'கசினோ என்ற பதம் உள்ளடக்கப்பட்டிருந்தால் எதிர்த்து வாக்களித்திருப்போம்' ஹசன் அலி
வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமையும் எதிர்ப்பது என்றே அர்த்தப்படும் என தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி கசினோ என்ற பதம் உள்ளடக்கப்பட்டிருந்தால் எதிர்த்து வாக்களித்திருப்போம் எனவும் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டு நிறைவேறியுள்ள இக்கட்டளை தொடர்பில் எமக்கு சந்தேகம் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்களின் கீழான கட்டளை வாக்கெடுப்பில் மு.கா. கலந்து கொள்ளாமை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இவ் கட்டளைக்கு நாம் வாக்களிக்காது இருந்தமை இதனை ஆதரிப்பதற்காகவோ அரசாங்கத்தை வலுப்படுத்தவோ அல்ல. முன்னர் இக்கட்டளை கொண்டு வந்த போது கசினோ என்ற பதத்தினை வலுப்படுத்தியிருந்தனர். எனினும் இம்முறை கசினோ என்ற பதம் அகற்றப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக வேறு மாற்று வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே நாம் வாக்களிக்காது இருந்தோம்.
வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதிருந்தமையும் எதிர்ப்பு என்றே அர்த்தப்படும். இதில் எம்மை விமர்சிக்கும் அளவில் பெரிய விடயமெதுவும் இல்லை. அதே போல் கசினோ என்ற பதம் குறிப்பிடப்பட்டிருக்குமாயின் நாம் நிச்சயமாக இதனை எதிர்த்தே வாக்களித்திருப்போம். கசினோ உள்ளடக்கிய சட்ட மூலம் கொண்டு வரப்படுமாயின் அதனை ஆதரிக்கப் போவதில்லை என்ற கருத்தினை ஆரம்பம் தொடக்கம் ஊடகங்களில் தெரிவித்து வந்தோம். இப்போதும் அதே முடிவிலேயே இருக்கின்றோம். சமூகத்தினை சீரழிக்கும் நோக்கம் எப்போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு இருந்ததில்லை.
மேலும் இக்கட்டளை நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் இக்கட்டளையில் எமக்கு சந்தேகம் உள்ளது. செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்களின் கீழான கட்டளை என இதனைக் கொண்டு வந்தாலும் இது எந்த அளவிற்கு உண்மையென்பது கேள்விக்குறியே. அதி சொகுசு ஹோட்டல்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இவற்றில் சூதாட்டம் தவிர்க்கப்படுவதென்பதும் நம்பக்கூடிய வகையில் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
.jpg)
பாராளுமன்றத்தில் என்ன வாக்கெடுப்பை அரசாங்கம் நடத்தப்போகிறது என்று கூடத்தெரியாதவர்கள் தான் இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கிறார்கள்.... அதுவும் நமது முட்டால்கள்.....???? இவரின் கருத்து வேடிக்கையாக உள்ளது.
ReplyDeleteஎதுக்கு ஏன்டா வேத்து சீனு ,ஜாதிக ஹெல உருமக்கு தெரிஞ்ச அளவு சரி இஸ்லாத பத்தி ஒங்களுக்கும் பாயேஸ் முஸ்தபா போன்றவருக்கு திரியமா போச்சி .
ReplyDeleteகுப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டலயாமாம்..... வாக்களிப்பில் கலந்து கொள்ளாது ஓடி ஒளிந்துவிட்டு அறிக்கை வேறு ...... இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல....
ReplyDeletevela kallikku pulla chaattu...... Ha Ha good joke is, he said meaning of not participating in the vote casting also like against to the issue.
ReplyDeleteBoss in which school u studied......
Don't think peoples are fools.
மாட்டு காங்கிரஸ் வாழ்க..... கித்துல் (பனை) மரத்துக்கு ஏரியவனுக்கும் ஒரு காரணம் இருந்துதாம்.
ReplyDeleteபிரச்சின என்னவென்றால கையில் உள்ளதை விட்டால் இனிமேல் பதவி என்பது நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அந்தளவு மக்களுக்கு செய்துள்ளார்கள். ஆக பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டுவதே பொழப்பாப் போச்சு. தைரியமா ஒரு இடத்தில நிக்கவே முடியாத தலைமை.
ReplyDeleteFoolish never mind, if others criticize their ignorant acts.
ReplyDeleteIt is clear now due to your deceptive politic under the main actor Rauf, SLMC,state of the affair became: “The way of deception” because fact speaks louder, if I am wrong pardon me.
ReplyDeleteIslam teaches to man kind that “Gambling is filth”. Whoever doing is committing sin. Now it is very clear beyond doubt that Muslim Congress is bunch of hypocrites. Who fit for none but well for lip service and deception?
The worst part is there are Shaikes; people who got degree in Islam and Hafez are full time party workers and misrepresenting Islam. Let community judge and leave this matter to God.
My appreciation goes to TNA, JVP and UNP as their actions in gumbling matches with teaching of Islam. Let me pray God grant them straight path and safe guard our community from threse SLMC hypocrites.
இவருக்கு லூசா அல்லது அப்படி நடிக்கிறாரா?
ReplyDeleteஅப்போ ஐ.நாவில் நடுநிலை வகித்த நாடுகளின் எண்ணிக்கையையும் பிரேரணைக்கு எதிராகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் ஜனாதிபதி கணக்குப்போட்டுக் காட்டிய நேரத்தில் நீங்கள் இந்தத் தத்துவத்தை அவிழ்த்து விட்டிருக்கலாமே..!
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
Eppa allam solluvega mudenge dane
ReplyDeleteOk ok muduga
ReplyDeleteIwar BABA...Simple
ReplyDeleteThotha baba
ReplyDelete