Header Ads



10 வீத முஸ்லிம்களால் பெரும்பான்மைச் சமுகத்தினை தாண்டிச் செல்ல முடியுமா..?

(சத்தார் எம் ஜாவித்) 

அமைதியாக இருந்த சமுகத்தின்பால் காழ்ப்புணர்ச்சி கொண்ட பௌத்த இனவாதிகள் மேற் கொண்டு வரும் அடாவடித் தனங்களுக்கு துணை போனவர்களாக தற்போதைய அரசியல் ஆட்சியாளர்களே காரணமானவர்கள். அவர்களின் மாற்றாந்தாய் மனப்பான்மையின் வெளிப்பாடுகளின் பிரதிபளிப்பக்களின் அறுவடையே இன்று முஸ்லிம் சமுகமும் தமது பிரச்சினைகளை சர்வதேச ரீதியாக வெளிப்படுத்துவதற்கு வழிகோலியிருக்கின்றது எனலாம்.

தற்காலச் சூழலில் எந்தவொரு நாட்டிலும் ஒரு சிறுபான்மைச் சமுகம் பெரும்பான்மைச் சமுகத்தை வெற்றி கொண்டு அவர்களை மீறி ஆட்சியிலோ அல்லது வேறுவிடயங்களிலோ செயற்பட்ட வரலாறுகள் இல்லை. இவ்வாறானதொரு நிலையில் இலங்கையில் வாழும் சாதாரண 10 வீத முஸ்லிம்களால் பெரும்பான்மைச் சமுகத்தினை தாண்டிச் செல்ல முடியுமா? இல்லவே இல்லை.

ஆனால் இனவாதிகளின் தாழ்வு மனப்பான்மை, கையாலாகாத் தன்மை, நம்பிக்கை இன்மை போன்ற விடயங்கள்  முஸ்லிம்களை துவம்சம் செய்வதற்கு வழிவகுத்துள்ளது. முஸ்லிம்கள் முஸ்லிம்களாகவே வாழ விரும்புகின்றார்கள் ஆனால் இனவாதிகளே முஸ்லிம்களை வன்முறையாளர்களாவும், கண்டியர்களாகவும் ஆக்கும் கைங்கரியங்களை முனைப்புடன் செய்து வருகின்றனர்.

முஸ்லிம்கள் இதுவரை காலமும் தமது பிரச்சினைகளை ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படாததன் விளைவுகளே இன்று பலதரப்பட்ட பிரச்சினைகளையும் அனுபவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையாகும்.

கடந்த இரண்டரை வருட காலமாக சமய ரீதியாக அடைந்த இன்னல்கள் சொல்லிலடங்காது இருந்தும் இஸ்லாமிய விழுமியங்களான பொறுமை, சகிப்புத் தன்மை, விட்டுக்கொடுத்தல், அரசாங்கத்திற்கும் ஆட்சியாளர்களுக்கும் கட்டுப்படல், அரசியலமைப்புச் சட்டங்களுக்கும், பாதுகாப்புச் சட்டங்களுக்கும் மதிப்பளித்து கட்டுப்படல் போன்ற விடயங்களில் நம்பிக்கை கொண்டமையே இலங்கையில் பாரிய இன மோதல்கள் எற்படாதிருப்பதற்கு வழிவகுத்துள்ளது.

ஏதாவது ஒருவகையில் பிரச்சினைகளை முன் கொண்டு செல்வதன் பயனாகவாவது பிரச்சினைகளுக்கு தீர்வொன்று ஏற்படும் அதன் ஒரு கட்டமாக இன்று லண்டன் வாழ் இலங்கை முஸ்லிம் சமுகம் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஒருசில பௌத்த இனவாதிகளால் தொடராக மேற் கொள்ளப்பட்டு வரும் வன்முறைகளுக்கு விடிவைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைதியன வன்முறையற்ற சர்வதேச கவன ஈர்ப்புப் போராட்டத்தை நடாத்தியுள்ளனர்.

இவ்வாறு மேற் கொள்ளப்பட்ட அமைதிப் பேரணியை இன்று இலங்கையில் தேவையற்ற ஒன்று என்றும் தேவையானது என்றும்   இருவிதமான கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதுடன் ஒருசில முஸ்லிம் அமைப்புக்கள் தேவையற்ற ஒன்று என்றும் அதனை நடத்த வேண்டாம் என்றும் அறிக்கைகள் விட்டுள்ளன.

