Header Ads



எழுச்சி பெறுகிறது JVP, முன்னேறுகிறார் சரத் பொன்சேக்கா, UNP க்கு வாக்குகள் அதிகரிப்பு


தென் மாகாணத்தின் மூன்று மாவட்டங்கிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.

இதுவரையில் தென் மாகாணத்தின் ஹம்பாந்தொட்டை, மாத்தறை மற்றும் காலி ஆகிய மூன்று மாவட்டங்களின் முழுமையான பெறுபேறுகளும் வெளியாகி இருக்கின்றன.

இதில் காலி மாவட்டத்தின், காலி தேர்தல் தொகுதியைத் தவிர, ஏனைய அனைத்து தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.

காலி மாவட்டத்தின் - காலி தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றுள்ளது.

தென் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மொத்தமாக 6 லட்சத்து 99 ஆயிரத்து 408 வாக்குகளை பெற்றுள்ளது.

எனினும் கடந்த 2009ம் ஆண்டு இடம்பெற்ற தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 8 லட்சத்து 4 ஆயிரத்து 71 வாக்குகளைப் பெற்றிருந்தது.

இதன் படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, இந்த முறை 1 லட்சத்து 4 ஆயிரத்து 663 வாக்குகளை இழந்துள்ளது. 

இதேவேளை கடந்த தேர்தலில் 2 லட்சத்து 97 ஆயிரத்து 200 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசிய கட்சி இந்த முறை 3 லட்சத்து 10 ஆயிரத்து 431 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இதன் படி இந்த முறை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 13 ஆயிரத்து 231 வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளது. 

ஜே வி பி கடந்த தேர்தலை காட்டிலும் இந்த முறை 36 ஆயிரத்து 653 வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளது.

கடந்த தேர்தலில் 72 ஆயிரத்து 379 வாக்குகளைப் பெற்ற ஜே வி பி இந்த முறை 1 லட்சத்து 9 ஆயிரத்து 32 வாக்குகளைப் பெற்றுள்ளது.

தென் மாகாண சபையில் புதிதாக போட்டியிட்ட ஜனநாயக கட்சி 75 ஆயிரத்து 532 வாக்குகளைப் இந்த முறை மொத்தமாக பெற்றுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி முன்னணி வகித்து வருவதகாத் தெரிவிக்கப்படுகிறது.
சில தேர்தல் தொகுதிகளில் ஆளும் கட்சி வெற்றியீட்டிய போதிலும்,  கொழும்பு மாவட்டத்திய முக்கிய தொகுதிகளில் ஆளும் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சி பின்தள்ளியுள்ளது.

மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சி மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளினது வாக்குகளும் அதிகரித்துள்ளன.

தெஹிவளை, இரத்மலானை, கொலன்னாவை, அவிசாவலை, கடுவல, கோட்டே, மஹரகம, மொரட்டுவ, ஹோமாகம ஆகிய தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முன்னணி வகிக்கின்றது.

எனினும், கொழும்பு மத்தி,  பொரளை, கொழும்பு மேற்கு,  கொழும்பு கிழக்கு மற்றும் கொழும்பு வடக்கு ஆகிய தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி முன்னணி வகிக்கின்றது.

No comments

Powered by Blogger.