அமைச்சர் பசீலுக்கு நன்றி கூறுகிறோம்..!
(கே.சி.எம்.அஸ்ஹர்)
அமைச்சர் பசீல் ராஜபக்ஷ அவர்கள் வடமாகாண முஸ்லிம்களை மீள்குடியேற்றியே தீருவேன். இதையாராலும் தடுக்க முடியாது.என அண்மையில் அறிக்கை விடுத்துள்ளார்.இவரின் அறிக்கையால் வடபுல முஸ்லிம்களின் இதய வானில் நம்பிக்கை நட்சத்திரங்கள் உதித்து உள்ளன.முஸ்லிம்களோடு அன்றும்,இன்றும்,என்றும் நெருக்கமாக இருக்கும் அமைச்சர்களில் இவரும் ஒருவர்.இவர் வடமாகாண மீள்குடியேற்ற அணித்தலைவராக இருந்து கொண்டு.அமைச்சர் றிசாத் பதியுதீன் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது அவரோடு மிக நெருக்கமாகச் செயற்பட்டுள்ளார்.இவர்கள் இணைந்து தமிழ் மக்களையும் , குறிப்பிட்ட சில முஸ்லிம் ,சிங்களக் குடும்பங்களையும் குடியேற்றி உள்ளனர்.
அமைச்சர் றிசாத் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது வடக்கு விடுவிக்கப்படாமல் இருந்தமையால் முஸ்லிம்களை சுதந்திரமாக மீள்குடியேற்ற முடியாமல் போய் விட்டது.வடக்கு விடுவிக்கப்பட்ட போதும் மீள் குடியேற்ற அமைச்சு வேறு நபர்களின் கைகளுக்கு மாறிவிட்டது. வர்த்தகக் கைத்தொழில் அமைச்சராக இருந்து கொண்டு இம்மக்களை மீள் குடியேற்ற எடுக்கும் முயற்சிகளுக்கு பல இனவாதத் தடைகள் குறுக்கே நிற்பதைக் காணமுடிகிறது.அதற்கு பல உதாரணங்களைக் காட்டலாம். வடபுல முஸ்லிம்கள் பலவந்த வெளியேற்றத்தால் படும் அவஸ்தைகள் ,பிரச்சினைகள் யாவையும் தெட்டத்தெளிவாக பசீல் இராஜபகக்ஷ அவர்;கள் புரிந்து வைத்துள்ளார்.இதனாலேயே அவர் மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் அணுகுகின்றார்.
இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரகாரம் விரும்பிய மதத்தை பின்பற்றவும் சுதந்திரமாக வாழவும் உரிமையுண்டு ,இந்நாடு சிங்கள,முஸ்லிம்,தமிழ் மக்கள் அனைவருக்கும் சொந்தமானது.பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் அனைவரும் அமைச்சர் பசில் இராஜபக்ஷ அவர்களுக்கு தம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.ஏனைய அமைச்சர்களும் இம்மக்களின் பிரச்சினைகளை மனிதாபிமானக் கண்ணாடி ஊடாகவே நோக்க வேண்டும். மாறாக இனவாதக்கனண்ணாடியுனூடாக பார்த்து விடக்கூடாது.
யாம் அனைவரும் ஒரு நாட்டுப்பிரஜைகள் ஒரு தாய் மக்கள்
.jpg)
Post a Comment