ரஜமஹா விகாரைக்கு முஸ்லிம் வர்த்தகர்களின் அன்பளிப்பு
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
சிங்கள முஸ்லிம் மதத்தவர்களிடையே இன நல்லுறவை பேணும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பினால் வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஒரு தொகுதி பணம் மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விகாரைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
மேற்படி மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பினால் அன்பளிப்பு செய்யப்பட்ட பணத்தை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு 12-05-2014 நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விகாரையில் இடம்பெற்றது.
இதன் போது வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஒரு தொகுதி பணம் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் தலைவர் தொழிலதிபர் கலீல் ஹாஜியாரினால் மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்னதேரரிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பு தமிழ்,முஸ்லிம்,சிங்கள மதத்தவர்களிடையே இன நல்லுறவை பேணும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Any Knowledgeable Ulama / Nalimi can comment on this action. is this acceptable in Islam? vasak is the birthday celebration of Bodha. Can Muslim support on there religious function? Social services as a human kind is it acceptable. please explain.
ReplyDeleteநீங்கள் எவ்வளவுக்கு கொடுக்கிறீர்களோ அவ்வளவுக்கு உங்களுக்கு வட்டியும் முதலும் சேர்த்து ஏதோ ஒரு பக்கத்தால் ஏதோ ஒரு வகையால் உங்களுக்கு இல்லையென்றாலும் உங்கள் சகோதரர்களுக்காவது கிடைத்துக்கொண்டே இருக்கும் என்பதே உண்மை.
ReplyDeleteகடமையான ஸகாத்தை கொடுக்க மாட்டார்கள்,சக முஸ்லிம் சகோதரர்கள் தேவையுடையவர்களாக இருக்கிறார்கள்,ஆனால் பயந்துகொண்டு இப்படி துவேசம் பார்க்கும் கூட்டதிற்கா செலவு செய்யனும்?
மதவேறுபாடின்றி சாதாரண ஒரு பௌத்த மனிதருக்கு கொடுங்கள்,அது அனுமதிக்கப்பட்டதும் மார்க்கத்தில் வரவேற்கப்பட்டதும்,ஏனெனில் பின்னாலுள்ள அழகிய செயலை மார்க்கம் எதிர்பார்க்கிறது,ஆனால் இவர்கள் எந்த வகையில்?
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையைவிட அதிகம் இஸ்லாத்தைப்பற்றி தெறிந்திருக்கிற சோபித தேரரே தானிருக்கும் நிலைமையால் இஸ்லாத்திற்கு வெளிப்படையாக ஏதும் சார்பாக நடந்துகொள்ள சங்கடப்படுகிறார் எங்கையில் எவர்கள் எங்கனம் முஸ்லிம் வர்த்தக முதலாலைமார்களே????
முஸ்லிம் சகோதரர்களே! நாம் எவ்வளவு தான் இப்போது பௌத்த மதத்தினருக்கு வாரி வழங்கினாலும் அவர்களை ஏமாற்றுவதற்காக வழங்குவதாகவே அவர்களில் அதிக பட்ச மக்கள் நினைக்கின்றனர். எனவே, இஸ்லாமிய வரையரைகளைப் பொருட்படுத்தாது மாற்று மதத்தினரின் பண்டிகைகள், கலாச்சாரங்கள், வணக்கத் தளங்களுக்கு வழங்குவது இஸ்லாமிய சட்ட ரீதியாக என்ன தீர்ப்பு என்பதை வழங்குவதற்கு முன்னால் உலமாக்களிடம் தீர விசாரித்துவிட்டு வழங்குங்கள். இது போன்ற அவர்களின் கலாச்சாரத்துக்காக அன்பளித்து அவர்களின் நல்லெண்ணத்தைப் பெற முடிந்தாலும் எமது ஈமானுக்கும், நாம் பின்பற்றும் இஸ்லாத்துக்கும் பங்கம் ஏற்படுமாயின் அதைத் தவிர்க்க வேண்டியது அவசியமே. எத்தனையோ வழிகள் இருக்கும்போது எமது முஸ்லிம்கள் ஏன் தான் இவ்வாறு நடந்துகொள்கின்றனரோ??? அவர்களில் ஏழைகள், மாணவ மாணவியர்கள், விதவைகள், அங்கவீனர்கள் என வாழ்க்கை வசதியற்றோர்களுக்கு தாராளமாக உதவுங்கள். அவர்களின் நல்லெண்ணம் கிடைக்காவிட்டாலும் நிச்சயமாக அல்லாஹ்விடம் நன்மையுள்ளது.
ReplyDeleteஎனவே, தவறான வழிகளில் வழங்கிய ஒவ்வொரு முஸ்லிம்களும் அல்லாஹ்விடம் உரிய முறையில் தௌபாச் செய்து மீண்டுவிடுங்கள். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடுங்கோ. இது கூட சரியாய் இப்போதiருகிற நிலைமைக்கு பொருந்துமா என்று தெரியாது. வேணும்னா உங்களுக்கு ஒரு பெயர் சில நாட்களுக்கு சிலரால் மட்டும் கிடைக்கும். பிறகு அவர்களும் சேர்ந்து நின்று மொட்டை அடிப்பார்கள். அதுதான் இப்பவும் நடக்கிறது. நம்மகிட்ட இருந்து எல்லாத்தையும் அனுபவிச்சவன்கத்தான் நமக்கு குழி வெட்டுரான்.
ReplyDeleteஇது மாதிரி உதவிகள பள்ளி வாசல்களுக்கு செய்யுங்கோ. குறிப்பா தம்புள்ள பள்ளிக்கு கொடுத்தா கூட நன்றியா இருப்பாங்க, மறுமையிலும் கூலி கிடைக்கும், மரணத்துக்கு பிறகும் நன்மை வந்து சேரும்.
இன நல்லுறவு, இன நல்லுறவு என போய் இது எங்க போய் முடியுமோ ?? முதலாவது இது போன்ற விடயங்களுக்கு பணத்தை செலவளிப்பதனை இஸ்லாம் அங்கீகரிக்கிரதா ?? மார்க்க அறிஞர்கள் இதனை சமூக தனவந்தர்களுக்கு குறிப்பாகவும், சமூகத்துக்கு பொதுவாகவும் அறியப்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்.. சமூகத்திலே எவ்வெவ் துறைகளுக்கெல்லாம் செலவழிக்க தேவை மிதமிஞ்சிய இக்காலப்பகுதியில் இத்தகவலை பார்க்கும் போது மனது வலிக்கறது... சிந்திப்போமாக...
ReplyDeleteThis is wrong and should not be called as religious harmony!!! We; Muslims should not involve with things that would encourage and promote anything by associating partners to almighty Allah. Its a sin. Certainly we can help non-Muslims in their wellbeing by providing shelter, health, wealth and education, etc ...
ReplyDelete“This is hypocrisy “ …