Header Ads



அரசில் இருப்பதா என முஸ்லிம் அமைச்சர்களும், எம்.பி.க்களும் தீர்மானிக்க வேண்டியது அவசியம்

பொதுபல சேனா இயக்கத்திற்கு அரசாங்கமு ஆதரவளிக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

பௌத்த மதத்திற்கு களங்கம் விளைவிக்க சர்வதேச சக்திகள் பொதுபல சேனா இயக்கத்தை பயன்படுத்தி வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சிக்குள் அங்கம் வகிக்கும் சில தரப்பினர் பொதுபல சேனாவை தூண்டிவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பொதுபல சேனாவை தூண்டி விடுவதன் மூலம் மக்களின் வாழ்க்கைச் செலவு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை திசை திருப்ப முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சியின் மிக முக்கியமானவர்கள் பொதுபல சேனாவிற்கு பக்கபலமாக செயற்பட்டு வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுபல சேனா மற்றும் ஏனைய கடும்போக்குடைய இயக்கங்கள் உள்நாட்டில் உருவானவை எனவும் சர்வதேச சக்திகளுக்கு தொடர்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மை மக்களை மூன்றாம் தரப் பிரஜைகளாக நடாத்தும் இந்த அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா இல்லையா என்பதனை ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானிக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2 comments:

  1. சரியான கருத்தும் வேண்டுகோளும்.எங்கே செய்ய்யப்போகிறார்கள் நம் அமைச்சர்கள். பொதுமக்களாகிய நீங்கள்தான் இதனை முஸ்லிம் அரசியல் வாதிகளை அரசிலிருந்தும் விலகவைக்க வேண்டும்.

    சும்மா பொய்க்கு கூத்தடிக்க முடியுமென்றால்,உண்மையான தேவைக்கு ஏன் கொஞ்சம் கூத்தடிக்க முடியாது.அமெரிக்காவுக்கு எதிராகவும் மான்புமிகு கௌரவ ஜனாதிபதிக்கு ஆதரவாகவும் பொய்க்குதானே ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தீர்கள்?குறிப்பாகா கல்முனை வால் அப்பாவி மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தும் பிரபல்யம் அடைந்துவிட்டார்கள்.நிச்சயம் அது உண்மை முஸ்லிம்களில்லை என்பது தெறியும்,கல்முனை கடற்கரைப்பள்ளியை சார்ந்த சில கப்ர் வணங்கிகளின் வேளை அது.

    எப்படியோ, முஸ்லிம் அரசியல் வாதிகளை அரசிலிருந்து விடுபட வைக்கும் வற்புருத்தலான ஆர்ப்பாட்டமொன்று இப்போ அவசியாம் செய்து காட்டுங்கள்.

    மீண்டும் நாங்களும் சொல்லுகிறோம்,ரவி கருனானாயக்க சொன்னதுபோன்று, அதாவது,நாட்டிலுள்ள உள்பிரச்சினைகளை (விலைவாசி அதிகமும்,வாழ்க்கையில் ரொம்ப கஷ்டங்களும்) விட்டும் மக்களை திசை திருப்பவே இந்த பலசேனாக்களின் உருவாக்கம்,இப்படித்தான், முன்பு கிரீஸ் மனிதனும் வந்தான்.ஆனால்,மக்களிடம் அகப்பட்டு,திட்டம் தோல்வியடையவே,அதனை கைவிட்டார்கள்,மீண்டும் ஒரு புதிய கோணலில் வேறொன்று வரும் என்று அன்றே நாங்கள் கூறியிருந்தோம்,அதுதான் பொதுபல சேனா. நம்புங்கள்,அவை அரசின் ஆசிர்வாதத்தில் இயங்குகிறது என்று நம் எல்லோருக்கும் தெறியும்.இன்னுமேன் தயக்கம்?

    ReplyDelete
  2. You r correct, but these people always behind money and looking benifit from government, not a social worker to the comunity, example you can see last parliament election in kandy , old unp mp jump to the government party what are the benifits for him and what are the benifit for people or community ...?

    ReplyDelete

Powered by Blogger.