புத்தளம் மன்னார் வீதி மூடப்படுவதை தடுக்க பாடுபட வேண்டும்
(முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்)
மன்னார் புத்தளம் வீதி வில்பத்து தேசிய வனத்தை ஊடறுத்துச் செல்கிறது.இவ்வீதி முதன் முதல் கி.பி.892-992 வரை வாழ்ந்த ஈரான் தேசத்தின் சீராஸ் பகுதியைச் சேர்ந்த செய்கு அபு அப்துல்லா பின் ஹபீப் என்பவரின் தலைமையிலான குழுவினரால் காடுகளை வெட்டி அமைக்கப்பட்டது. இவ்வீதி அமைக்கப்பட்டதன் நோக்கம் அரிப்பு,குதிரைமலை,சிலாவத்துறை போன்ற பகுதிகளுக்கு வரும் முஸ்லிம் யாத்திரீகர்கள் பாவா ஆதமலை எனப்படும்.(அடம்ஸ் பீக் )மலையைத் தரிசரிக்கச் செல்வதற்காகவே ஆகும்.காலிக்கு வருகை தந்த முஸ்லிம் யாத்திரிகர்கள் புயல் காரணமாக குதிரை மலை போன்ற பகுதிகளில் தரையிறங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.இப்னு பதூதா எனப்படும்.மொரோக்கோ தேச சஞ்சாரியும் இவ்வீதியூடாகவே சென்றே பாவா ஆதமலையைத் தரிசித்துள்ளார் .
இவ்வீதி அமைப்புப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை யானைக் கூட்டம் வருகை தந்து சூபி மகானைத்தவிர ஏனையவர்களை கொன்று விட்டது.இவ்வேளை இம்மகான் மரம் ஒன்றில் ஏறிய பின் இருகரம் ஏந்தி இறைவனிடம் உதவி கோரியுள்ளார்.இறையருளால் ஒரு பெரிய தனி ஆண் யானை வருகை தந்து ஏனைய யானைகளை விரட்டி விட்டு மகானை முதுகில் ஏற்றிக் கொண்டு புத்தளத்தில் இறக்கி விட்டது.இக்காட்சியை நேரில் கண்ட பலர் இஸ்லாத்தில் இணைந்து விட்டனர்.
பின்னர் இவ்வீதி ஆங்கிலேயரால் நன்கு பயன்படுத்தப்பட்டது.1936ல் வில்பத்து வன விலங்குகளின் நன்மை கருதி வீதி மூடப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்னர் இவ்வீதி போக்குவரத்திற்கு உழவு இயந்திரங்கள்,கென்டர் ரக வாகனங்கள் மாட்டுவண்டிகள் போன்றவற்றிட்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.பாலங்கள் உடைந்து கிடந்தமை ,வீதிகள் பாராமரிப்பற்றுக்கிடந்தமை போன்ற காரணங்களால் ஏனைய வாகனங்கள் இவ்வீதியால் செல்லவில்லை.1985 ம் ஆண்டுவரை இவ்வீதியை முசலிப்பிரதேச மக்கள் தாராளமாக பயன்படுத்தி வந்தனர். ஆதற்குப் பின்னரே பாதுகாப்புக் காரணங்களை மையமாக கொண்டு வீதி மூடப்பட்டது.
இவ்வீதி கடற்கரையில் இருந்து 3கிலோ.மீ.; தூரத்திலே அமைந்துள்ளது.புத்தள மாவட்ட கலா ஓயா ஆற்றில் இருந்து மன்னார் மாவட்ட உப்பாறு வரையான 30 கிலோ.மீ. பாதை வில்பத்து தேசிய வனத்தை ஊடறுத்துச் செல்கிறது.இவ்வீதி 24.01.2010 ல் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் பெருமுயற்சியால் ,பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.இவ்வீதி வடமாகாணத்திற்கான ஒரு கரையேரப் பாதையாக இனம் காணப்பட்டது.இத்திட்டத்தின் அடிப்படையிலேயே ,அரிப்புத் துறைமுகப் பாலமும் ,சங்குப்பிட்டிப்பாலமும் புதிதாக அமைத்து திறந்து வைக்கப்பட்டது. ஒரு நாட்டின் அபிவிருத்தியைத் தீர்மானிப்பதில் போக்குவரத்து வலையமைப்பு முக்கிய பங்கை வகிக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டே அதிவேகப் பாதைகளும் ,புதிய பாதைகளும் அமைக்கப்படுகின்றன.
