Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்கள் காணாமல் போன தமது உறவுகள் குறித்து முறையிட வேண்டும்..!

காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியங்களை யாழ் முஸ்லீம்கள் பதிவு செய்ய ஆர்வமிழந்து காணப்படுவதாக யாழ் மாநகர சபை உறுப்பினர் பி.எஸ். சுபியான் மௌலவி தெரிவித்தார்.

எதிர்வரும்  14.2.2014 திகதி முதல்  யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ஆணைக்குழு சாட்சியங்களை பதிவுசெய்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ள நிலையில் அது குறித்த மெற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

 யாழ்ப்பாணத்தில்  எதிர்வரும் பெப்ரவரி 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை காணாமல்போனவர்களின் உறவினர்கள் தகவல்கள்இ சாட்சியங்களை வழங்க முடியுமென ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது. காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமையஇ வடக்குஇ கிழக்கில் 6இ500 பேர் காணாமற்போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் கடந்த காலங்களில் கிழக்க,வட மாகாணத்தின் கிளிநொச்சி  மாவட்டத்திலும் விசாரணைஇடம்பெற்றன.

இதன் போது கிழக்கில் அதிகளவான மக்கள் ஆணைக்கழுவிடம் ஆர்வத்தடன் சென்று சாட்சியமளித்ததை ஊடகங்களின் வாயிலாக அறிய முடிந்தது.
 தற்போது யாழ்ப்பாணத்திலும் விசாரணைகள் ஆரம்பமாக உள்ள நிலையில் இத குறித்து யாழ் முஸ்லீம்களுக்கு ஒரு தெளிவின்மை காணப்படுகின்றது.
காரணம் இங்கள்ள பல அமைப்பகள் மக்களை சரியாக வழிநடத்த தவறியுள்ளன.

கிழக்க மாகாணத்தில் சுமார் 5000க்கம் மெற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற காரணம் அங்கு உள்ள பொது அமைப்பக்கள்,பள்ளிவாசல் போன்றவற்றின் விழிப்பூட்டல்களாகும்.

ஆனால் யாழில் அவ்வாறல்ல.

பல்வேறு நபர்கள் தங்களின் சுயநலத்திற்காக பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தி மக்களை திசைதிருப்பமுயல்கின்றனர்.

இவ்வாறே தான் இவ்விசாரணை நிகழ்வினையும் கூறி மக்களை  அதில் பங்கபற்ற விடாது தடக்கின்றனர்.இது தவிர்க்கப்பட வேண்டும்.

பொதுமக்கள் இவ்விசாரணை நிகழ்வில் கலந்து கொண்டு யாழ் முஸ்லீம்களுக்கு நடந்த அநியாயங்களை கூறி வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் தான் எம்மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் நியாயம் கிடைக்கம் என மௌலவி பி.எஸ் எம் சுபியான் தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.
(பா.சிகான்)

No comments

Powered by Blogger.