பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக சந்திக்க ஹத்துருசிங்க
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சந்திக்க ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூ சவுத் வேல்ஸ் கிரிக்கெட் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக இருந்த நிலையில் முதல் முறையாக சர்வதேச அணி ஒன்றுக்கு பிரதான பயிற்றுவிப்பாளராக சந்திக்க ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹத்துருசிங்கவின் பிரிவு தமக்கு பாரிய இழப்பு என்றும் ஆனால் அவரது திறமைக்கு ஏற்ற சிறந்த பதவி கிடைத்துள்ளதாகவும் நியூ சவுத் வேல்ஸ் கிரிக்கெட் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரி என்ரெவ் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

Post a Comment