றவூப் ஹக்கீம் இதய சுத்தியுடன் களம் இறங்குவாராயின் ஆதரவளிக்க தயார் - உதுமாலெப்பை
(ஏ.எல்.ஜனூவர்)
கடந்த காலங்களில் யுத்தத்தையும், பயங்கரவாதத்தையும் எண்ணி அஞ்சி வாழ்ந்து நிம்மதியிழந்த இந்த நாட்டு மக்கள், அவை முடிவுக்கு வந்ததன் பின்னர் நிம்மதியுடன் பெருமூச்சு விட்டு வாழ்ந்து வரும் இக்கால கட்டத்தில் பொதுபலசேனா போன்ற தீவிர இனவாத அமைப்புக்களின் செயற்பாடுகளினால் மீண்டும் இந்த நாட்டின் சிறுபான்மை மக்கள் அச்ச நிலைக்கு தள்ளப்பட்டிருப்து கவலைக்குரிய விடயமாகும் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
அண்மையில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் அமைச்சுக்கு அத்துமீறி பிரவேசித்து அட்டகாசம் புரிந்த பொதுபலசேனாவின் செயற்பாடு குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் முக்கிய வகிபாகமாகவும், இறைமையும் கொண்ட அரசாங்கத்தின் அமைச்சரவை உறுப்பினர் ஒருவரது அமைச்சில் சட்டவிரோதமாக பிரவேசித்து, அட்டகாசம் புரிந்து வீரம் பேசி சட்டத்தை கையில் எடுத்து வரும் கடும் போக்காளர்களின் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதோடு இவ்வாறான செயற்பாட்டினை சுதந்திர தேசத்தில் ஜனநாயகத்தை விரும்பும் நாகரீகமுள்ள எந்தவொரு சமூகமும் எற்றுக் கொள்ளாது.
மேலும் வடக்கில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் 20 வருடங்களாக இருப்பதற்கு இடமின்றி ஏதோ கிடைத்த ஓரிடத்தில் சிறுகுழுந்தைகளுடன் குடிசைகளில் நிம்மதியாக வாழ்வதைக் கூட விரும்பாத, இரக்க சிந்தனை காட்டாத இந்த பொதுபல சேனாவால் எப்படி பௌத்த மதம் கூறும் அகிம்சைப் பற்றியும் நற்சித்தனைகள் பற்றியும் போதிக்க முடியுமென கேட்க விரும்புகின்றேன்.
மக்களின் பிரச்சினைகள், பாதுகாப்பு, அபிவிருத்தி, உரிமைகள் தொடர்பாக பேசுவதற்கும், அவற்றினை பெற்றுக் கொடுப்பதற்குமாகவே மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கும் மற்றும் அரசியல் அதிகாரமுள்ள இடங்களுக்கும் மக்கள் அனுப்பி வைக்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கே அச்சுறுத்தலும், தடைகளும் ஏற்படும் இவ்வாறான சந்தர்ப்பதில் மக்கள் தங்களின் இருப்பு, பாதுகாப்புப் பற்றி சிந்திக்க தொடங்கியுள்ளனர்.
எனவே பொதுபலசேனா போன்ற தீவிர மதவாதக்குழுக்களின் செயற்பாடுகளை அரசாங்கம் கட்டுப்படுத்தாமல் விடுமேயானால் அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அது இழக்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை.
தற்போது ஜனாதிபதியினால் உடன் கொண்டுவரப்பட்டுள்ள மதவிவகாரங்களுக்கான தனியான பொலிஸ் பிரிவு வரவேற்கத்தக்க விடயமாகும், இதன் எதிர்கால செயற்பாடு, நம்பிக்கைத் தன்மை என்பனவற்பை; பொறுத்தே மக்கள் மனங்களில் மாற்றத்தினைப் பெறமுடியும். முhறாக அவை பெயரளவில் மட்டுமே இருக்குமானால் இவ்வாறான இனவாதத்தையும், குரொதத்தையும் தோற்றுவிக்கும் அமைப்புக்களை கட்டுப் படுத்தப்படாமல் போய்விடும். அது எதிர்காலத்தில் எதிர்பாராத விளைவுகளையும், பாதிப்புக்களையும் தோற்றுவிக்கும்.
