Header Ads



லண்டனில் போராடவுள்ள இலங்கை முஸ்லிம்களுக்கு வாழ்த்துக்களும், எச்சரிக்கையும்..!

(நஜீப் பின் கபூர்)

உலக சனத் தெகையில் 31.5 வீதம் கிருஸ்தவர்கள். 23.2 வீதம் முஸ்லிம்கள்  என்று மிகப் பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி உலகில் 210 கோடி கிருஸ்தவர்கள் 165 கோடி முஸ்லிம்கள். உலகில் முஸ்லிம்கள் இல்லாத நாடுகள் எதுவுமே கிடையாது என்ற வகையில் அவர்கள் உலகில் பெரிய சிறிய தொகையில் பரந்து வாழ்கின்றனர். அந்த வகையில் இலங்கை மொத்த சனத் தொகையில் 2 கோடி அதில் 9.72 வீதம் பேர் முஸ்லிம்கள். (பத்தில் ஒருவர்) இவர்களை இலங்கை முஸ்லிம்கள், இந்திய முஸ்லிம்கள். மலே முஸ்லிம்கள், என்று அடையாளப்படுத்துகின்றனர்.

1915 ல் முஸ்லிம்களுக்கு எதிரான மிகப் பெரிய கலவரமொன்று இந்த நாட்டடில் பிரித்தானியா ஆட்சிக் காலத்தில் நடந்திருக்கின்றது. 100 வருடங்கள் கழிந்த இன்று, 1915 கலவரச் சூழ்நிலையொன்று உருவாக்கப்பட்டு வருகின்றது இது பற்றி இந்த www.jaffnamuslim.com இணையத்தளத்தில் ஒரு கட்டுரையில் முன்பு விவரமாகச் சொல்லி இருந்தோம். இன்று முஸ்லிம்களுக்கு எதிரான கலவரச் சூழ் நிலையைத் தோற்றுவிப்பதில் சர்வதேச முஸ்லிம் விரோத ஏஜெண்டுகளும் அதன் உள்ளூர் முகவர்களும் களத்தில் இருக்கின்றனர் என்பது எமது மதிப்பீடு.

எனவே இன்று மிகவும் நெருக்கடியான கால கட்டத்தில் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் இருந்து வருகின்றது. இதிலுள்ள துரதிஸ்ட நிகழ்வு என்னவென்றால் இது விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு எதையுமே கண்டு கொள்ளாமல் இருக்கின்றது. எனவே முஸ்லிம் சமூகம் இந்த விவகாரத்தை விரும்பியோ விரும்பாமாலோ சர்வதேச மயப்படுத்த வேண்டி தேவை அதனால் ஏற்பட்டு இருக்கின்றது. 

என்மைப் பொறுத்தவரை இவ்வாறான நடவடிக்கைகளில் முஸ்லிம்கள் என்றோ முயற்சிகளைச் செய்திருக்க வேண்டும். பொறுப்பு வாய்தவர்கள் ஊமைகளாக இருக்கின்ற போது சர்வதேச நாடுகளில் வாழ்கின்ற இலங்கை முஸ்லிம்கள் கால தாமதமாகியாவது இவ்வாறன முயற்சிகள் மேற் கொள்ளவது சற்று நம்பிக்கையைக் கொடுக்கின்ற விடயமாகத் தெரிகின்றது. இதே போன்ற முயற்சிகள் சர்வதேச மட்டத்தில் பரவலாக மேற் கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகவும் இருந்து வருகின்றது.

இவ்வாறான ஏற்பாடுகளைச் வெளி நாடுகளில் செய்கின்ற அதன் ஏற்பாட்டாளர்கள் மிகவும் விளிப்பாகவும் நிதானத்துடனும் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டி இருக்கின்றது. அரசியல், சமூக ரீதியிலான செயல்பாடுகளின் போது இலங்கை முஸ்லிம்களின் வேகமும் விவேகமும் இன்னும் பக்குவப்படாத நிலையில் இருந்து வருகின்றது என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே சர்வதேச அரங்கில் மிகவும் தேவையான ஒரு முயற்சியில் இறங்கி இருக்கின்ற உங்களுக்கு எமது ஒருமைப்பாட்டைத் தெரிவிப்பதுடன் பின்வரும் விடயங்களில் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

1. இந்த நாட்டில்  முஸ்லிம்களுக்கு எதிரான மேற் கொள்ளப்படும் செயல்பாடுகளில் பின்னணியில் சர்வதேச சக்திகள் இருந்து வருகின்றன என்பதனை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

2. இலங்கை ஆட்சியாளர்கள் இது விடயத்தில் கடைப்பிடிக்கும் மௌனம் என்ன? அது எதற்காக?

3. நமது நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் பெயரில் அரசியல் செய்கின்றவர்களையும் சமய இயக்கங்களை  நம்பி நீங்கள் எந்த காய்நகர்த்தல்களையும் செய்யக் கூடாது. அவர்கள் முறன்பாட்டுக்காரர்கள். தமது நடவடிக்கைகளின் காரனமாக சமூகம் அவர்களை சந்தேக்கக் கண் கொண்டு நோக்குகின்றது என்பதனால்.

4. இந்த நாட்டில் வாழ்கின்ற பெரும்பான்மை பௌத்த மக்கள், நாம் அஞ்சுகின்ற முஸ்லிம் விரோக செயல்பாட்டுக்காரர்கள் விடயத்தில் மிகவும் தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள். இதனால்தான் இன்றுவரை வன்முறையாளர்களின் நோக்கம் உள்நாட்டில் நிறைவேறாமல் இருந்து வருகின்றது.

5. பெரும்பாலான சிங்கள மக்களுக்கு இந்த நாட்டில் உத்தியோகப் பற்றற்ற பொலிஸ் என்று சொல்லிக் கொள்பவர்கள் மீது எந்த நம்பிக்கையும் இல்லை என்பதனை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

6. இந்த நாட்டில் முஸ்லிம்களைப் பாதுகாக்க பெரும்பான்மை சிங்கள மக்கள் இன்னும் தயாராகவே இருக்கின்றார்கள். எனவே அவர்களிளின் மனதை நோகடிக்கும் எந்த நடவடிக்கைகளிலும் நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ இறங்கி விடக்கூடாது. முஸ்லிம்கள் மீது வன்முறையைப்புரிய முனைகின்றவர் இந்த நாட்டில் சிங்கள மக்கள் கூட நிராகரிக்கின்ற ஒரு கூட்டம் என்பதுதான் யதார்த்தம்.

7. முடியுமானால் முற்போக்கு எண்ணங் கொண்ட சிங்கள, தமிழ் சகோதரர்களையும் நீங்கள் இந்த ஏற்பாட்டில் இணைத்துக் கொள்ள முடியும். இவர்களை அடையளப்படுத்திக் கொள்வதில் நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

8. உங்கள் செயற்பாடுகள் முற்றிலும் நடுநிலையாகவும் சிவில் சமூகத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்ற வகையிலும் அமைய வேண்டும். நீங்களும் ஏதேனும் அமைப்புக்களின் கையாட்களாகக் களமிறங்கினால் அது இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு மற்றுமொரு ஏமாற்றமாக அமைந்து விடும் என்பதனால் இந்த விடயங்களை உங்கள் பார்வைக்குச் சமார்ப்பிக்கின்றோம். 

உங்கள் முயற்சிகள் வெற்றி பெற எமது வாழ்துக்கள்.  நன்றி

5 comments:

  1. Alhadurillah,Really very good advice.Thank full to this type of comment.Any way in this problam there is a big political support behind BBS.That the reson..So our responsilbe to expose this problam to the international level.Becouse before coming big lost to our socity in mother land.But Allah subhanahu wata allah protect us when wr with allah.I whish to good success tomorrow's compaine.Ameen.....

    ReplyDelete
  2. masha allah good advice,many arab countries burning in present situation,arab countries 100percent muslims sofar.any counntry or UNA ?no anybody have not helping arab countries.arab cuontries they have well economy ,eventhough they are failure.right decision mean we have to turn our face to allah and make dua for our sin forgive,protest,carrying banner not our culture.pls try to do right thing always,may allah guide us

    ReplyDelete
  3. சிறப்பான ஒரு விடயம், குளிக்கப்போய் சேற்றை அள்ளி பூசியதாக வந்துவிடக்கூடாது. நிதானம் முக்கியம். இந்நிகழ்வு வெற்றிபெற அல்லாஹ்வை வேண்டுகிறோம்.

    ReplyDelete
  4. first of all we must understand who is the real culprit behind this. We should not act as of Tamil diaspora act. complain to International or UNO make no purpose. because they are furious of the attitude and the act of muslims when the first un resolution was brought against Srilanka. Muslims stood on their way. so they angered and want to teach a muslims lesson and also want to show minorities are harassed and Sinhalese are inhuman. so they can catch two birds by a one stone. so contract is given, so what bbs wants is this type work, radicalization of the muslims and the retaliation. so that they can attack muslims. so we must be very cautious and should not anger the majority Sinhalese who not approving the act of bbs. even the champika Ranawaka to agreed that the displace muslims should be settled. they did not say to expel them.

    ReplyDelete
  5. masha allah ALLAH help to every monements

    ReplyDelete

Powered by Blogger.