பி.379 பெயரைக் கொண்ட இவ்வீதி புனரமைப்பு நடவடிக்கை வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் கேள்வி கோரப்பட்டு பல தரப்பட்ட இழுத்தடிப்புகளுக்குப் பின்னர் மாகா,மெகா போன்ற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு புத்தளம் இலவங்குள வீதியும் மன்னார் மறிச்சுக்கட்டி வீதியும் சிறப்பாக காபட் வீதிகளாக மாற்றப்பட்டுள்ளன.ஆனால் வில்பத்தை ஊடறுத்துவரும் 30 கிலோ.மீ. வீதியையும் ,அங்குள்ள பாலங்களையும் திருத்தியமைப்பதற்கான முயற்சிகளை தடுக்கும் நோக்கில் சூழலியலாளர் குழு எனப்படும் ஒரு இனக்குழு உயர் நீதி மன்றில் வழக்கை தாக்கல் செய்து தடுத்துள்ளது.இலங்கையில் பல இடங்களில் போக்குவரத்தைச் சீர்ப்படுத்துவதற்காகவும் ,ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவும் காடுகள் அழிக்கப்படுவது நாம் அறியாத விடயமல்ல.இவற்றையெல்லாம் எதிர்க்காதவர்கள் புத்தளம் மன்னார் மாவட்டங்களின் தொப்புள் கொடி உறவான பாதையை ஏன் தடுக்க முனைகின்றனர்.
புத்தளத்தில் இருந்து வடபுல பூர்வீக முஸ்லிம்கள் தமது மண்ணிற்குச் செல்வதற்கு அனுராதபுர மதவாச்சி பாதையை பயன்படுத்தினால் 6 மணித்தியாலத்தையும் பல நூறு ரூபாய்களையும் செலவு செய்ய வேண்டி உள்ளது. தூரம் 235கி.மீ. ஆனால் புத்தளம் இருந்து மறிச்சுக்கட்டி செய்வோர் 77.கி.மீ. 2.30 மணித்தியாளத்திற்கு குறைந்த போக்குவரத்துச் செலவில் சென்று வரலாம். இதனால் வறிய குடும்பத்தினர்,வயோதிபர்கள் ,கர்ப்பிணித்தாய்மார்கள் ,விவசாயிகள் ,சிறுவர்கள் போன்றோர் பெரும் நன்மை அடைகின்றனர் .பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வீண் பணவிரயத்தை தடுத்து அவற்றைச் சேமிக்கலாம். மழை பெய்கின்ற காலத்தில் புத்தளம் மன்னார் வீதியில் சிறிய ஒடுங்கிய பாலத்தின் (கலா ஓயா) மேலால் நீர் செல்வதால் இவ்வீதி மூடப்படுவது தொடர் கதையாகிவிட்டது. புலிகளால் வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு இவ்வீதி பெரிதும் உதவுகிறது.
மீளக்குடியேற உந்து சக்தியாகத் திகழும் புத்தளம் மன்னார் வீதி ஏன் சிறப்பாக புணரமைக்கப்பட்டு தொடர்ந்து திறந்து வைக்கப்பட வேண்டும்.என வடபுல தமிழ் ,முஸ்லிம் மக்கள் விரும்புகின்றனர்.
À தென்னிலங்கையுடன் வடமாகாணத்தை இணைக்கும் மாற்றுக் கரையோரப் பாதை
À போக்குவரத்துச் செலவு குறைவு என்பதால்
À போக்குவரத்து நேரமும் ,தூரமும் குறைவு
À மீளக்கடியேறிய முஸ்லிம்கள் தமது உறவுகளுடனான தொடர்பை இலகுவாகப் பேணலாம் என்பதால்
À தாம் மீளக்குடியேறிய பகுதிகளில் உயர்தர கல்வியை கற்க போதிய வசதிகள் போதாமையால் புத்தளம் சென்று கற்கும் இலகு வாய்ப்பு
À விவசாயிகள் தமது பொருட்களை இலகுவாக சந்தைப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால்
À தலைநகருக்கும் சென்று விரைவாகக் கடமைகளை முடிக்கும் வாய்ப்பு
À தொழில் விடயமாக அயல் மாவட்டத்திற்குச் சென்று பணிபுரிந்து மீளத்திரும்பும் வாய்ப்பு
À நடமாடும் சுதந்திரம் தமக்கு கிடைக்கும் என்பதால்
À வடமாகாணத்தை நோக்கி உல்லாசப் பயணத்துறையையும் இவ்வீதி இலகுபடுத்தும் என்பதால்
À மடுமாதா தேவாலயம் செல்லும் யாத்திரீயர்களுக்கான சிறந்த துரிதப்பாதை என்பது
À திருக்கேதீஸ்வர ஆலயத்தை தரிசிக்க வரும் மக்களுக்கு இலகுவாக இருக்கின்றமை
À மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளம் ,கரடிக்குழி,பாலைக்குழி ,மறிச்சுக்கட்டி என்பன புத்தள மாவட்டத்திற்கு மிகவும் அண்மையில் உள்ள கிராமங்கள் என்பதால்
À முசலிப்பிரதேசத்தில் பிடிக்கப்படும் கடல் உணவுகள் விரைவாக தென்பகுதிக்குக் கொண்டு செல்லலாம்.
