Header Ads



'மத முரண்பாடுகள் தொடர்பிலான செய்தி பிரசுரத்தின் போது, ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்'

மத முரண்பாடுகள் தொடர்பிலான செய்தி பிரசூரத்தின் போது ஊடகங்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டுமென பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக ஊடகங்களினால் வெளியிடப்பட்டு வரும் செய்திகள் மத முரண்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சில தரப்பினர் மத முரண்பாடுகளை தோற்றுவிக்க ஊடகங்களைப் பயனப்டுத்திக்கொள்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன மற்றும் மதக் குரோதங்களை தூண்டும் வகையில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் மறைமுகமாக மத முரண்பாடுகளை தூண்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட்டு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழியமைக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். gtn

2 comments:

  1. ஆமாம்.... சரியாகச் சொன்னார். (கசினோவுக்கு ஆதரவாக அரசுக்கு 'ஹலால்' உத்தரவாதம் வழங்கிய) பைசர் முஸ்தபா அவர்கள்.....??? இதன் பின்னர் பள்ளிவாசல் உடைப்புக்கள் பத்திரிகைகளில் வெளிவராமல் 'இருட்டடிப்பு' செய்யப்படும். அப்போதுதான் இவருக்கு நிம்மதியாக தூங்க முடியும்.

    ReplyDelete
  2. நல்ல விடயம்தான், டயலொக் விடறத்த நிறுத்திட்டு. கொஞ்சம், முஸ்லிம்களுக்கு நடக்கின்ற அக்கிறமங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிந்தால் செய்ங்க சார், முஸ்லிம்களுக்கு நடக்கும் அனியாயங்களை மட்டும் ஜனாதிபதிக்கு கண்ணும் தெரிவதில்லை காதும் கேட்பதில்லை அல்லாஹ் இதை நிரந்தரமாக்கி வைப்பானாக. ஆமின்.

    ReplyDelete

Powered by Blogger.