Header Ads



அரசிலுள்ள பலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய பேச்சு - திஸ்ஸ அத்தநாயக்க

இந்த மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்ட மக்கள் வெள்ளத்தைக் கண்டு மஹிந்த  அரசுக்கு காய்ச்சல் பிடிக்குமென ஐக்கிய தேசியக் கட்சியின்  செயலாளர் திஸ்ஸ அத்த நாயக்க எம்.பி  தெரிவித்தார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மேதின ஊர்வலம் அம்பாறையில் நடைபெற்றது. அதன் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.  இக்கூட்டத்தில் தொடர்ந்தும் பேசிய திஸ்ஸ அத்த நாயக்க,

தற்போது அரசிலுள்ள பலர் எம்மோடு இரகசிய பேச்சில் ஈடுபடுகின்றனர். அவர்கள் வெறுத்துப் போய்விட்டனர். அவர்களுக்கு நாம் உதவி செய்யத் தயாராக உள்ளேன். அதனால் இன்று அரசின் அமைச்சர்கள் அதிகாரமின்றி நிலை குலைந்து போயுள்ளனர். மேலும் வரலாறு காணாத இம்மக்கள் வெள்ளத்தின் மூலம் அரசைக் கவிழ்க்கப் போகிறோம் என்பதற்கான அரசுக்குரிய சமிக்ஞை என்பதையும் ஜனாதிபதி மஹிந்த  கவனத்திற்கொள்வார் எனவும் நாம் நம்புகிறோம்.

இந்த வருட இறுதிப்பகுதிக்குள் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் சக்தி கொண்டு நாம் வெற்றி பெறுவோம் என்றும் கூறினார்.

No comments

Powered by Blogger.