இந்தியாவில் இதுவரை நடக்காத சம்பவம்..!
இந்தியா - உத்திரபிரதேச மாநிலத்தில் பகுஜன்சமாஜ்கட்சி (மாயாவதி )யை சேர்ந்த நிர்வாகி ஒருவரை எரித்து கொன்று தனது உயிரையும் ஒருவர் மாய்த்து கொண்டார். டி.வி.,யில் ஒளிபரப்பும் அரசியல் விவாத நிகழ்ச்சிக்காக பார்க் ஒன்றில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது இந்த துணிகரசம்பவம் நடந்துள்ளது. இது உ .பி., அரசியல்வாதிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.
லக்னோவில் இருந்து 160 கி.மீ., தொலைவில் உள்ளது சுல்தான்பூர். இங்குள்ள ஒரு பூங்காவில் தூர்தர்ஷன் டி.வி., விவாத நிகழ்ச்சி ஒன்றை ரிக்கார்டு செய்யும் நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. இதில் மாயாவதி கட்சி நிர்வாகி கம்ரூஷாம்மா பாவ்ஜி உள்ளிட்ட சில அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இந்நேரத்தில் சுமார் 150 பேர் கூடி இருந்த கூட்டத்தில் இருந்து ஒருவர் உடலில் தீ பற்றியபடி எழுந்தார். இவர் கையில் இருந்த பெட்ரோலை தம் மீது ஊற்றி மேடை நோக்கி சென்றார். இங்கு இருந்த கம்ருஷாம்மாவை இறுக கட்டி தழுவினார். இதில் இருவரும் தீயில் எரிந்ததை எல்லோரும் கண்முன் பார்க்கத்தான் முடிந்தது. காப்பாற்ற முயற்சித்த 2 பேர் காயமுற்றனர். சம்பவம் நடந்த சில நிமிடங்களில் அந்த நபர் இறந்தார். படுகாயமுற்ற கம்ருஷா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தீயுடன் வந்த நபர் பெயர் துர்கேஷ்குமார் சிங் என தெரிய வந்துள்ளது. இவருக்கு 9 குழந்தைகள் இருப்பதாகவும், இவர் என்ன காரணத்திற்காக இந்த கொலையில் ஈடுபட்டார் என்பதும் மர்மமாக உள்ளது.
இறந்த கம்ரூஷாம்மாவின் சகோதரர் காலிகுர்சம்மா கூறுகையில், இது அரசியல் ரீதியான பகை காரணமாக நடந்துள்ளது. போலீசார் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
.jpg)
Post a Comment