Header Ads



காணாமல் போன வடபுல முஸ்லிம்கள் பற்றி ஆராய விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும்


(அபூ தனா)

வடமாகாணத்தில் காணமால் போன முஸ்லிம்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 1991ற்கு முன்பு யாழ்ப்பாணம் ,மன்னார் ,வவுனியா ,முல்லைத்தீவு ,கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் பல முஸ்லிம்கள் கடத்தப்பட்டுள்ளனர்.இவர்கட்கு என்ன நடைபெற்றுள்ளது. என்பதை 2009 வரை அறிய முடியாமல் மர்மமாக இருந்தது. இவர்கள் அநியாயமாகக் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருந்தால் அவ் இடங்கள் இனங்கானப்பட்டு அடையாளங்காணப்பட்ட பின்னர் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட வேண்டும்.

இறந்தமை நிரூபிக்கப்பட்டால் அவர்களின் குடும்பத்தாரிடம் உரிய மரணச்சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். இதனை அடிப்படையாகக் கொண்டு உரிய நஷ்டஈடுகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். 

முஸ்லிம் வாலிபர்கள் ,முற்போக்கு சிந்தனை உள்ளோர் , உயர் கல்வி கற்றோர் ,செல்வந்தர்கள் ,சிறுவர்கள் ,மாற்றியக்கங்களில் இருந்து ஜனநாயக வழிக்கு திரும்பியோர் போன்றோர் பயணத்தின் போது ,வீட்டில் இருந்த போது , வைத்திய சாலையில் நோயாளியாக இருந்த போது வியாபாரத்தின் போது , கூட்டத்திற்கு அழைத்த போது ,கப்பம் செலுத்த மறுத்த போது கடத்தப்பட்டு உள்ளனர்.

இவர்களை விடுவிப்பதற்காக உறவினர்கள் எடுத்த எந்த ஒரு முயற்சியும் பயன்தரவில்லை.2009 வரை கடத்தப்பட்டோர்கள் என்றாவது ஒரு நாள் விடுவிக்கப்பட்டு எம்மோடு வந்து சேர்வார்கள் என்ற நம்பிக்கை தகர்த்து எறியப்பட்டுள்ளது. 

இவ்விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ,புத்தீஜீவிகள் , சட்டத்தரனிகள் போன்றோர் அழுத்தங்களை கொடுத்து காணாமல் போன வடபுல முஸ்லிம்களைப் பற்றி விசாரித்தறிய ஆணைக்குழு ஒன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.          

No comments

Powered by Blogger.