விமல் வீரவன்ஸவின் முதுகெலும்பு பற்றி நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளனர் - மொஹமட் முஸ்ஸமில்
முதுகெலும்பு அமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு உள்ளதா அல்லது ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத்திற்கு உள்ளதா என்பதை முழு நாடும் அறியும் என தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கும் அளவுக்கு அமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு முதுகெலும்பில்லை என விஜித ஹேரத் தெரிவித்திருந்தமை தொடர்பில் பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் குறைபாடுகள் இருப்பதாக கூறி ஜே.வி.பி. அதற்கு ஆதரவாக வாக்களிப்பதாக கூறியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்க ஜே.வி.பிக்கு முதுகெலும்பில்லை என்பதே இதன் அர்த்தமாகும்.
அரசாங்கத்தையும் ஐக்கிய தேசியக் கட்சியையும் ஒரே நேரத்தில் எதிர்க்கும் முதுகெலும்பு தேசிய சுதந்திர முன்னணிக்கு உள்ளது.
விஜித ஹேரத்தின் முதுகெலும்பை பற்றியும் விமல் வீரவன்ஸவின் முதுகெலும்பு பற்றியும் நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.
.jpg)
இவரின் இந்த 'முதுகெலும்பு' கதை சுப்பர்.......???
ReplyDeleteஅரசியலில் எதுக்கு முதுகெலும்பு எதுக்கு சுய மரியாதை.
ReplyDelete