பல்லின சமூகங்கள் வாழ்ந்து வரும் ஒரு நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் உள்ளன. அவைகள் அனைத்தும் பேசித் தீர்க்கக் கூடியனவாகவே இருக்கின்றது. பிரச்சினைகள் ஏற்படும் போது மதத்தலைவர்கள் அதனை மிகவும் நிதானமாக அனுகி சாதுரியமாக தீர்த்து வைத்து சமாதானத்திற்காக பாடுபட வேண்டியது முக்கிய பொறுப்பாகக் காணப்படுகின்றது. மேலும் மக்கள் பிரதிகள், அரசியல் தலைமைகள் குறகிய அரசியல் இலாபங்களுக்காக பக்கசார்பாக செயல்படக் கூடாது.
பொதுபலசேனா போன்ற கடும் போக்கான சில சிங்கள அமைப்புக்களின் செயற்பாடுகளினால் முஸ்லிம் சமூகம் புன்படுத்தப்பட்டுவருவது நிறுத்தப்பட வேண்டும். இவ்வமைப்புக்கள் ஏதோ ஒரு நாசகார சக்தியின் பின்னணியில் செயல்பட்டு வருவதுவதனை அறிய முடிகின்றது. உண்மையில் அவர்களுக்கு இந்த நாட்டில் பிரச்சினைகள் தேவையாக உள்ளன. அதனாலேதான் காலத்திற்கு காலம் வௌவேறான பிரச்சினைகளையும், ஆத்திரமூட்டும் செயற்பாடுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். இதனை நன்கு உணர்ந்து முஸ்லிம சமூகம் மிகவும் நிதானமாகவும், பொறுமையாகவும் செயற்பட்டு வருவதனையிட்டு பாராட்டுத் தெரிவிக்கின்றேன்.
கடந்த காலத்தில் அரசாங்கம் மேற்கொண்ட பயங்கரவாத ஒழிப்பு, யுத்த நடவடிக்கைகள் தொடர்பில் இன்று இலங்கை எதிர்நோக்கி வரும் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு மத்தியில் முஸ்லிம் சமூகத்திற்கு அச்சுறுத்தல் விடுத்து ஒரு அச்சநிலையை ஏற்படுத்தி மேலும் இந்த நாட்டை சர்வதேகத்தின் பார்வையில் ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்துவதற்கான கைங்கரியங்களை பொதுபலசேனா போன்ற அமைப்புக்கள் ஏற்படுத்தி வருகின்றன. இவர்கள் ஆரம்பத்தில் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் ஆடை தொடர்பிலும் பின்னர், முஸ்லிங்களின் சனத் தொகைப்பெருக்கம் பற்றியும், அதன் பின்னர் மத்ரஸாக்கள், பள்ளிவாசல்கள் பற்றியும், ஹலால் பிரச்சினை தொடர்பாகவும், ஜம்மியத்துல் உலமா பற்றிய பிரச்சினைகள் தொடர்பாகவும் எந்தவித கொள்கையும், யதார்த்தமும் இல்லாமல் செயல்பட்டு வருகின்றார்கள்.
இன்று முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள இவ்வாறான பிரச்சினைகளுக்கு எதிர் காலத்தில் முகம் கொடுக்கும் வகையில் ஒரு பொதுவான உடன் படடிக்கையின் கீழ் முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றுபட வேண்டியது காலத்தின் தேவையாக காணப்படுகின்றது. அந்தவகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்கு பாரிய பொறுப்பு காணப்படுகின்றது. அமைச்சர் றவூப் ஹக்கீம் இதய சுத்தியுடன் முஸ்லீம் சமூகத்தின் நன்மை கருதி முஸ்லிம் அரசியல் தலைமைகள ஒற்றுமைப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் இறங்குவாராயின் அதற்கான பூரண ஆதரவையும், ஒத்தாசையும் வழங்குவதற்கு தயாராகவுள்ளேன் எனக்குறிப்பிட்டார்
.jpg)
Post a Comment