'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் பாராளுமன்றத்தை பணயமெடுக்கும் சாத்தியம்'
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தை பணயமாக எடுப்பதற்கான சாத்தியம் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகத்ததாச மைதானத்தில் நேற்று இடம்பெற்ற அந்த முன்னணியின் இரண்டாவது பேரவைக் கூட்டத்தின் போதே அமைச்சர் இந்த கருத்தை முன்வைத்தார்.
இதேவேளை, கசினோ போன்ற சூதாட்டம் மற்றும் துர்செயல்கள் உள்ளடங்கும் வகையில் எந்தவொரு முதலீடுகளுக்கும் வரி சலுகை வழங்கப்படக் கூடாது என்பது உள்ளிட்ட 12 பிரேரணைகள் தேசிய சுதந்திர முன்னணியினால் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, அரசியலமைப்புக்கு புறம்பாக பிரிவினைவாத கருத்துக்களை பரப்பிவரும் பல்வேறு இயக்கங்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தராதரம் பாராது சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் அந்த பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
.jpg)
Post a Comment