இந்நாட்டில் ஜேவிபி இருக்கும் வரை, இன மோதல்களுக்கு இடம்வைக்க மாட்டோம்..!
(நஜீப்)
கொழும்பு நகரில் 20 க்கும் மேற்பட்ட மேதினக் கூட்டங்களும் ஊர்வலங்களும் நடந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. ஆளும் தரப்பு அரச வளங்களை உச்சமாக உபயோகித்து வெற்றிகாரமாக தனது மே தினக் கூட்டத்தையும் பேரணியையும் நடாத்தியது. ஐக்கிய தேசியக் கட்சி பெரும் பெருளாதார நெருக்கடிக்கு ஆளாகி இருபப்தனால் இந்த முறை அதன் மே தினத்தை தயா கமகே அவர்களின் ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கின்ற தொழிலாளர்களைக் கொண்டு அம்பாறை நகரில் கரு ஜெயசூரிய தலைமையில் நடத்தியது. சஜித் தந்தையின் நினைவு தினத்தை ஐந்து லாம்புச் சந்தியில் நடாத்தினார்.
வழக்கம் போல் உணர்வுபூர்வமான பாட்டாளிகளின் மே தினத்தை இந்த முறையும் ஜேவியே நடத்தியது. பி.ப.ஒரு மணிக்கு ஆரம்பமான மேதின ஊர்வலம் மாலை 4மணியளவில் கொழும்பு கல்கிஸ்ஸ ஹெவலொக் சிடியில் அமைந்துள்ள எஸ்.எஸ்.ஜயசிங்ஹ மைதானத்தை வந்தடைந்தது. அதன் பின்னர் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் லால் காந்த தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இந்த மே தினத்தில் பெரும் எண்ணிக்கையான தொழிலாளர்களும் பாட்டாளிகளும் கலந்து கொண்டிருந்தனர். மைதானம் கொள்ளாத அளவு சனக் கூட்டம் கூடியதால் மைதானத்திற்கு வெளியேயும் பல்லாயிரக் கணக்கானவர்கள் வீதியில் கூடி நின்று கூட்டத்தை செவிமடுத்தனர்.
இந்த மே தின கூட்டத்தில் இந்த நாட்டில் இனவாதிகளுக்கு எதிராக மக்கள் அணிதிறள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலான சுலோகங்கள் மைதானத்தில் போடப் பட்டிருந்தது. அத்துடன் அங்கு உரை நிகழ்ததிய கட்சியின் புதிய தலைவர் அணுரகுமார திசாநாயக்க இந்த நாட்டில் ஜேவிபி இருக்கின்ற வரைக்கும் இன மோதல்களுக்கு அது இந்த நாட்டில் இடம் வைக்க மாட்டாது என்று அவர் பேச்சில் உறுதிபடக் குறிப்பிட்ட போது மைதானத்தில் பலத்த காரகோசம் எழுப்பப்பட்டது.
இந்த நாட்டில் இனவாதிகள் வன்முறைக்கு மக்களைத் தூண்டிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் ஜேவிபி தலைவரின் இந்தத் துணிச்சலான பேச்சு பாராட்டத்தக்கது. அவர்கள் இதபோன்ற விடயங்களில் எப்போதும் தெளிவான நிலைப்பாட்டிலே இருந்த வருகின்றனர். ஆனால் இது போன்றதொரு உத்தரவாதம் ஆளும் தரப்பிலிருந்தோ பிரதான எதிர் கட்சியிலிருந்தோ வெளிவராமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை.
வடக்கு, மலையகம் போன்ற பிரதேசங்களில் இருந்தும் தமிழ் மக்கள் பேரணியில் கலந்து கொண்டதுடன் முஸ்லிம்கள் பலரும் இந்தப் பேரணியல் கலந்து கொண்டதுடன் முஸ்லிம் பெண்களும் ஹபாய் உடையில் ஜேவிபி மேதின ஊர்வலத்தில் போவதை அவதானிக்க முடிந்தது.

Post a Comment