இயக்கங்கள் தேவைதானா..?
Ash Sheik M Z M Shafeek. UK.
இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கிடையில் செயற்படுகின்ற மார்க்கம் சார்ந்த இயக்கங்கள் அனைத்தும் ஒழிக்கப் படவேண்டும் என்ற கருத்து அண்மைய காலங்களில் சற்று கூடுதலாகவே சொல்லப் படுவதை கண்டும் கேட்டும் வருகிறோம். என்னைப் பொறுத்த வரை எமது நாட்டிலும் கூட இயக்கங்களால் ஏராளமான நலவுகள் இடம் பெற்றுள்ளன என்பதைத் தெளிவாக சுற்றிக் காட்ட முடியும். உதாரணத்துக்கு : தவ்ஹீத் அமைப்புக்களை எடுத்துக் கொண்டால் அவர்களின் பிரச்சாரங்கள் தான் நாட்டு முஸ்லிம்களிடம் குடிகொண்டிருந்த ஏராளமான பித் அத்துக்களும் (ஏன் ஷிர்க்கும் கூட ) இல்லாமல் போய் மக்களிடம் நல்ல தெளிவு ஏற்படக் காரணமாயிற்று.
தப்லீக்ஹ் ஜமா அத்தை எடுத்துக் கொண்டால் சமூகத்தில் ஆத்மீகத் துறையில் மிகுந்த ஈடுபாடு உண்டாவதற்கு அவர்களின் முயற்சிகள் பாரிய பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றன. மிகவும் கெட்டுப் போய் சீரழிந்த பலர் கூட தப்லீக்ஹ் இல் ஈடு பட்டு தம்மைத் திருத்திக் கொண்ட ஏராளமான சந்தர்ப்பங்களை நாம் காணுகிறோம். அதே போன்று ஜமா அத்தே இஸ்லாமியை எடுத்துக் கொண்டால் பொது சேவைகளில் அவர்கள் ஏனைய எல்லோரை விடவும் கூடுதல் கவனம் செலுத்தி வருவதோடு முஸ்லிம்களின் கல்வி, அரசியல் உரிமைகள், முஸ்லிம்களின் பொருளாதார முன்னேற்றத்தில்விழிப்புனர்வை ஏற்படுத்தல் போன்ற பல நற் காரியங்களை செய்து வருகிறார்கள். ஒப்பீட்டளவில் பார்ப்போமாக இருந்தாலும் எந்த இயக்கங்களோடும் தொடர்பில்லாமல் இருக்கும் பொது மக்களை விட மேற்சொன்ன ஏதோவொரு இயக்கத்தோடு தொடபுள்ளவர்களிடம் தான் ஆத்மீக ஈடுபாடுகளும் மார்க்க அறிவும் சமூக அக்கறையும் கூடுதலாக இருப்பதை காணுகிறோம்.
பிரச்சினை எங்கே இருக்கின்றதென்றால் (01) இயக்கங்கள் தமது இயக்கத்தை வளர்ப்பதர்காகவின்றி புனித தீனுல் இஸ்லாத்தை வளர்பதற்காக மட்டும் இக்ஹ்லாசோடு பாடு பட வேண்டும். (02) இயக்கங்களால் பிரச்சினை ஏற்படுவதற்கு மிகப் பிரதானமான இன்னுமொரு காரணம் அவ் இயக்கங்களில் உள்ள குறிப்பிட சில நிதானமற்ற (இயக்க வெறியர்களும்) அவ் இயக்க வெறியர்களுடன் முட்டி மோதிக் கொள்ள செல்லுகின்ற நிதானமற்ற ( இயக்க எதிப்பு வெறியர்களுமே ) என்பதை தொடர்ந்து அவதானித்து வருகிறோம். ஆகவே அவ்வாறான இருவகை வெறியர்களையும் தத்தம் இயக்கங்கள் கட்டுப் படுத்துமாக இருந்தால் (அல்லது அவ்வாறு கட்டுக்கடங்காத போது அப்படியானவர்களை தத் தம் இயக்கங்களை விட்டும் விளக்கி வைக்குமாக இருந்தால் இன்ஷா அல்லாஹ் ஆரோக்கியமானதொரு நிலையைக் காணலாம்.