À கொண்டச்சி கஜுபாம் அறுவடை பொருட்களையும் விரைவில் ஏற்றுமதி செய்ய இப்பாதையைப் பயன்படுத்தலாம்.
À இப்பிரதேச மக்கள் ஜனாதிபதி தேர்தலிலும் ,பாராளுமன்ற தேர்தலலும் ,மாகாண சபைத் தேர்தலிலும் ,பிரதேச சபைத்தேர்தலிலும் அரசையும் ,அரசின் பங்களிப்பு கட்சிகளையும் பலமாக ஆதரித்தமை
À புத்தளத்தில் இருக்கும் தமது சொத்துக்களை பாதுகாத்தல் ,பராமரித்தல் போன்றவற்றிக்கு இப்பாதை பயன்படல்
இப்பாதையில் பயணிக்கும் வாகனங்களால் மிருகங்களுக்கோ மிருகங்களால் பயணிகளுக்கோ எவ்வித பாதிப்புகள் இடம் பெற்றதாகப் பதிவுகள் இல்லை .அதற்கான பிரதான காரணம் விலங்குகள் வீதியை கடக்கும் நேரங்களைத் தவிர்த்தே வாகன போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகின்றன.வாகனத்தின் வேகம் 40 கி.மீ. ஆக மட்டுப்படுத்தப்பட்டதுடன் ,வீதியின் இரு மருங்கிலும் கடற்படையினர் காவலில் ஈடுபட்டுள்ளனர்.விதியின் இருமருங்கும் வெட்டவெளியாக இருப்பதனால் அவதானமாக பயணிக்க முடிகிறது.
இலங்கையின் பல பிரதேசங்களிலும் அபிவிருத்திக்காக காடுகள் அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.இவையெல்லாம் சூழலியல் ஆர்வலர்களின் கண்ணுக்குப் புலப்படவில்லை.வில்பத்து வனத்தின் ஊடான 30கி.மீ. மட்டும் எப்படி இவர்களின் கண்ணுக்குத் தெரிகிறது.சூழலியல் நோக்கா? பிரதேசவாதமா?
இவ்வீதியை மூடப்படாமல் பாதுகாக்கும் பொறுப்பு வடமாகாணத்தைச் சேரந்த அமைச்சர் றிசாத் பதியுதீனதும்,வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களதும்,வடமாகாண மாகாண சபை உறுப்பினர்களினதும் முசலிப்பிரதேச சபையினதும் பொறுப்பாகும்.இம்மக்கள் அரசுக்கு பக்கபலமாக செயற்பட்டவர்கள் ஆகவே,இப்பிரச்சினையை ஜனாதிபதி அவர்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு சென்று சமுமாகத் தீர்க்க வேண்டும்.என இப்பிரதேச மக்கள் விரும்புகின்றனர்.
இனித்தவிர்க்க முடியாது வில்பத்து ஊடாக 30கி.மீ. வீதியை அனுமதிக்க முடியாது.என்ற நிலை ஏற்படின் அதற்கு மாற்று வழியாக பின்வருவனவற்றில் ஒன்றை தெரிவு செய்யலாம்.
01.மேம்பாலமூடாக அதிவேக பாதை உருவாக்கலாம்
02. 30 கி.மீ. வீதியை கடற்கரையேராக கொண்டு சென்று பிரதான வீதியுடன் இணைக்கலாம.;


Post a Comment