16 முஸ்லிம் எம்.பி.க்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் - 2 பேர் நழுவினர்
ஏப்ரல் 25 , 2014
அதிமேதகு ஜனாதிபதி,
ஜனாதிபதி அலுவலகம்,
இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசு,
அலரி மாளிகை,
காலி வீதி,
கொழும்பு – 03
அதிமேதகு ஜனாதிபதி அவர்களே
பொதுபல சேனா, சிங்கள ராவய மற்றும் ராவண பலகாய ஆகிய சில பௌத்த தீவிரவாத சக்திகளால் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் வெறுப்பு பிரசாரங்கள், மிரட்டல்கள் , அச்சுறுத்தல்கள் குறித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் இதனை உங்கள் கவனத்திற்கு கொண்டு வரவிரும்புகின்றோம்.
முஸ்லிம்களது வணக்க ஸ்தலங்கள், ஹலால் மற்றும் உடை உரிமைகளுக்கு எதிராக செயற்பட்டு வந்த மேற்படி தரப்புக்கள் இலங்கை வரலாற்றில் மிகமோசமானதொரு நிகழ்வாக கருதப்படுகின்ற விடுதலைப்புலிகளினால் 1990 களில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களது மீள்குடியேற்றத்திலும் இன்று தலையிட்டுள்ளனர்.
ஜனாதிபதி அவர்களே 'பழைய அகதிகள்' என இம்மக்கள் முத்திரையிடப்பட்டுள்ளதுடன் அரசாங்கம் மற்றும் யு.என்.எச்.சி.ஆர் இன் நிதியுதவி உட்பட சர்வதேச முகவர் நிலையங்களினால் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு மீள்குடியேற்ற திட்டத்திலும் இவ் வடமாகாண முஸ்லிம்கள் உள்ளடக்கப்படவில்லை.
இம்மக்களது மீள்குடியேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க எந்தவொரு உதவியும் இதுவரை மேற்கொள்ளப்படாததன் காரணமாக முஸ்லிம் சிவில், மத மற்றும் அரசியல் தலைவர்கள் முஸ்லிம் நாடுகளினதும் தனவந்தர்களினதும் உதவியை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். சில நன்கொடையாளர்கள் மேற்படி முயற்சிக்கு சாதகமாக பதிலளித்துள்ளதுடன் அவர்களது உதவியினை கொண்டு சில வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மேற்படி வீடுகள் அனைத்தும் மீள்குடியேற்றத்திற்கான ஜனாதிபதியின் விஷேட செயலணி மற்றும் மாவட்ட செயலகத்தின் காணி பகிர்ந்தளிப்பு விதிமுறைகளுக்கு அமையவே நிர்மாணிக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த மீள்குடியேற்றம் வில்பத்து தேசிய சரணாலயத்தினுள் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அது சட்டத்திற்கு முரணானது எனவும் பொதுபல சேனா அமைப்பும் சில ஊடகங்களும் கூறி வருகின்றன.
கடந்த 23 வருடங்களாக இடம்பெயர்ந்து மறங்கடிக்கப்பட்ட நிலையில் இலங்கையின் பல பிரதேசங்களிலும் வாழ்ந்து இவ்விடம்பெயர்ந்த மக்கள் மீது மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்களை நிறுத்துவதற்கு உடனடியாக முன்வருமாறு அதிமேதகு ஜனாதிபதி அவர்களை தாழ்மையுடன் வேண்டி இத்தாள் கையொப்பமிடுகின்றோம்.
உங்கள் தாழ்மையுள்ள
...
.jpg)
Fawzi also said that he didn't sign off this letter.
ReplyDelete