மர்ஹும் ஏ. சி.எஸ் ஹமீத்தை பிரதமராக்க முயற்சித்தர்ர்கள் - ரவுப் ஹக்கீம்
(அஸ்ரப் ஏ சமத்)
தொழிற்சங்கவாதியான காலம் சென்ற ஏ. அஸீஸின் 24வது நினைவு தினத்தில் அவர் பற்றிய நினைவுப் பேருரை இன்று சனிக்கிழமை (10)ம் திகதி காலை 10.00 மணிக்கு கொழும்பு 08 ல் செடேக் கேட்போர் மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் றவுப் ஹக்கீம் கலந்து கொண்டார். சிரேஸ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ச விதாரண, மேல்மாகண சபை உறுப்பினர் மனோ கனேசன், தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் ஆகியோறும கலந்து கொண்டு ஏ. அஸீஸ் பற்றியும் தற்கால அரசியல் நிலவரங்கள் பற்றியும் பேசினார்கள்.
இந் நிகழ்வு முஸ்லீம் கவுன்சிலின் தலைவர் என்.எம். அமீன், தலைமையில் நடைபெற்றது.
இங்கு உரையாற்றிய அமைச்சர் ரவுப் ஹக்கீம் - இந்த நாட்டில் தமிழரோ அல்லது முஸ்லீமோ பொதுவேற்பாளராக போடடியிட்டு ஜனாதிபதியாக வருவதென்பது முடியாத காரியம.; சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியின்போது காலம்சென்ற லக்ஸ்மன் கதிர்காமர் கூட பிரதமராகக்குவதற்கு ஜே.வி.பி முன்மொழிந்தது. அதேபோன்றுதான் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பதவிக் காலத்தில் அவருடன் நெருங்கி பணியாற்றிய அமைச்சர் ஏ. சி.எஸ் ஹமீட்டைக்கூட பிரதமராகக்குவதற்கு முயற்சித்தர்ர்கள். ஆனால் அதனைக் கூட பெரும்பாண்மைச் சமுகம் சிறுபாண்மையினரை பிரதமர் பதவியில் கூட அமர்த்துவதற்கு தயார் இல்லை. ஆனால் முஸ்லீம் சமுகத்தில் இருந்து சபாநாயகர் பதவி மட்டும் இருந்தார்கள.; ஆனால் கடந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாச ஆட்சிக் காலத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை அந்த சபாநாயகரால்; ஏற்றுக்கொண்டதால் இனியும் முஸ்லீம் சமுகத்திற்கு சபாநாயகர் பதவி கூட தருவதற்கு முடியாமல் சிந்திக்கின்றதொரு காலகட்டத்தில்தான் நாம் இருக்கின்றோம். ஆகவேதான் பொதுவேற்பாளர் தமிழர் ஒருவர் பெரும்பாண்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று பொதுவேற்பாளராக வருவதென்பது முடியாத காரியமாகும்.
மறைந்த அமைச்சர் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்களின் காலகட்டத்தில தமிழ்தேசிய கூட்டமைப்பின் அப்போதைய தலைவர் மு.சிவசிதம்பரத்துடன் பல்வேறு பிரச்சினைகள் நாம் ஒரு மேசையில் இருந்து அலசி ஆராய்ந்துள்ளோம்.
மறைந்த தலைவர் அசீஸ் அவர்கள் தமிழ் பேசும் மலையக தொழிற்சமுகத்தின் தலைவராக அவர் ஆங்கில பாசை மட்டுமே தெரிந்தவர். அவர் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாற்றி தொழிற்சங்க மக்களை ஒன்று திரட்டியதொரு தலைவர். 1960 களில் சகல தொழிற்சங்களையும் ஒற்றுமைபடுத்தியவர். ஜீ.ஜீ பொண்னம்பலத்துடன் பல உடன்படிக்கை கைச்சாத்திட்டார். அவர் 50 க்கு 50 என்ற தீர்வை முன்வைத்தார். மலையக மக்களின் குடியுரிமை இலங்கையில் இருந்த மலைய மக்களின் பிரச்சினைகளை அடிக்கடி இந்தியாவுககுச சென்று ஜவர்கால் நேறுவிடம் பேசினார்.
வடக்கில் Nதிசிய நிகழ்வுகளில் தேசிய கீதத்தை தமிழில் பாடுவதையே சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்ற பெரும்பாண்மைச் சமுகத்தில் மத்தியில் வாழுகின்றோம். அண்மையில் வடக்கில் பிரதம நீதியரசர் உடன் நான் கலந்து கொண்ட நிகழ்வில் தமிழும் சிங்களமொழிகள் கலந்து தேசிய கீதத்தை பாடுகின்றனர். அரசியலமைப்பின் படி தமது தெரிந்த மொழியில் தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். காரணம் பாதுகாப்பு இரானுவத்தினர் அதனை நோக்குகின்றனர். துணிந்து தமிழ் பாடுவதற்கு முன்வரவில்லை. எனவும் அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

Post a Comment