''அரசாங்கத்திற்குள் முஸ்லிம் + பௌத்த அடிப்படைவாதிகள் இருக்கின்றனர்''
அரசாங்கத்திற்குள் முஸ்லிம் மற்றும் பௌத்த அடிப்படைவாதிகள் இருப்பதாக அமைச்சர் ஜயரத்ன ஹேரத் தெரிவித்துள்ளார். வாக்குகளை வெற்றி கொள்வதே மதப் பிரச்சினைகள் பற்றி பேசும் இந்த அடிப்படைவாதிகளின் பிரதான நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மக்கள் இனவாதிகள் என்றும் குலவாதிகள் என்றும் குற்றம் சுமத்துவதில்லை. சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்தே நடுநிலையான கொள்கையையே பின்பற்றி வருகிறது.
சுதந்திரக் கட்சியின் தலைமையிலான அரசாங்கத்திற்குள் இணைந்துள்ள அடிப்படைவாதிகள் கட்சியின் நடுநிலை கொள்கையை சேதப்படுத்தி வருகின்றனர். முஸ்லிம் மற்றும் சிங்கள பௌத்த அடிப்படைவாதிகள் உள்ளார்ந்த நோக்கங்களை கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.
இவர்கள் மதங்களை ஊக்குவிக்க முயற்சிப்பதில்லை. வாக்கு களமே அவர்களின் ஒரே நோக்கு. அடிப்படைவாதிகள் அரசாங்கத்திற்குள் மட்டுமல்ல எதிர்க்கட்சிகளிலும் உள்ளனர் எனவும் அமைச்சர் ஜயரத்ன ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment