அகில இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவராக நசீமுதீன்
(எம்.எம்.ஏ.ஸமட்)
அகில இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவராக கொழும்பு ஹமீத் -அல் - ஹுசைனியா தேசிய பாடசாலையின்; அதிபர் என் ரீ. நசீமுதீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கல்வி அமைச்சின் விளையாட்டுப் பிரிவில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் சம்மேளத்தின் கூட்டத்;தில் இச்சம்மேளனத்தினால் இவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அகில இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள முதலாவது முஸ்லிம் இவரே என்பது சுட்டிக்காட்டத்தக்கது
அத்துடன், அகில இலங்கை பாடசாலைகள் குத்துச்சண்டை சம்மேளனத்தின் பிரதித் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ள அதிபர் நசீமுதீன்; கல்வி அமைச்சில் உதவிப் கல்விப் பணிப்பாளராகவும் அக்குரணை அல் -அஷ்ஹர் தேசிய பாடசாலையி;ன் அதிபராகவும் பணியாட்டியுள்ளார்.
அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், இலங்கை கல்வி நிருவாக சேவையின் உத்தியோகத்தராகவுள்ளதுடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் இளமாணி மற்றும் முதுமாணிப்பட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி முதுமாணிக் கற்கை நெறியையும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
Post a Comment