Header Ads



எந்த பள்ளிவாசலுக்கும் செல்வதற்கு எனக்கு தடை விதிக்கப்படவில்லை, தடை விதிக்கவும் முடியாது - அஸ்வர்


எந்த பள்ளிவாசலுக்கும் செல்வதற்கு எனக்கு தடை விதிக்கப்படவில்லை. அவ்வாறு தடை விதிக்கவும் முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார்.

தேசிய பொது வழிகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய காமினி ஜெயவிக்ரம பெரேரா, கெசினோ சூதாட்ட சட்டத்துக்கு அஸ்வர் எம்.பி. ஆதரவு வழங்கியதாகவும் அவருக்கு பள்ளிவாசல்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இது தொடர்பில் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்த அஸ்வர் எம்.பி., அவ்வாறு எந்த பள்ளிவாசலும் தடை விதிக்கவில்லை எனவும் அவருக்கே (காமினி ஜெயவிக்ரம பெரேரா) பன்சலைகளுக்கு செல்ல தடை உள்ளதாக தெரிவித்தார்.

இஸ்லாத்துக்கு எதிராக அவர் கருத்து தெரிவிப்பதாக தெரிவித்த அஸ்வர் எம்.பி., சபையில் தவறான கருத்துக்களை தெரிவிப்பதாக கூறினார்.

4 comments:

  1. On one can prevent mentally ill people from entry of any mosque in Islam

    ReplyDelete
  2. 'கசினோ'வுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்த அஸ்வர் போன்றவர்களின் கீழ்த்தரமான செயல்களால் இன்று மாற்று மதத்தலைவர்களே தைரியமாக கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.

    ReplyDelete
  3. கேவலத்திலும் கேவலம். பிற மதத்தவர்களே வகைவகையாக கிண்டல் செய்யும் இழி நிலையில் அஸ்வர். அவர் சொல்வதிலும் நியாயமுண்டு. உங்கள் ஈமானைச் சுத்தப்படுத்தாமல் பள்ளிவாசலுக்குச் செல்வதில் பயனில்லை தான்.

    ReplyDelete
  4. azwar do you paray towards kibla or temple trees.....

    ReplyDelete

Powered by Blogger.