Header Ads



பாராளுமன்றத்தில் உரையாற்ற ரவூப் ஹக்கீமுக்கு அனுமதி மறுப்பு

(Tw)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமை கட்சித் தலைவராக கருத முடியாது என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் ஹக்கீமை கட்சித் தலைவராக கருத முடியாது. ரவூப் ஹக்கீமை சபாநாயகர் கட்சித் தலைவராக அங்கீகரிக்கவில்லை.

கட்சித் தலைவர்கள் பட்டியலிலும் சபாநாயகர், ஹக்கீமின் பெயரை உள்ளடக்கவில்லை.

எனவே விசேட உரையாற்றுவதற்கு இடமளிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

கட்சித் தலைவர் என்ற ரீதியில் நாடாளுமன்றில் உரையாற்ற அனுமதியளிக்குமாறு ஹக்கீம், பிரதி சபாநாயகரிடம் இன்று கோரியிருந்தார்.

இந்தக் கோரிக்கையை பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி நிராகரித்துள்ளார்.

நான்கு பெயர்கள் மட்டுமே கட்சி தலைவர்களாக உள்ளடக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. தேர்தலின்போது பொதுமக்களிடம் வீரவசனம் பேசும் இவருக்கு பாராளுமன்றத்தில் இப்படியொரு நிலை. 'தாராளமாக விலகிப்போகலாம்' என்று ஜனாதிபதி மஹிந்த (கலீபா) சொல்லியும் அதை தட்டிக்கழித்தவருக்கு இன்று இந்த நிலைமை.மக்களை ஏமாற்றும் இவர் போன்றவர்களுக்கு காலத்தின் பதில் இதுதான்.

    தலைவா... இனியாவது சிந்தித்து செயற்பட தொடங்குங்கள். அப்போதாவது மக்கள் உங்கள் பக்கம் நிச்சயம் இருப்பார்கள். நீங்கள் மக்களின் தேர்தல் வாக்குகளினால் அங்கீகரிக்கப்பட்டவர். அஸ்வர் போன்று 'போனஸ்' எம்பியாக பாராளுமன்றம் சென்றவரில்லையே. பொறுமைக்கும் எல்லை உண்டு அல்லவா.....!!

    ReplyDelete
  2. கட்சித்தலைவர் என்ற அந்தஸ்தில், இந்த ஹகீம் இதுவரைக்கும் இந்த நாடாளுமன்றில் பேசவில்லையா? இதுகூட இன்னும் தனக்கு தெரியாது என்று ஹகீம் கூறுவாரானால் அதுவே இந்த ஹகீம் முஸ்லிம் சமூக தலைவர் என்று சொல்லும் தகுதியைகூட இழக்கின்றவராக இருப்பார்.

    ReplyDelete
  3. imagine how our former leader MR,marhoom Asraf sir & how this rubbish Rauf hakeem , ( makkale ippa velankutha evenda kallathanam, evanukku enga mathippu irukku evana muslim kalin thalivan?

    ReplyDelete

Powered by Blogger.