Header Ads



பாகிஸ்தான் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக கிராண்ட்பிளவர் நியமனம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக கிராண்ட் பிளவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் பேட்ஸ்மேனான இவர் ஆண்டி பிளவரின் சகோதரர் ஆவார். அவர் இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார்.

பாகிஸ்தான் அணி உலக கோப்பையை வெல்லும் நோக்கில் கிராண்ட் பிளவர் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர் கூறியதாவது:–

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக கிராண்ட் பிளவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் 2 ஆண்டுக்கு அவர் பேட்டிங் பயிற்சியாளராக இருப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

43 வயதான கிராண்ட் பிளவர் 67 டெஸ்ட் மற்றும் 221 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார். பாகிஸ்தான் அணிக்கு சமீபத்தில் வாக்கர் யூனுஸ் தலைமை பயிற்சியாளராகவும், முஸ்தாக் அகமது சுழற்பந்து பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

No comments

Powered by Blogger.