முஸ்லிம்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவில்லை - அரசு பாராளுமன்றத்தில் அறிவிப்பு
இலங்கையில் சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்கள் மீது அச்சுறுத்தல்களோ, தாக்குதல்களோ இல்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு, பிரதி பௌத்த சாசன அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தன பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் முஸ்லிம்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார். எனினும், மத முரண்பாடுகள் தொடர்பில் யாரும் கேள்வி எழுப்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சரியான முறையில் மதத்தை பின்பற்றுவோரை மதம் மாற்ற முடியாது என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

அப்போ இந்த சந்தர்ப்பத்திலும் எமது தலைவர்கள் ஊமையர்களதானா?
ReplyDeleteதேர்தல் வந்துவிட்டால் வாய் கிளியப் பேசுபவர்கள் எல்லாம் எங்கே?
அரசாங்கத்தோடு சேராமலேயே இருந்திருக்கலாம் என்று பேசியவர்கள் எங்கே?
மக்கள் மன்றில் வீரனாக அமைச்சரவையில் கோளையாக ஊருக்குள்ள அவனொருத்தர நான் சொல்லமாட்டேன்.
எங்கே எமது மதிப்பு மிக்க தலைவர்கள்.....??? அரசாங்கத்தின் இந்த அறிக்கைக்கு நீங்களும் 'ஆமா' போடுகிறீர்களா....?? இரண்டு கடையெறிப்புச் சம்பவங்கள் யாருக்கு எப்படி நேர்ந்தது. பேச்சாற்றல் மிக்க அஸ்வர், பௌசி மற்றும் வீரவசனம் பேசும் ரவுப் ஹக்கீம் ஆகியோர் இந்த அறிக்கை வெளியாகும் போது எங்கே இருந்தார்கள...??
ReplyDelete