நரேந்திர மோடியின் வெற்றி, முஸ்லிம்களுக்கு எதிரான தீர்ப்பு - ஞானசார தேரர் பிரகடனம்
(நஜீப் பின் கபூர்)
சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் பொதுபல சேனா பத்திரிகையாளர் மாநாடொன்றை நடாத்தியது. வழக்கம்போல் பாதாளத் தலைவர் ஒருவர் நடந்து கொள்வது போன்று ஞானத்தார் அங்கு அச்சுறுத்தல்களைச் செய்து கொண்டிருந்தார். அவர் பத்திரிகையாளர் மாநாடு பற்றியோ அவர் அங்கு நடந்து கொள்கின்ற ஒழுங்கு முறை பற்றியோ எமக்கு ஏதும் சொல்வதற்கில்லை. பௌத்தத்தின் மீதுள்ள பற்றின் காரணமாக அவரது அந்த கொதிப்பு, என்று நாம் எடுத்துக் கொள்ள முடியும். அதைப் பற்றி நாம் இங்கு பேசவரவில்லை.
அங்கு நடந்த ஒரு சம்பவத்தை சொல்லி அவரது அறிவு மட்டக் கணிப்பை வாசகர்கள் செய்து கொள்ள முடியும்.
ஒரு பத்திரிகையாளர்..! முஸ்லிம்களுக்குத் தனியான நீதி மன்றம் ஒன்று காதி என்ற பெயரில் இந்த நாட்டில் இயங்கிவருகின்றதாம், அதில் எமது சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் ஏமாற்றப்பட்டு முஸ்லிம்களினால் மணம் முடிக்கப்பட்டு, பின்னர் கைவிடப்படுகின்றார்கள். அப்போது அவர்களின் காதி சட்டப்படி அந்த வழக்குகள் நடைபெறும். சாதாரண நீதி மன்றத்திற்கு பாதிக்கப்பட்டவர் தனது பிரச்சினையைக் கொண்டுவர முடியாது.
முஸ்லிம்களின் நீதி மன்றத்திற்கே கைவிடப்பட்ட பெண்கள் நீதிகேட்டுச் செல்ல வேண்டும். அப்படி நீதி கேட்டு அங்கு எமது பெண்கள் சென்று காதி நீதிபதி முன் அமர்ந்து விடயத்தை சொல்லும் போது அங்கிருக்கின்ற நீதிபதி அந்த சிங்களப் பெண் மீது மூன்று முறை முகத்தில் துப்பி விட்டுத்தான் வழக்கையே விசாரிக்கின்றாராம் என்று கிணற்றிற்குள் வாழ்கின்ற ஊடகத்தார் ஞானத்துக்குப் போட்டுக் கொடுக்க அப்படியா ஒரு நாட்டில் எப்படி இரு நீதிமன்றங்கள் செயல்பட முடியும் நான் இதனைத் தேடிப் பார்க்கின்றேன் என்று ஞானம் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சொல்லியது.
இதற்கு அன்று இந்த ஊடகவியலாளர் கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் சாட்சி. எனவே ஞானத்தார் எவ்வளவு தூரம் முஸ்லிம் விவகாரத்தில் விடயங்களைத் தெரிந்து வைத்திருக்கின்றார் என்பது புரிகின்றதா.
இதே போன்று முஸ்லிம்களின் குர்பான் விடயம் தொடர்பாக சிங்கள ராவய அமைப்பின் சார்பில் தொலைக் காட்சி கலந்துரையாடலில் பங்கு கொண்ட அந்த அமைப்பின் முக்கியஸ்தர். இப்படியும் ஒரு கருத்தை முன்வைத்தார். என்னிடத்தில் ஒரு மௌலவிதுமா சொன்னார் குர்பானுக்கு மாடு அறுப்பதாக இருந்தால் நன்றாக நெருப்பு கொழுத்தப்பட்ட ஒரு இருப்புத் தகட்டில் வெரும் காலுடன் நின்று கொண்டுதான் அந்த மாடுகளை அறுக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் அப்படி மாடு அறுப்பதில்லையே என்று அவரது அங்கலாய்ப்பு இருந்தது..
