Header Ads



கிழக்கு மாகாணத்தில் அதிபர், ஆசிரியர் தொகை மதிப்பீட்டுப் படிவம்.

(நவாஸ் சௌபி)

கிழக்கு மாகாணப் பாடசாகைளில் 2014 ஆம் ஆண்டுக்கான அதிபர் ஆசிரியர் தொகை மதிப்பீட்டுக்கான  படிவம் மாகாணக் கல்விப் பணிப்பாளரின் பணிப்புரைகளுடன் வலயக் கல்விப் பணிப்பாளர்களிடம் வழங்கப்பட்டிருக்கிறது. 

இதற்கமைய கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களினால் வலயப் பாடசாலை அதிபர்களிடம் 17.03.2014 திங்கட்கிழமை குறிப்பிட்ட படிவங்கள்; ஒப்படைக்கப்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமை அதற்கான அறிவுறுத்தல்களை ஆசிரியர்களுக்கு வழங்கி குறிப்பிட்ட படிவங்களை அதிபர்கள் ஒப்படைத்துள்ளனர்.

ஆசிரியர் பணியில் குறிப்பிட்ட ஒருவரின் வரலாற்றை முழுமையாக அறியும் வகையில் யு-ணு வரையான சகல தரவுகைளயும் உள்ளடக்கியதாக மேற்படி படிவம் 49 வினாக்களுடன் 4 பக்கங்களில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

ஆசிரியர் ஒருவர் தனது பதவிக்காக எத்தகைய விடயங்களை சரியாகவும் முறையாகவும் வைத்திருக்க வேண்டுமோ அத்தனை விடயங்களையும் மேற்படி படிவம் கொண்டிருப்பது சிறப்பானதாகும். ஆசிரியர்கள் பதவியில் இருக்கும் காலங்களில் தங்களது சுயவிபரக் கோவை தொடர்பாக பேணவேண்டிய முக்கிய விடயங்கள் இப்படிவத்தினூடாக கேட்கப்பட்டிருப்பது ஒரு ஆசிரியர் தான் எந்த இடத்தில் இருக்கிறார் என்ற சுய மதிப்பீட்டைச் செய்வதற்கும் அடிப்படையாக அமைந்திருக்கிறது.

மேற்படி படிவத்தினை சிலர் இடமாற்றத்திற்கான தகவல்களை பெறுகின்ற ஒரு படிவமாக நினைத்து அஞ்சுவதாகவும் கதைகள் வெளிவருகின்றன. ஆனால் அதனை அவ்வாறு நோக்க வேண்டிய அவசியமில்லை ஆசிரியர்களுக்கு வலுவூட்டல், ஆசிரயர் பயிற்சி, ஆசிரியர் நலன் வழங்குதல், ஆசிரியர்களை பாடரீதியாக மேம்பாடடையச் செய்தல், ஆசிரியர்களின் பன்புத்தர விருத்தி போன்ற பல்வேறு விடயங்களையும் முன்னெடுப்பதற்கு வேண்டிய தகவல்களே இதில் வேண்டப்பட்டிருக்கின்றன என்பதனையும் அறிய வேண்டும்.

மேலும் குறிப்பிட்ட விண்ணப்ப படிவத்துடன் பின்வரும் 14 ஆவணங்களின் பிரதிகளும் இணைக்கப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது. இவ் ஆவணங்கள் யாவும் ஒரு ஆசிரியருக்கு ஏன் அவசியம் என்ற கேள்விகளும் எழந்துள்ளன. 

01. Letter of First Appointment 
02. Letter of 1st Assumption of Duty 
03. Letter of Last Promotion 
04. Letter of Assumption of Duty on Last Promotion 
05. National Identity Card 
06. Training College Certificate
07. If appointment Subjects Changed, letter of subject change (given by P.D.E)
08. Degree Certificate 
09. Higher Education Qualification Certificate 
10. Residential Certificate – Given by G.S.N Certified by DS
11. Voters list for the year 2013
12. If released – Letter of Release 
13. If on temporary transfer – Letter of Temporary Transfer 
14. If Pregnant – Diagnosis Card issued by M.O.H

விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்களின் உண்மைத் தன்மையை அறியவே மேற்படி பிரதிகள் இணைக்கப்பம்படி கேட்கப்பட்டிருக்கின்றன. இவ் ஆவணங்கள் யாவும் ஒரு ஆசிரியரின் பதவி மற்றும் பதவி உயர்வு அவரது கல்வித் தகைமை தொடர்பானதாகவே கேட்கப்பட்டிருக்கின்றன. இதில் வேறுபட்ட ஆவணங்கள் எதுவும் கேட்கப்படவில்லை.

