''நாட்டில் மதங்களுக்கிடையே மோதல்கள் கிடையாது''
பாப்பரசர் புனித பிரான்ஸிஸ் இலங்கைக்கு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பௌத்த அமைப்புகளான பொதுபல சேனாவும், ராவணா சக்தி அமைப்பும் இலங்கையில் மத நல்லிணக்கம் இல்லையென பாப்பரசர் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்புக் கோர வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவிக்கையில்,
பாப்பரசர் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் மத நல்லிணக்கம் இலங்கையில் இல்லையெனத் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்புக் கோர வேண்டும். அதன் பின்னர்தான் இங்கு வரவேண்டும்.
எமது நாட்டில் மதங்களுக்கிடையே மோதல்கள் கிடையாது. பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து மதத்தினரும் இங்கு நல்லிணக்கத்துடனேயே வாழ்கின்றனர். மதங்களிடையே மோதல்கள் கிடையாது. ஒரு சில அடிப்படைவாத மதச் சக்திகளின் நடவடிக்கைகள் காரணமாகவே சிறு சிறு பிரச்சினைகள் தலைதூக்குகின்றனவே தவிர, முழு நாட்டிலும் மத நல்லிணக்கம் காணப்படுகிறது.
எனவே, இங்கு மத நல்லிணக்கம் இல்லையென்று கூறிய கருத்துகளுக்கு பாப்பரசர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
ராவணா சக்தி
பாப்பரசர் உலகம் மதிக்கும் ஒரு மதத்தலைவர். அவர் இங்கு வரலாம். ஆனால், எமது உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிடக்கூடாது. எமது நாடு தொடர்பில் கருத்துகளையும் வெளியிடக்கூடாது. இங்கு வரலாம், போகலாம். ஆனால், இலங்கையில் எந்தெந்த பிரதேசத்திற்கு பாப்பரசர் போக வேண்டும். யார் யாரை சந்திக்க வேண்டுமென்பதை அனைத்தையும் அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் இலங்கை தொடர்பிலான பிழையான கருத்துகளுக்கு அவர் இரையாகி விடுவாரென்றும் இராவணா சக்தியின் தலைவர் இத்தேகந்தே தம்மானந்த தேரர் தெரிவித்தார்.
.jpg)
நல்லாத்தான் பயப்படுரார்கள் ..இருக்கிறத இல்லைன்னு சொல்றார்கள் ..இல்லாதத இருக்குதுன்னு சொல்றார்கள் ...
ReplyDeleteThinking that we do not need help from other nations in developing the country.
ReplyDeleteThinking that... What ever we do bad.. No body in the world has right to point it out.
This is call arrogant action and jungle law and not respecting the right of other people.
If you do not listen to WORLD today... World will neglect not only you bads bad the Good people of this Sweetland too.
.
யார் வருவதென்றாலும் போவதென்றாலும்,என்ன பேசனும் பேசக்கூடாது என்பவற்றை இந்த மொட்டைகளே தீர்மானிக்க வேண்டும், தவிர சட்ட சபையோ,நீதிமன்றங்களோ,நிரேவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியோ தீர்மானிக்க முடியாது என்பதையே இது விளக்குகிறது.
ReplyDeleteஇலங்கை ஜனாதிபதி உற்பட நாட்டின் பெரும் பொருப்புக்களில் உள்ள அனைவரும் பாவாடைகள் அனிந்தே இனி பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என கேற்கிறோம்.
ஒரே கரத்தையில் கட்டப்பட வேண்டிய இரண்டு எருமைகள். முள்ளில்லாத நாக்கு தானே. வேண்டாத அட்டகாசமெல்லாம் புரிந்துவிட்டு அனைத்து மதத்தினரும் நல்லிணக்கத்துடனே வாழ்வதாக தௌ;ளத் தெளிவாக பொய்யுரைக்குக்கும் இவன்களை அல்லாஹ் ஈருலகிலும் தண்டிப்பானாக.
ReplyDelete