இவற்றையெல்லாம் நடத்த வேண்டாம் என்றால் முஸ்லிம்களுக்கு எதிராக தொடராக மேற் கொள்ளப்பட்டு வரும் அடாவடித் தனங்களை கண்டும் காணாததுபோல் இருப்பதா? அல்லது அறபு நாடுகளில் போர்ப்பயிற்சி, வெளிநாட்டு தீவிரவாதிகளுடன் தொடர்பு, அதற்கு இலங்கையில் உள்ள தனவந்தர்கள் உதவியாக இருக்கின்றனர் என்ற புதிய புலுடாக்களையேல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதா? மறுப்புத் தெரிவித்து விரட்டாமல் சமுகத்திற்கு  நன்மை பயக்கும் விடயங்களில் யாராவது இறங்கினால் மூக்கை நீட்டாதிருக்க வேண்டும் என முஸ்லிம் சமுகநல ஆர்வளர்கள் சம்பந்தப் பட்டவர்கள் மீது ஆதங்கம் வெளியிடுகின்றனர்.

அதுமட்டுமல்லாது ஜாதிக ஹெல உறுமையவின் பொதுச் செயலாளர் சம்பிக ரணவக்க அரசுடன் இருந்து கொண்டு பொதுச் சொத்துக்களை அனுபவித்துக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக அதிக உச்சக்கட்ட துவேசத்தை காட்டி வருகின்றார். அவர் உலக இஸ்லாமிய தீவிரவாதிகளின் மையமாக இலங்கை என்ற கருத்துக்களை கக்கிக் கொண்டிருக்கும் மேற்படி இனவாதிக்கு அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் எந்த முஸ்லிம் அரசியல் வாதி பதிலடி கொடுக்க இடுப்பில் பலமில்லாதிருப்பது முழு முஸ்லிம் சமுகத்தையும் வேதனைப்பட வைத்துள்ளது.

பதிலுக்கு பதிலடி கொடுக்க முடியாத தலைமைகளால் முஸ்லிம் சமுகம் கண்டபலன் ஒன்றுமில்லை ஏன் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் தொடர்பான ஜனாதிபதிக்கான மகஜரில் இடப்பட்ட கையெழுத்துக்களும், அதில் கையெழுத்து இடாத திருவிழையாடல்களும், கையெழுத்து இட்ட பின் அவற்றை மழுப்புவதற்கான திருட்டுத் தாளங்கள் எல்லாம் தற்போது முழுப் பூஷனிக் காயை சோற்றில் மறைப்பதுபோல் உள்ளதுடன் உண்மை நிலை வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

இவ்வாறான நிலையில் முஸ்லிம் சமுகத்தின் பிரச்சினைகளை வெளிநாட்டில் இருக்கும் உடன் பிறப்புக்கள் வன்முறையற்ற விதத்தில் நியாம் வேண்டியும், பொதுபல சேனாவை தடைசெய்யும்படியும் ஆர்ப்பாட்டம் செய்வதில் என்ன தப்பு இருக்கின்றது என சமய ஆர்வளர்கள் கேட்கின்றனர். குட்டக் குட்ட குட்டுபவனும் மடயன் குட்டுப்படுபவனும் மடயன்போல் இருப்பதா?

உள்நாட்டில் ஒரு இனம் அடக்கி ஒடுக்கப்படும் நிலையில் இருக்கும்போது அதற்கான நியாயம் கிடைக்காவிட்டால் இலங்கைக்கு உதவி செய்யும் நாடகளைத்தானே நாட வேண்டும் என முஸ்லிம்கள் கருதுகின்றனர் அந்த வகையில்தான் தமது பிரச்சினைகளை சர்வதேமாவது தீர்த்துத்தர முன் வரவேண்டும் என்ற போர்வையில் லண்டன் முஸ்லிம்கள் முதல் முதலாக மேற்கத்தைய நாட்டில் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர் என அதனை ஆதரகிக்கும் தரப்பினர் தமது கருத்துக்களை முன் வைக்கின்றனர்.

எது எவ்வாறாக இருந்தாலும் கடந்த இரண்டரை வருடகாலத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் உடல், உள ரீதியா பாதிக்கப்பட்டது மட்டுமல்லாது அதன் தாக்கத்தை சகித்துக் கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைமைகள் அவர்களின் வாழ்வியல் விடயத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

இந்த நிலைமைகளை கண்டு கொள்ளாத கண்கெட்ட அரசியல் சமுகமும், சமய நிறுவனங்களும் தற்போது இருதோணியில் கால் வைத்த கதையாக உள்ளதுடன் அதிலும் சில அரசியல் வாதிகள் ஒன்றைச் செய்துவிட்டு அது பகிரங்கப்படுத்தப்பட்டபோது அரசுக்குப் பயந்து முன்னுக்குப் பின்னான முரண்பட்ட கருத்துக்களையும், மறுப்பறிக்கைகளையும் ஏன் தெரியாதென்ற மழுப்பு வார்த்தைகளையும் தெரிவிப்பது ஊடகங்கள் வாயிலாக மலிவாக அறிந்த கொள்ளக் கூடியதாகவுள்ளதுடன் சமகத்திற்கு பாரிய இழுக்கையும் எற்படுத்தும் விடயங்களாகவும் நோக்கப்படுகின்றது.

