மஹிந்த அரசின் புதிய நாடகம் - கதாநாயகன் விமல் வீரவன்ஸ, துணை நடிகர்கள் சம்பிக்க ரணவக்க + அத்துரலிரே ரத்ன தேரர்
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் புதிய நாடகத்தின் பிரதான கதாநாயகன் அமைச்சர் விமல் வீரவன்ஸ என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊவா மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட உள்ளவருமான சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.
மகிந்த அரசாங்கம் தற்போது புதிய நாடகம் ஒன்றை அரங்கேற்ற தயாராகி வருகிறது. அதற்கான கதையும் எழுதப்பட்டு விட்டது.
அதில் கதாநாயகன் விமல் வீரவன்ஸ, துணை நடிகர்களான சம்பிக்க ரணவக்க, அத்துரலிரே ரத்ன போன்றோர் தமது பத்திரத்திற்கு உதவியாக செயற்பட்டு வருகின்றனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திற்கு வாக்களித்த பலர் இன்று வெறுப்படைந்துள்ளனர்.
விவசாயிகள், அரச ஊழியர்கள், வர்த்தகர்கள், பாதுகாப்புத் தரப்பினர் என அனைவரும் சிக்கலுக்குள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது ஜே.வி.பியோடு இணைந்து வருகின்றனர்.
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு இது ஆபத்தானது. இது பற்றி கலந்துரையாடியே அரசாங்கம், விமல் வீரவன்ஸவை கதாநாயகனாக போட்டு நாடகத்தை எழுதியுள்ளது.
அரசாங்கத்தில் இருந்து விலகி வரும் நபர்களை, விமல் வீரவன்ஸவை சூழ வர வழைத்து அவர்களை மகிந்தவின் மடியில் அமர்த்துவதே வீரவன்ஸவின் புதிய பணியாகும் என்றும் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.

Post a Comment