் பொது பல சேனா இடத்தில் கேட்டுக் கொண்டதனால்தான் இப்போது  களமிறங்கி காரியம் பார்க்கின்றேம், என்று குறிப்பிடுகின்றார்கள் பொது பலக் காரர்கள். எப்படி இருக்கின்றது காரியம், கதை?

எனவே முஸ்லிம்களிடத்தில் ஆயுதக் குழுக்கள் என்ற அபாண்டக் கதையின் துவக்கத்தை  அலவி மௌலன ஆரம்பித்து வைக்க, இப்போது முஸ்லிம்களின் நலனுக்காக நாம் இந்த அட்டகாசங்களை அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நாம் மேற் கொண்டு வருகின்றோம். என்று பொதுபல சேனா அமைப்பில் ஊடகப் பேச்சாளர் தெளிவாகச் சொல்லி இருக்கின்றார். 

இந்த ஊடகக் கருத்துத் தொடர்பாக முஸ்லிம் சமூகத்திற்குத் தெளிவான ஒரு பதிலை மௌலான அவர்கள் கொடுக்காவிட்டால் முஸ்லிம்கள் மீதான இந்த அட்காசங்களின் முக்கிய பாங்காளியாக இருந்ததற்கான பெறுப்பை   அவர் இன்மையிலும் மறுமையிலும் ஏற்க வேண்டி இருக்கும்.

மேலும் பொது பல சேனா அமைப்பு முஸ்லிம்களின் நலனுக்காக இப்போது காரியம் பார்ப்பதாக் சொல்லுகின்றது. அப்படியானால் முஸ்லிம்கள் மீதான நலன்கள் என்பது கொலை, சூறையாடல், தீ வைத்தால், மற்றும் கற்பனைச் சம்பவங்களைச் சோடித்து அதனை மையமாக வைத்து முஸ்லிம்களின் மீது கைவைத்தல் தானா என்றும் நாம் அவர்களைக் கேட்க விரும்புகின்றோம்.

இந்தக் கதையின் அடிப்படையில் சில இளைஞர்களை நாம் சந்தித்தோம். அத்துடன் சில சமயத்தளங்கள் குறிப்பாகப் பள்ளிவாசல்களில் இளைஞர்களின் சிந்தiனைகளை மாற்ற நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றது என ஞானசாரரிடம் முஸ்லிம்கள் முறையிட்டனர். என்று பேச்சாளர் குறிப்பிடுகின்ற விடயத்தில் ஞானசாரரிடத்தில் முறைப்பாடு கொடுத்த முஸ்லிம்கள் தான் இந்த தாக்குதலை நடத்தி இருக்கின்றார்கள் என்ற அறிவிப்பும் இன்னும் சில நாட்களில்  அறிவிக்கப்படக் கூடும். 

ஞானசாரரைச் சந்தித்து முறைப்பாடு கொடுத்த முஸ்லிம்கள் யார்? இதன் உண்மைத் தன்மை என்ன? இதனை ஜம்மியத்துல் உலமா சபை தேடிப்பார்த்தா? கதை கற்பனை என்றால் அதற்கு முஸ்லிம் சமூகம் ஏன் இன்று வரை பதில் கொடுக்க வில்லை?

எனவே பொது பல சேனாவிடத்தில் முஸ்லிம்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்கத்தான் இப்போது தாக்குதல் என்று நாம் நினைத்துக் கொள்வதா? 

இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்தின் தலைவிதி, தலைமைகள் தொடர்பாக இறைவனிடத்தில் முறையிடுவதா?

எல்லாவற்றிற்கும் நியாயங்கள் காரணங்கள்-சொல்லப்படுகின்றது. பிரதமர் கூட பாராளுமன்றத்தில்  முஸ்லிம்கள் கல்லெறிந்ததால் வன்முறை தாக்குதல் துவங்கியது என்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார். பொலிசும் இதனைத்தான் நிரூபிக்க முனைகின்றது. ஊடகங்கள் கூட உண்மையை சொல்ல பின்வாங்குகின்ற நிலையில். 

யா அல்லாஹ் கோடாறிக் காம்புகளிடத்திலிருந்தும் நயவஞ்சகர்களிடத்திலிருந்தும் நீ தான் முஸ்லிம் சமூகத்தைக் காப்பாற்ற வேண்டும். 

