Header Ads



ஜனாதிபதியைச் சந்திக்கப்போகும் முஸ்லிம் தலைவர்களின், முன் ஆயத்தங்கள் எப்படி..?


(நஜீப் பின் கபூர்)

கடந்த 8ம் திகதி வியாழக்கிழமை வழக்கம்போல் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடந்தது. அப்போது முஸ்லிம் சமூகம் சம்பந்தப்பட்ட சில விடயங்களை அங்கு அமைச்சர் ரிஷhட் பதியுத்தீன் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். 

தம்புள்ளை பள்ளி விவகாரம் தொடர்பாக அவர் குறிப்பிட்டபோது இந்த விவகாரம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது..! என்று ஜனாதிபதி சொல்லி, அது பற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அங்கு குறிப்பிட்டிருக்கின்றார்.

மேலும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள், மீள்குடியேற்றங்கள் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் அங்கு சுட்டிக் காட்டியபோது இது விடயத்தில் பசிலுக்குத் தான் பணிப்புரைகளை வழங்குவதாகவும் ஜனாதிபதி ரிசாடிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதி முன்னிலையில் வழக்கமாகக் கூனிக்குறுகி நிற்கின்ற முஸ்லிம் தலைவர்கள் மத்தியில் இப்படியாவது ஒரு விடயத்தில் கேள்வி எழுப்பியது பாராட்டத்தக்கது. 

இந்த விடயத்தில் ரிசாட் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதுடன். எமக்குக் கிடைக்கின்ற தகவல்களின்படி வெசக் பண்டிகை முடிந்தவுடன் இது பற்றிய சந்திப்பை அவசரமாக ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்ஹவுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார். சொன்னபடி சந்திப்பு நடைபெறுமானால் காட்புணர்ச்சிகள் காரணமாக ஜனாதிபதி முன் முட்டி மோதிக் கொள்ளாமல் முஸ்லிம்கள் தரப்பில் ஒருமித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட வேண்டும்.

இவ்வளவு காலமும் இலங்கை முஸ்லிம்கள் மீது கொடுக்கப்படும் தொந்தரவுகள் விடயத்தில் மௌனம் காத்த ஜனாதிபதி இது பற்றிப்பேச சந்தர்ப்பம் கொடுத்திருப்பது அவர் அரசியல் நிகழ்சி நிரலின் படியாக இருக்கலாம். கண்னெதிரில் தேர்தல்கள் என்ற நிலை இருப்பதால் இந்தச் சந்திப்பிற்கு  சந்தர்ப்பத்தை அவர்  வழங்கி இருக்கக்கூடும். அல்லது நல்ல நோக்கில் கூட இந்த வாய்ப்பு வழங்கப் பட்டிருக்கலாம். 

ஜனாதிபதியுடன் சந்திப்புக்குச் செல்லும் முன் அங்கு போய் எப்படி நடந்து கொள்வது, என்ன விடயங்களை அவரிடத்தில் முன்வைப்பது முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட விடயங்களில் தமக்குள் முதலில் ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கொள்வது போன்ற பணிகளை இன்னும் ஒரிரு தினங்களுக்குள் முஸ்லிம் தலைமைகள் செய்து முடிக்க வேண்டும்.

ஜனாதிபதிக்கு முஸ்லிம் பிரச்சினைகள் குறித்து கடிதம் எழுதியது தேவையில்லாத விடயம். என்போரும் அதில் ஒப்பம் போடாது அதற்கு நியாயம் சொல்வோரும்  சில வேளை இதில் நுழைந்து எட்டப்பர் வேலையை நிச்சயம் மேற் கொள்வார்கள். என்பதனையும் நினைவில் வைத்து ஜனாதிபதியிடம் முன்வைக்கின்ற விடயங்கள் பற்றி ஒன்று கூடி பேசி ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டி இருக்கும்.

பேசுகின்ற விடயங்கள் முன்கூட்டியே ஜனாதிபதிக்கு சென்றடையவும் நிறையவே வாய்ப்புக்கள் இருப்பதானல் திறந்த மனதுடன் இந்த முயற்சியை மேற் கொள்ள வேண்டி இருக்கும்.

லண்டனில் முஸ்லிம் புலம் பெயர்ந்தவர்கள் அண்மையில் நடாத்திய கவனயீர்ப்புப் போராட்டம் தேவை என்றோரும் அவசியம் இல்லலை என்றோரும் அப்படிச் செய்திருக்கலாம் இப்படிச் செய்திருக்கலாம். எமக்கு இதில் எந்தவிதமான தொடர்புகளும் கிடையாது என்று முதுகெலும்பில்லாது அறிக்கை விட்டோரும் முஸ்லிம் சமூகத்தை நெறிப்படுத்தப் பொறுத்தமில்லாது நடந்து கொண்டது போல் முஸ்லிம்கள் பிரச்சிகைகள் விடயத்தில் ஜனாதிபதி முன் தமக்குள் இவர்களும் முட்டி மோதிக் கொள்ளக்கூடாது என்று நாம் சமூகத்தின்போரல் கேட்டுக் கொள்கின்றோம். 

1 comment:

  1. MR.Rishad we thank you ,allha will reword you janna.

    ReplyDelete

Powered by Blogger.