(03) அவ்வாறு விளக்கி வைக்கப் படும் இரு வகை வெறியர்களுக்கும் வேறு எந்த இயக்கமும் தூண்டில் போட்டு இழுத்து அடைக்கலம் கொடுக்காமல் அவர்கள் நிதானப் போக்கை அடையும் வரை அவர்களை அப்படியே விட்டு வைக்க வேண்டும். நான் அறிந்த வரை இம்மூன்று விடையங்களும் பின்பற்றப் படுவதோடு இயக்கங்களுக்கிடையான கருத்து வேற்றுமைகள் யாவும் அவ் இயக்கங்களின் உயர் மட்ட உருப்பினர்களுகிடையில் மாத்திரம் மிகவும் கண்ணியமாகவும் அறிவு பூர்வமாகவும், ஆரோக்கியமானதாகவும் அமைதியாகவும் இக்ஹ்லாசுடனும் அலசப் படுமாக இருந்தால் இயக்கங்களால் 100% தம் பங்களிப்பை முஸ்லிம் சமூகத்துக் செய்ய முடியுமாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்.
ஆகவே இயக்கங்கள் தேவையில்லை, இயக்கங்களை ஒழிக்க வேண்டும் என்பதை விட மேற்சொன்ன விடையங்கள் இயக்கங்களால் பின்பற்றப் படுமாக இருந்தால் சமூகத்தில் பாரிய மாற்றங்களை எதிர் பார்க்கலாம் என நினைக்கிறேன். மேலே குறிப்பிட்ட அணுகுமுறைகளைக் கையாளாமல் இயக்கங்கள் இது காலவரை பயணித்திருக்கின்ற போதே சமூகத்தில் (குழப்பங்கள் அவ்வப்போது ஏற்பட்டிருந்தாலும்) இயக்கங்களால் சமூகத்தில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை நாம் அவதானிக்கின்றோம். அப்படியாயின் குறித்த அணுகுமுறைகளை கையாள்வதுடன் இவ் இயக்கங்கள் பயனிக்குமாக இருந்தால் அது சமூகத்தில் எவ்வளவு பாரிய மாற்றங்களைக் கொண்டு வரும் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
குறிப்பு : பொதுவான சமூகப் பணிகளைச் செய்யும் போது (மட்டுமாவது ) இயக்கங்கள் தத்தம் இயக்கங்களை அடையாள படுத்தும் பெனர்களையோ, பதாதைகளையோ காற்சிப் படுத்திக் கொண்டு களம் இறங்காமல் முஸ்லிம் உம்மஹ் என்ற அடையாளத்துடன் எல்லோரையும் சேர்த்துக் கொண்டு களம் இறங்கினால் பொதுப் பணிகள் அதிகம் நடை பெற வாய்ப்புள்ளதுடன் இது இந்த இயக்கத்தால் முன்னெடுக்கப் படுகிறது, அது இந்த இயக்கத்தால் முன்னெடுக்கப் படுகிறது என்ற எண்ணம் மக்களிடமிருந்து களையப் பட்டு எல்லோரும் சமூகப் பணிகளில் களம் இறங்க வாய்ப்பாக அமையும்.
இயக்கங்கள் மேலும் சிறந்த முன்னேற்றங்களைக் காண்பதற்கு வேறு சில கானங்களும் இருக்கலாம்.தெரிந்தவர்கள் இங்கே குறிப்பிடுங்கள். எனக்கு தோன்றிய காரணங்களை இங்கே குறிப்பிட்டுள்ளேன். ஆகவே தவறுகள் களையப் பட வேண்டுமே தவிர இயக்கங்களை ஒழிக்க வேண்டும் என்பது பிழையான வாதம் என நினைக்கிறேன். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
.jpg)
மேற்ச் சொன்ன இயக்கங்கள் வந்ததன் பின்னால் நாடு குட்டிசுவராகியதுதான் மிச்சம், சுன்னத்துவல் ஜமா அத் கூட்டம் மட்டும் இருந்த வேளை இப்படி பித்னாக்கள் வந்ததில்லை என்பது 1000 வருடம் கண்கூடாக கண்ட உண்மை, தாடியும் ஜுப்பாவும் தான் வந்ததே ஒளிய கல்பு சுத்தமாகவில்லை ஜமா அத் தெருச்சண்டை கூடியதே ஒளிய வீட்டில் நிம்மதி இல்லை! ஷிர்க் கபுரு என்றும் கல்லறை என்றும் ஓதியதே ஒளிய அது இதுதான் என்று சொன்னவனை பைத்தியம் என்று சொன்னவர்கள் தான் இன்றைய நவீன ஜமா அத்துக்கள்!!!
ReplyDelete