6 comments:

  1. முஸ்லிம்கள் தரப்பில் அவ்வாறானதொரு விடையம் இருந்தாலும், அதனை கேட்க இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? பாதுகாப்பு அமைச்சுக்கோ, புலனாய்வுத்துறைக்கோ இல்லாத அதிகாரத்தை கையில் எடுக்க இவர்கள் யார் ? BBS இனை பாதுகாக்க ஜாதிக ஹெல உறுமைய ஏன் போராடுகிறது? இவர்கள் பின்புலம் என்ன என்பதை தெரிந்தும், இவர்கள் கருத்தை வைத்து ஆராய வேண்டிய கடமைப்பாடு நமக்கில்லை, இவர்கள் நோக்கங்கள், செயற்பாடுகளை நோக்கி ஒரு தலைமையின் கீழ் அணி திரண்டால் இவர்களுக்கு நல்ல பாடம் கற்றுக்கொடுக்கலாம்

    ReplyDelete
  2. பலவீனமான் ஈமான்
    முஸ்லிம்களின் ஒற்றுமையின்மை,
    இரண்டு விடயங்களும்தான் முஸ்லிம்களின் சோதனைக்கான முக்கிய காரணம். இன்னும் ஒன்றும் கை நழுவி விடவில்லை. திருத்திக்கொள்ள இறுதிச்சந்தர்ப்பம் உள்ளது. நம்மை இறைவன் தவிர வேறு யாரும் சோதிக்க வில்லை அதேவேளை அவனைத்த்விர வேறு யாரும் நம்மை காப்பாற்றவும் முடியாது.

    ReplyDelete
  3. Dear Muslim brothers,
    Please try to work on below muslim gentlemen, then you will come to know more,
    1. Alavi Maula(na).
    2. Brother of Aasath saaly
    3. Media spokes person of NFF( Wimal WW) Muzammil.

    Its true ! May Allah knows the best.

    ReplyDelete
  4. இது உண்மையாகவும் இருக்கலாம்,இல்லாமலும் இருக்கலாம்.ஆனால் உண்மையாக இருக்க அதிக வாய்ப்புள்ளது, ஏனெனில், எம்மவரைப்பற்றி எமக்கு தெறியும்.

    பாரம்பரிய இஸ்லாத்தில் இருந்துகொண்டு கண்டதை எல்லாவற்றையும் மார்க்கமாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவர்கள் எம்மவர்,அதிலே கண்மூடித்தனமான பின்பற்றல்கள் மிக அதிகமுள்ளது.

    இலங்கை முஸ்லிம் சமுகத்தின் பிரதினிதிகள் என்றும்,அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்களை இதுவரைக்கும் வழிதவர விட்டிருக்கும் அன்பர்களான அ.இ.ஜ.உ.ச.யினரே இதற்கான முழுப்பொருப்பையும் ஏற்கவேண்டும்.

    ஒற்றுமை எனும் கயிற்றை பிடிக்கும் வ்அரைக்கும் நீங்கள் வழிதவரமாட்டீர்கள் என்ர நபிமொழியில் வரும் கயிறு எது?இறைவேதமும் தூதரின் வாழ்க்கை முறையும்,ஆக இந்த இரண்டிலும் எத்தனை குழப்படிகளை எம்மவர் செய்கின்றனர்?

    ReplyDelete
  5. காபிர்களை உங்கள் நண்பர்கள் ஆக்கிக்கொள்ள வேண்டாம் என்ற நபி மொழியின் கருத்தை உதாசீனம் செய்து அநியாயக் காரர்களிடம் வழியும் சிலர் நம்மில் இருக்கத் தான் செய்கிறார்கள்.

    SLTJ இன் அணுகுமுறையில் நான் எந்த விதத்திலும் உடன் பாடு இல்லா விட்டாலும் எமக்குள் இருக்கும் பிரச்சினையை காபிர் முன்னிலையில் கொண்டு செல்வதே மிகப்பெரும் சமூக காடிக்கொடுப்பாக பார்கிறேன்.

    ReplyDelete
  6. BROTHER DONT TALK ABOUT ACJU.ARE YOU ALLERGY WITH ACJU??
    BE QUIT ABOUT ACJU,DONT BLAME ACJU AT ALL

    ReplyDelete

Powered by Blogger.