Header Ads



தம்புள்ள பள்ளிவாசலைப் பாதுகாக்க அல்லாஹ்வுக்காக செயற்படுவேன் - பைசர் முஸ்தபா

தம்புள்ளை ஹைரிய்யா ஜும்ஆப் பள்ளிவாசலை அகற்றும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா இது தொடர்பில் தான் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர். தம்புள்ளை பொலிஸ் நிலையப் பொறுப் பதிகாரியினதும் கவனத்திற்குக் கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தார். நேற்று (08) வியாழக்கிழமை மாலை. தம்புள்ளைப் பள்ளி வாசலுக்குச் சென்று பள்ளிவாசல் நிர்வாகிகளையும் நம்பிக்கையாளர்க ளையும் சந்தித்துப் பேசுகையிலேயே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

அஹ்கம் உவைஸ், குருநாகல் மாநகர சபை உறுப்பினர் அப்துல் சத்தார். கலேவெல பிரதேச சபை உறுப்பினர் மொஹமட் மக்கீன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட நலன் விரும்பிகளும் இதில் கலந்துகொண்டனர். 

இச் சந்திப்பில் பிரதியமைச்சர் மேலும் இங்கு தெரிவித்ததாவது,

தம்புள்ள பள்ளிவாசல் பிரச்சினைக்கு நாம் ஏதாவது இறுதி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இப்பிரச்சினை தொடர்ந்தும் முற்றிக்கொண்டே போகிறது. இப்பிரச்சினைக்கு தகுந்த தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே நான் கொழும்பிலிருந்து வந்துள்ளேன். தம்புள்ளைப் பள்ளிவாசல் விடயமாக நான் ஜனாதிபதியுடன் பேசுவேன். ஏற்கனவேயும் பலமுறை இது தொடர்பாக ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டுள்ளேன்.

முஸ்லிம் சமுதாயத்துக்காக, ஒரு பள்ளிவாசலைப் பாதுகாக்கும் நோக்கில் அல்லாஹ்வுக்காக முன்னின்று செயற்படுவேன். இவ்வாறு பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

1 comment:

  1. சூதாட்டத்திற்கு பாராளுமன்றத்தில் 'ஹலால்' சான்றிதல் கொடுத்த இவர் பள்ளிவாசலைப் பாதுகாக்கப்போகிறாராம்.....????

    ReplyDelete

Powered by Blogger.