என்ன சகோதரர்களே வேடிக்கையான கதையாக இருக்கின்றது என்று யோசிக்கின்றீர்களா? இவர்களுக்கு இது விடத்திலுள்ள அறிவுக்கு தெளிவு கொடுக்க எமது சமூகத்தில் ஏதாவது ஏற்பாடுகள் இருக்கின்றதா? அல்லது இது போன்ற நிகழ்ச்சிகளை எமது சமூகத்தில் எத்தனை போர் அவதானிக்கின்றார்கள் - பார்க்கின்றார்கள். நாடகத்துக்கும் சினிமாவுக்கும் தானே நமது சமூகத்தில் மவுசு என்றால் சமூகத்திற்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்!
இந்தக் கட்டுரையாளனுக்கு இப்படி ஒரு கற்பனையும் இந்தக் குறிப்பை முன்வைக்கின்றபோது தோன்றுகின்றது. தம்புள்ளை பள்ளிவாயில் நான் சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே அந்த இடத்தில் இருந்து வருகின்றது என்று, அமைச்சர் ஜனக தென்னகோன் ஆதாரபூர்வமாக அடித்துக் கூறி இருக்கின்றபோது, தம்புள்ளை பள்ளி சட்ட விரோதாமான காணியில் அமைந்திருக்கின்றது என்று நமது கலீல் மௌலவியும் கூறுவது போன்று ஏதாவது ஒரு உலமா குர்பான் விடயத்திலும் போட்டுக் கொடுத்திருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகின்றது. தம்புள்ளை பள்ளி விவகாரத்தில் இதன் பின்னர் இந்தக் கோடாறிக் காம்பை ஆதாரம் காட்டித்தான் அதுகள் இதற்குப் பின் பேசும். கலீல் மௌலவிதுமா பேச்சுக்கு இன்று வரை நமது உலமா சபை மூச்சு விடாமல் இருப்பது அவர் கூற்றுக்கு வழங்குகின்ற அங்கிகாரமா என்று கேட்கத் தோன்றுகின்றது.
இப்போது மோடி வெற்றிக்கு வாழ்த்துக் கூறும் ஞானத்தாருக்காக இந்தக் குறிபைப் பதியலாம் என்று தோன்று கின்றது.
குஜராத் வன்முறைகள் விடயத்தில் முஸ்லிம்களுக்கு மோடி மீது ஒரு சந்தேகப் பார்வை இருப்பது உண்மைதான். ஆனால் இந்தியாவின் சுதந்திரமான நீதித்துறை அவரைக் குற்றவாளியால்ல என்று தீர்ப்புச் சொல்லி விட்டது. அடுத்து மோடி மிகத் திறமையான பேச்சாற்றல் காரர். ஒரு கட்டத்தில் குஜராத் வன்முறைக்கு நான் அணுவளவேனும் தொடர்பு இருக்கின்றது என்று எவராவது நிரூபித்தால் என்னை அவர்களுக்கு சந்தியில் நிருத்தித் தூக்கிலிடுவதற்கான அனுமதியை நான் எழுத்து மூலம் கொடுக்கத் தயாராக இருக்கின்றேன், என்று தேர்தல் மேடைகளில் பேசி இருந்தார்.
நடந்து முடிந்த இந்தியத் தேர்தலை மேலோட்டமாக வைத்து ஞானத்தார் எந்த விதமான தகவல்களையும் தெரிந்து கொள்ளாமல் முஸ்லிம்கள் மீது அவருக்குள்ள காட்புணர்ச்சியில்தான் இப்படி மோடியை வாழ்த்தி சந்தோசப்பட்டுக் கொள்கின்றார்.
