Header Ads



102 வருட சிறை தண்டனையும், 1,.200 கோடி ரூபா அபராதமும் விதித்த கொழும்பு நீதிமன்றம்

உள்நாட்டு இறைவரி திணைக்கள வெட் வரி பிரிவு முன்னாள் பிரதி ஆணையாளர் ஞானசிறி டி சொய்சாவுக்கு 102 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வெட் எனப்படும் பெறுமதி சேர் வரி தொடர்பில் தென்னாசியாவில் பாரிய மோசடியாக கருதப்படும் 357 கோடி ரூபாவை மோசடி செய்த  குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவருக்கு 102 வருட சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இதுதவிர, அவருக்கு ஆயிரத்து 200 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரி திணைக்கள முன்னாள் பிரதி ஆணையாளருக்கு எதிராக 34 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன், தலா ஒரு குற்றச்சாட்டுக்கு 3 வருடங்கள் வீதம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.