எந்தவொரு நாட்டிலும் ஒரு சமுகம் அரசியல், பொரளாதார மற்றும் சமய கலாச்சார ரீதியாக பின்னடைவுகளையும், தடைகளையும், பிரச்சினைகளையும் எதிர் நோக்கம்போது அதனை சமுக நன்மை கருதியும் நாட்டின் நன்மை கருதியும் அகிம்சையாக போராடுவது ஒரு ஜனநாயக உரிமையாகும்.

பல நாடுகளில் அதிகமான பிரச்சினைகளுக்கு தீர்வும், நியாயமும் நாடி அகிம்சைப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன அதிலும் பல வெற்றிகளும் கூடு கிடைத்துள்ளது. இதே வகையில்தான் கடந்த முப்பது வருட யுத்தத்தால் பட்ட வேதனையை உலக வாழ் தமிழ் சமுகம் தொடராக தமது எதிர்ப்புக்களை சர்வதேசத்தின் முன் கொண்டு செல்கின்றனர்.

மேற்படி போராட்டங்கள் ஜனநாய ரீதியிலான வன்முறைகளற்ற அகிம்சைப் போராட்டங்கள் இருக்கும்போது அதனை யாரும் தவறு என்று கூற முடியாது. ஆனால் அந்த பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளாக மாறினால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆனால் கடந்த திங்கற் கிழமை லண்டனில் இலங்கை வாழ் முஸ்லிம் சமுகம் மேற் கொண்ட அமைதியான கவன ஈர்ப்புப் போராட்டம் எதுவித வன்முறைகளும் அற்ற நிலையில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் சமய ரீதியாக பல இன்னல்களை அனுபவிப்பதாகவும் அதற்கு அரசாங்கம் தகுந்த தீர்வையும், பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை  முன் வைத்து சிறந்த வழி நடத்தலில் கட்டுக்கோப்பு மீறாத வகையில் இடம்பெற்றமையை ஊடகங்கள் வாயிலாக அறியக் கிடைத்துள்ளது.

இங்கு கருத்துச் சுதந்திரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது ஒரு சமுகத்தின் பிரச்சினைகளை மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் விதத்தில் அகிம்சையாக செய்வதனை யாராலும் மறுக்கவோ அல்லது தடை செய்யவோ முடியாது அவ்வாறு செய்யப்படுமானால் அது பாரிய மனித உரிமை மீறலாகவே கணிக்கப்படும். ஆனால் இதற்கும் இன்று தடைகளும் கட்டுப்பாடுகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றமை கூட வருத்தப்பட வேண்டிய செய்தியாகும்.

அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிராக சமய ரீதியாக செயற்பட்டு வரும் இனவாத அமைப்புக்களுக்கு உரிய வகையில் சட்டத்தை நடை முறைப்படுத்தியிருந்தால் இன்று சர்வதேச ரீதியாக முஸ்லிம் சமுகம் தமது கவன ஈர்ப்புக்களை மேற் கொண்டிருக்காதல்வா? ஆனால் இன்று அரசாங்கமும் இனவாதக் குழுக்களும் தற்போது முட்டிவிட்டு குணியும் நிலையில் சென்று கொண்டிருப்தை ஒரு சில சம்பவங்கள் காட்டி நிற்கின்றன.

குறிப்பாக இன்று இலங்கையின் இனவாதக் குழுக்களில் ஒன்றான பொதுபல சேனா குழுவிற்கு நீதி மன்றம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளமை முஸ்லிம் சமுகத்திற்கு கடந்த காலங்களில் மேற்படிக் குழுவினரால் இழைக்கப்பட்ட இன்னல்களுக்கு கிடைத்த வெற்றியாகவே உள்ளது. எனினும் மேற்படி நீதிமன்ற எச்சரிக்கையை அவர்கள் ஒரு பாடமாக எடுத்து சிறுபான்மைச் சமுகங்களின் ஜனநாயக விழுமியங்களுக்கு இடையூறுகளும், முட்டுக்கட்டைகளும் போடாதிருப்பதே நன்று.

இதேபோல் தற்போது இனவாதச் செயற்பாடுகளை தூண்டும் சிங்கள இனவாத இணையத்தளங்களையும், பத்திரிகைகளையும் அரசாங்கமும், நீதிமன்றமும் தடை செய்ய வேண்டும் என முஸ்லிம் சமுகம் பணிவான கோரிக்கைகளை முன்வைக்கின்றன.