நடந்து முடிந்த தேர்தலில் தேசிய அளவில் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடிய தொகுதிகள் 140 வரை. இதில் அனேகமான இடங்களில் முஸ்லிம்கள் 40 முதல் 79 சதவீத வாக்குகளை மோடிக்கு வழங்கி இருக்கின்றார்கள். அதற்கு அடுத்தபடியாகத்தான் காங்கிரஸ் ஆம் ஆத்மி பிராந்தியக் கட்சிகள், சில்லரைக் கட்சிகள் என்று வாக்குகள் பிரிந்திருக்கின்றது. என்று இந்தியத் தேர்தல் கணிப்பீடுகளை ஆதாரம் காட்டி ஆய்வாலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் மோடி அமைக்கின்ற அமைச்சரவையில் ஷh நவாஸ் ஹூசைன், அமித் ஷh பேன்றவர்களுக்கு இடம் வழங்கப்பட்ட இருக்கின்றது என்பதும், இந்தியத் தேர்தல் சட்டப்படி மோடி இரு தொகுதிகளில் போட்டியிட்டு வாரனாசி மற்றும் வதோதரா என்பவற்றில் வெற்றி பெற்றாலும் இதில் ஒன்றை அவர் தற்போது விட்டுக் கொடுக்க வேண்டும். அதன்படி அவர் வாரனாசியை தனது தொகுதியாகிக் கொண்டு வதோதரா தொகுதியை மோடி விட்டுக் கொடுக்கின்றார் இந்தத் தொகுதியில் 5 இலட்சம் அதிகப்படியான வாக்குகளை பெற்று மோடி வெற்றி பெற்றிருந்தார்.
மோடி விட்டுக் கொடுக்கின்ற தேர்தல் தொகுதிக்கு தனது சார்பில் அவர் நிறுத்துகின்ற வேட்பாளர் யார் என்று இந்த ஞனாத்தாருக்கு நிச்சயம் தெரியாது என்பதும் எமக்கு நன்றாகத் தெரியும். தனது நெருகிய சாகவான ஓரு முஸ்லிமைத்தான் இந்தத் தொகுதிக்காக மோடி தெரிவு செய்திருக்கின்றார்.
எனவே இந்த நாட்டு முஸ்லிம் சமூகம் ஞானத்தின் விடயத்தில் அறிவுபூர்வமான பிரச்சினைகளை அணுக வேண்டுமே தவிர அவரது ஸ்டைலில் நடந்து காரியத்தைக் கொடுத்துக் கொள்ளக் கூடாது. நாம் வழக்கமாகச் சொல்வது போன்று ஞானம் ஒரு அறிவுபூர்வமான மனிதன் அல்ல எவேதான் அவருடன் வாதம், கீதம் ஏதும் இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்திற்கு அவசியப்பாடாது முற்போக்கு எண்ணங் கொண்ட பெரும்பான்மை பௌத்த சமூகத்துடன் நல்லுறவுடனே ஞானத்திற்கு பதில் கொடுக்க வேண்டும். அதற்கு பெரும்பான்மை சிங்கள சமூகம் முஸ்லிம்களுடன் கைகோர்த்துக் கொள்ள தயாரக இருக்கின்றது.
குதிரைக்கு இறைவன் கொம்பைக் கொடுக்கவில்லை என்பது போன்று ஞானத்திற்கு நல்ல வேலை அறிவு போய்ச் சேரவில்லை போலும்.
வாசகர்களுக்கு நன்றி
.jpg)
fir awn try kill moosa with black magic grop.
ReplyDeletefinally black magic group beame against with fir awn.
samething will happend in srilanka.insha allah.....
100% CORRECT...
ReplyDeleteதேவைக்கு ஏற்றாற்போல் பேசுவதுதான் பச்சோந்தியோ?
ReplyDeleteதேர்தலில் வெல்ல முன் மோடி ஒரு கேடி... வென்றதன் பின் அவருக்கும் குஜராத் சம்பவத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லவே இல்லை என்பது போல் கதை? எங்க போகுது எங்க சமூகம்....
கடைசியா மோடி முஸ்லிம்களுக்கு எதிரானவர் அல்ல என்பது போன்று எழுதியுள்ளார் கட்டுரையாளர்...
ReplyDeleteஞான சேரருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்...
நீங்களும் விளக்கம் இல்லாமத்தான் பேசுறீங்க
Please Jiff0777 any how he won as Indian prime minister therefore please wait, Even oruvan eppadi aarsikku warukiran enru parppatai wida evan evvaru aalkiran enru parppathey puttisalitthanam
ReplyDelete