குறிப்பாக ஒரு ஆசிரியர் தொழில் பெறுகின்ற போது தான் வாழ்ந்த வசிப்பிடத்திலிருந்து திருமணம் காரணமாகவோ, மனைவியின் அல்லது கணவரின் தொழில் காரணமாகவோ இடம் யெர்ந்து இருக்கும் நிலை பெரும்பாலான ஆசிரியர்களுக்கு இருக்கின்றது. அதிகமான ஆசிரியர்கள் வெளி ஊர்களில் திருமணம் முடித்திருக்கின்றார்கள், வெளி ஊர்களுக்குச் சென்று இடம் பெயர்ந்தும் வாழ்கின்றார்கள்  அதனை  உறுதிப்படுத்தவே Residential Certificate  கேட்கப்பட்டிருக்கிறது அதனோடு இணைந்தவாறு Voters list  உம் கேட்கப்பட்டிருக்கிறது.

ஏனெனில் எமது ஆசிரியர்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பாக கூறுகின்ற போது இவ்வாறான விடங்களை வலயக் கல்விப் பணிப்பாளரிடமோ மாகாணக் கல்விப் பணிப்பாளரிடமோ வாய்மொழியாகவே கூறுகின்றார்கள். இவை ஆவணரீதியாக ஆதாரப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் மிக நீண்ட தூரம் பயணித்துப் பாடசாலைக்குச் செல்கின்ற பலர் இருக்கின்றார்கள் இவர்களுக்கான பிரச்சினைகளை ஆராய்வதற்கு அவர்களின் வதிவிடம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் அதன் உண்மைத்தன்மையை வைத்து தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முடியும். 

சிலர் கிழக்கு மாகாணத்தைவிட்டு வெளிமாகாணப் பாடசாலைகளுக்கு விடுகை பெற்றுச் செல்ல வேண்டுமானால் அவ்வாறனவர்கள் நிச்சயம் தங்களது வதிவிடத்தை உறுதிப்படுத்திய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் அதில் மேலே குறிப்பிட்ட Residential Certificate, Voters list ஆகிய இரண்டும் முக்கியமானவை.

அடுத்து  பிரசவ ஆசிரியைகள் Diagnosis Card  ஊடாக தங்களின் பிரசவத் திகதியைக் குறிப்பிடுவதன் மூலம் பாடசாலையிலிருந்து அவர்கள் பிரசவ விடுமுறை பெறுகின்ற காலத்தை தீர்மானித்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.  இன்று கிழக்கு மாகாணத்தில் பெண் ஆசிரியைகள்தான் அதிகம் காணப்படுகின்றார்கள் பிரசவ விடுமுறையில் அதிக ஆசிரியைகள் பாடசாலைக்கு சமூகம் தராத நிலை ஏற்பட்டால் அந்தப் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளை சீரமைப்பதற்கு கட்டயாமாக மேற்படி விபரம் உதவுவதாக இருக்கும். 

எனவே மேற்படி விண்ணப்பப்படிவம் ஆசிரியர் வளத்தினை சீராக மதிப்பிடுவதோடு பாடசாலைகள் ஒவ்வொன்றும் எத்தகைய ஆசிரியர் வளங்களைக் கொண்டுள்ளது என்ற அளவீட்டினையும் செய்து தரமான கல்வியை வழங்க சிறப்பான ஒரு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்பதனை தெளிவுபடுத்துகிறது. இது ஏனைய மாகாணங்களுக்கும் ஒரு முன்உதாரணமாகும். 



No comments

Powered by Blogger.