Header Ads



முன்னாள் சபாநாயகர் முஹம்மத் ''பௌத்த மக்களின் காவலன்'' என்ற பட்டம் பெற்றார் (படங்கள்)


(அஸ்ரப் ஏ. சமத்)

மருதாணை  மகாபோதி விகாரையில்  26-03-2014 ஆம் திகதிவைத்து முன்னாள் சபாநாயகர் எம்.எச். முஹம்மதுவின் அவரது 50 வருட அரசியல் வாழ்வில் கொழும்பில் உள்ள பௌத்த மதத்துக்கும் விகாரைகளுக்கும் தகம் பாசல்களுக்கும் அவர் செய்த சேவையை கௌரவிக்குமுகமாக  'பௌத்த மக்களின் காவலன்' எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ச கலந்து கொண்டார். இந் நிகழ்வில் சப்ரகமுகவ பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேரசிரியர்  கும்புருகமுவே வஜிர தேரர் கலகொட தேரர்,வனகல உபதிஸ்ச தேரர் ஆகிய தேர்கள் தலைமையில்; இந் நிகழ்வு நடைபெற்றது.

பௌத்த மக்களுக்கு செய்த சேவைகளை அவர் உயிருடன் இருக்கும்போது தற்பொழுது முஸ்லீம் ;அரசியல்வாதிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அவர் கொழும்பில் உள்ள சகல பௌத்த விகாரைகளுக்கும் சிங்கள மக்களுக்கும் பாரிய சேவையைச் செய்துள்ளார். 

எம்.எச்.முஹம்மத் அவர்கள் இந்த நாட்டில் உள்ள அரசியல்வாதிகளுக்கெல்லாம் ஒரு உதாரபுருசர் ஆவர். அவர்  ஒருபோதும் முஸ்லீம்களுக்கு பௌத்த மக்கள் பள்ளிவாசல்களை உடைத்தாக ஜெனிவாவுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. 

இந்த நாட்டில் பண்நெடுங்காலமாக ஜக்கியமாக பௌத்தர்களும் முஸ்லீம்கள் வாழ்ந்து வருகின்றனர். மிக விரைவில் பௌத்த முஸ்லீம் இன ஜக்கியத்திற்கான அமைப்பு ஒரு சீரிய வரைபை வரைந்துள்ளேன். அதனை ஜனாதிபதி ஊடாக பொதுமக்களுக்கு முன்வைக்க உள்ளதாகவும் கும்புருவே தேரர் தெரிவித்தார்.  




1 comment:

Powered by Blogger.