Header Ads



இலங்கையில் உள்ள உயிரினங்களை கொன்று உணவாக்கும் சீனர்கள்

இலங்கையில் அருகி வரும் உயிரினங்களை கொன்று உணவாக்கிய சீனர்கள் சிலரை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். 

அம்பாந்தோட்டை வனஜீவராசிகள் திணைக்கள அலுவலக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்ச சர்வதேச துறைமுகத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள சீனர்கள் துறைமுகத்தில் தங்கியிருக்கும் அறைகளில் மேற்கொண்ட தேடுதலில் 10 பால் ஆமைகள் மற்றுமொரு விலங்கின் இறைச்சி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் 5 சீன பிரஜைகளையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட 10 பால் ஆமைகளில் 6 இறைச்சிக்காக அறுக்கப்பட்டு, அதி குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்தன. மேலும் 4 ஆமைகள் உயிருடன் இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

மத்தள பிரதேசத்தில் பால் ஆமை ஒன்று சீனர்களுக்கு 15 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.