ஒருசில இனவாத சிங்கள இணையத் தளங்கள் முஸ்லிம்களை மிக மோசமான வகையில் சித்தரித்து பொய்யான மற்றும் உண்மைக்குப் புறம்பான விடயங்களைக் கூறி சமுகங்களை பிளவுபடுத்தும் வகையில் செய்திகளை வெளியிடுகின்றமை முஸ்லிம் சமுகம் பௌத்த மக்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை, மற்றும் நன்மதிப்பு என்பனவற்றை சீர் குலைக்கும் வகையில் அமைகின்றமை முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமல்லாது ஏனைய சமுகங்கள் மத்தியில் இருந்தும் பாரிய விமர்சனத்தையும், விஷனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே இலங்கையின் இறையான்மை மற்றும் ஜனநாயக விழுமியங்களை கருத்தில் கொண்டு மேற்படி இணையத் தளங்களால் செய்யப்படும் விசமப் பிரச்சாரங்களை கட்டுப்படுத்த அவற்றை பரிசீலித்து சட்டப்படி தடை செய்வதனால் இலங்கை வாழ் சமுகங்கள் ஒற்றுமையாக வாழ முடியும் என்பதே அநேகரின் எதிர்பார்ப்புக்களாகும்.

இந்தவகையில் ஒரு மனிதனையோ அல்லது ஒரு குழுவையோ அல்லது ஒரு சமுகத்தையோ இழிவு படுத்தல், வஞ்சிப்பது, அவர்களின் சமய, கலாச்சார விடயங்களுக்கு எதிராக அடாவடித் தனங்கள் செய்தோ மற்றய சமுகம் நிம்மதியாக வாழ்ந்த வரலாறுகள் எந்த நாட்டிலும் காணப்பட்ட இல்லை.

இவ்வாறான சூழ் நிலையில் இலங்கையில் இனவாதக் குழுக்கள் முஸ்லிம்களையோ அல்லது தமிழ் மக்களையோ புறந்தள்ளி வாழ முடியாது என்பதே உண்மை. ஆனால் இன்று அதில் வெற்றி காணலாம் என்று எண்ணியிருந்த இனவாதக் குழுக்களுக்கு தற்போது அவர்களின் என்னங்கள் எல்லாம் முடிவிற்கு வரும் காலம் ஆரம்பித்துள்ளமையை நீதி மன்றம் பொதுபல சேனாவை  எச்சரித்துள்ளமை காட்டி நிற்கின்றது.

எனவே சமயங்களையும், அதன் விழுமியங்களையும் பாதுகாப்பதற்கு முன் வரவேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைகாதன் காரணமாக லண்டன் வாழ் இலங்கை முஸ்லிம் சமுகம் இஸ்லாம் மீது கொண்டுள்ள பற்றுக்கும், நம்பிக்கைக்கும் ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும் பறவாயில்லை அவற்றை நிறுத்தச் சொல்லி தடைகள் போட வேண்டாம் என்ற தமது கருத்தத்தை தெரிவிக்கின்றனர்.

2 comments:

  1. 'ஓர் அவையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தபோதுஅவர்களிடம் நாட்டுப் புறத்து அரபி ஒருவர் வந்தார். 'மறுமை நாள் எப்போது?' எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர் 'நபி(ஸல்) அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள்; எனினும் அவரின் இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை' என்றனர். வேறு சிலர், 'அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை' என்றனர். முடிவாக நபி(ஸல்) அவர்கள் தங்களின் பேச்சை முடித்துக் கொண்டு, 'மறுமை நாளைப் பற்றி (என்னிடம்) கேட்டவர் எங்கே?' என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்)' இறைத்தூதர் அவர்களே! இதோ நானே' என்றார். அப்போது கூறினார்கள்.' அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர் பார்க்கலாம்." அதற்கவர், 'அது எவ்வாறு பாழ் படுத்தப்படும்?' எனக் கேட்டதற்கு, 'எந்தக் காரியமாயினும் அது, தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

    ReplyDelete
  2. Ithai paarthaavathu muslim ministers, mp's and all poruppalargal ellorum remind pannungal. intha al-quran vasanam engalukkuthaan. allahvai payanthukollungal ovvoru vidayaththilum.

    8:27 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَخُونُوا اللَّهَ وَالرَّسُولَ وَتَخُونُوا أَمَانَاتِكُمْ وَأَنتُمْ تَعْلَمُونَ

    ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள்; நீங்கள் அறிந்து கொண்டே, உங்களிடமுள்ள அமானிதப் பொருட்களிலும் மோசம் செய்யாதீர்கள்.

    23:8 وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ

    இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்.

    33:72 إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْجِبَالِ فَأَبَيْنَ أَن يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْإِنسَانُ ۖ إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا

    நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக் காட்டினோம்; ஆனால் அதைச் சுமந்து கொள்ள மறுத்தன;அதைப் பற்றி அவை அஞ்சின;ஆனால் மனிதன் அதைச் சுமந்தான்;நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும், அறிவிலியாகவும் இருக்கின்றான்.

    ReplyDelete

Powered by Blogger.