''காத்தான்குடிக்கு தனியான கல்வி வலயம் அமைக்கப்பட வேண்டும்''
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடிக்கான தனியான கல்வி வலயம் அமைக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய மூன்று கல்விக் கோட்டங்களை உள்ளடக்கியதாக கடந்த 2007ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது இவ்வலயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு இனங்களையும் பிரிக்கின்ற வகையில் ஆரம்பிக்கப்பட்டாலும் பல தடைகளைத்தாண்டி கடந்த மூன்று வருடங்களாக தேசிய ரீதியில் கல்விப் பெறுபேற்றில் கா- பொ தர சாதாரணப் பரீட்சையில் 1ம் இடத்தைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கே பெறுமையைத் தேடிக் கொடுத்துள்ளது.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் 71 பாடசாலைகள் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும் அதிகளவிலான 32 பாடசாலைகளையும், அதிகமான ஆசிரியர்களையும,; ஆகக் கூடுதலான எண்ணிக்கையிலான மாணவர்களையும் கொண்டது காத்தான்குடி கல்விக் கோட்டமாகும் தேசிய ரீதியில் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் முதலாம் இடத்தைப் பெறுவதற்கு காத்தான்குடி கல்விக் கோட்டத்தின் பாடசாலைகளும், அதிபர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் பாரிய பங்களிப்பைச் செய்துள்ளனர் என்பதை எவராலும் மறுக்க முடியாது
குறித்த மத்தி கல்வி வலயம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் காத்தான்குடிக் கல்விக் கோட்டத்திற்கான வலப்பங்கீடுகளில் பாரிய அநீதிகளை இழைத்து வருவதுடன் பாரபட்சத்துடன் நடாத்தி வருவததை சில ஆதரங்களுடன் சுட்டிக்காட்டியதுடன் காத்தான்குடிக்கான தனியான கல்வி வலயம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அன்று தொடக்கம் இன்று வரையும் தொடர்ச்சியாக வலியுருத்தி வருகின்றவன் நான் ஆனால் என்னால் அன்று முன்வைக்கப்பட்ட குறிப்பிட்ட கோரிக்கைக்கு காத்தான்குடி கல்விக் கோட்டத்தின் ஆசிரியர்கள் சங்கமும் கல்விக்குழுக்களும், ஏன் அரசியல் தலைமைகளும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பது கவலைக்குறியது இருந்த போதிலும் அதன் தேவையும் அவசியமும் இப்போது எமது கல்விக் கோட்டத்திற்கு ஏற்பட்டுள்ளது என்பதை மனச்சாட்சியுள்ள அதிபர்கள், ஆசியர்கள் மறுக்க மாட்டார்கள்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காரியாலயம் ஏறாவூரில் அமைக்கப்பட்டதற்கான காரணம் அதன் நிருவாக செயற்பாடுகளை இலகு படுத்துவதற்காவே என்பதை எவரும் மறக்கலாகாது ஆனால் இன்று குறித்த வலயக் கல்விக் காரியாலயம் தனியே ஏறாவூர் வலயக் கல்வி அலுவலகமாக மாற்றம் பெற்று வருவதோடு அதன் சில செயற்பாடுகள் ஏறாவூரின் மேலாதிக்கத்திற்குட்படுத்தப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
இவ்வாரான செயற்பாடுகளை சகிக்க முடியாத ஓட்டமாவடிக் கல்விக் கோட்டம் தனக்கானதொரு தனியான வலயக் கல்வி அலுவலகத்தை நிறுவுவதற்கு ஆலோசித்து வருகின்ற இக்காலப்பகுதியில் 32 பாடசாலைகளையும் அதிகளவிலான ஆசிரியர்களையும் மிகக் கூடுதலான எண்ணிக்கையிலான மாணவர்களையும் ஏனைய சகல வளங்களையும் உள்ளடக்கிய காத்தான்குடி கல்விக் கோட்டம் ஏன் தனியானதொரு வலயக் கல்வி அலுவலகத்தை பெற முடியாது.
குறித்த வலயக் கல்வி அலுவலகத்தின் முன்னால் வலயக் கல்விப் பணிப்பாளர் தனது சேவைக்காலத்தில் மிகவும் தந்திரமாக திட்டமிட்டு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தில் கடமையாற்றிய காத்தான்குடி, ஓட்டமாவடியைச் சேர்ந்த உத்தியோகத்தர்களை படிப்படியாக இடமாற்றம் செய்து குறித்த அலுவலகத்தை 99 சதவீதமாக ஏறாவூரின் மேலாதிக்கத்திற்குட்படுத்த திரைமறைவில் திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு அது பலனளிக்காமல் ஓய்வு பெற்றுதும் ஏறாவூறுக்கான மாகாண அமைச்சரின் வருகையின் பின்னர் அவ் நடவடிக்கை தற்போது வலுப்பெற்றதுடன் அலுவலகத்தில் ஏஞ்சியிருக்கும் காத்தான்குடியைச் சேர்ந்த ஒரு சிலரையும் இடமாற்றம் செய்து முழுமையாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தை தனது ஆதிக்கத்திற்குட்படுத்தி ஏறாவூரின் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கும் மிக பகீரத பிரயத்தனம் செய்து வருவவதையும் அவதானிக்க முடிகின்றது
மாகாண அமைச்சர் வலயக் கல்வி அலுவலகத்தின் நிருவாக செயற்பாடுகளை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து நிருவாக செயற்பாடுகளில் மூக்கை நுழைப்பதற்கு பல முறை முற்பட்ட போதிலும் அது கைகூடாத காரணத்தினால் மத்தி வலயக் கல்வி அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகளுக்கு சில அன்பளிப்புப் பொருட்களை வழங்கி அதன் மூலம் குறித்த கல்வி அலுவலகத்தின் அதிகாரிகளை தாஜா பன்னி தனது அரசியலை செய்ய முற்பட்ட சமயம் அவ் அன்பளிப்புப் பொருட்க்களை கல்வி அலுவலகத்தின் சில முக்கிய அதிகாரிகள் ஏற்க்க மறுத்தார்கள் என்ற காரணத்தினால் அவர்களை உடனடியாக இடமாற்றம் செய்து அதற்கும் குறித்த பிரதேச அதிகாரிகளை நியமிக்க மிகவும் உன்னிப்போடு செயற்பட்டு வருகின்றதையும் அறிய முடிகின்றது
இவ்வாரான மாகாண அமைச்சரின் செயற்பாடுகள் காத்தான்குடிக்கான தனியானதொரு வலயக் கல்வி வலயத்தின் அவசியத்தை மேலும் அதிகரித்துள்ளதுடன் எனது தனி வலயக் கோரிக்கைக்கும் வலுசேர்பதாகவும் அமைந்துள்ளது எனவே காத்தான்குடி கல்விக் கோட்டத்தின் ஆசிரியர்கள் சங்கம் இச்சந்தர்ப்பத்தை மிகவும் சாதாகமாகப் பயன்படுத்தி காத்தான்குடிக்கான தனியானதொரு வலயக் கல்வி அலுவலகத்தை பெற்றுக் கொள்வதற்கு சிறந்ததொரு தீர்மாணத்தினை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

Post a Comment